Monday, August 6, 2012

பிறந்த நாள் பரிசு

முன்னொரு காலத்தில், long long ago… so long ago… நானும் ஒரு குட்டிப் பிள்ளையா இருந்தேன். (அட, நெசம்ம்ம்மாத்தாங்க!). அப்ப, வருஷா வருஷம் பிறந்த நாள், பிறந்த நாள்னு ஒண்ணு வரும். பிறந்த நாள்னா கண்டிப்பா புத்தாடை இருக்கும். காலையில் எழுந்து தலைக்குக் குளிச்சு, புதுசு போட்டுக்கிட்டு சாமி கும்பிடுவோம். பிறகு ஒரு தட்டுல நெறய்ய்ய சாக்லேட் எடுத்துக்கிட்டு பக்கத்து வீடு, அதுக்கும் பக்கத்து வீடு, எதிர் வீடு, அதுக்கும் எதிர் வீடு, இப்படி வீடு வீடா போயி, “எனக்கு பிறந்த நாள். மிட்டாய் எடுத்துக்கோங்க” ன்னு சொல்லுவோம். (அப்பல்லாம் மிட்டாய்னாலும், சாக்லேட்னாலும், எல்லாம் ஒண்ணுதான். இப்பல்லாம் சாக்லேட்னா வேற, மிட்டாய்(candy) ன்னா வேறயாம்!) பெரியவங்களா இருந்தா காலில் விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்குவோம். “புது ட்ரஸ்ஸா? அழகா இருக்கே!”ன்னு சொல்வாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கும்! கூடவே, “நல்லாப் படிச்சு முதல் ராங்க் வரணும்”, அப்படின்னுதான் முக்கால்வாசி பேர் ஆசீர்வாதம் பண்ணுவாங்க!

சில சமயம் சாக்லேட்டுக்கு பதில் அம்மாவே ஏதாவது இனிப்பு செய்து தருவாங்க. அதைக் கொண்டு போய் எல்லாருக்கும் கொடுப்போம். பிறகு கோவிலுக்குப் போவோம். அப்புறம் அம்மா நமக்குப் பிடிச்சதாப் பார்த்து சாப்பிட செய்து கொடுப்பாங்க. ஏதாவது குட்டியா தப்பு செய்தாக் கூட யாரும் திட்ட மாட்டாங்க. அப்படியே திட்டினாலும், அம்மா, “பிறந்த நாளும் அதுவுமா புள்ளைய ஒண்ணும் சொல்லாதீங்க”, அப்படின்னு தடையுத்தரவு போட்டுருவாங்க! நம்மையும் எதுக்கும் வருத்தப்படவோ, கோபப்படவோ விட மாட்டாங்க. “இன்றைக்கு உனக்கு பிறந்த நாள். சந்தோஷமா இருக்கணும்”, அப்படின்னு நினைவு படுத்துவாங்க. ஆக மொத்தம், அன்றைக்கு பூரா நமக்கு ஸ்பெஷல் கவனிப்பு கிடைக்கும்.

பிறந்தா நாள்னாலே தரையில் கால் பாவாத பெருமையா இருக்கும். ஒண்ணுமே பண்ணாமயே, ஆனா என்னவோ பெரீசா சாதிச்சிட்ட மாதிரி ஒரு ச்செல்ல கர்வம்! ஹ்ம்… பிறந்து, வந்து, வளர்ந்து, இந்த உலகத்தில் ஒவ்வொரு வருஷமும் வாழறதே, survive பண்ணறதே, சாதனைதான்னு இப்பதானே புரியுது!

அதுக்கப்புறம் பிறந்த நாள் கொண்டாட்டம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சி, ‘0’ வாயிருச்சு. யாராவது ஒரு சிலர் நினைவு வச்சுக்கிட்டு வாழ்த்து சொன்னாலே பெரிய விஷயம், பெரிய சந்தோஷம் என்கிற அளவு! இப்பல்லாம் பிறந்த நாள், அப்படின்னு சொல்லிக்கிறதும் இல்ல. யாராச்சும் மறந்து போயிட்டாங்கன்னா, ‘நீங்க என்னை வாழ்த்தவே இல்லையே’ன்னு கோவிச்சுக்கிறதும் இல்லை! (எவ்ளோ சமர்த்தாயிட்டேன் பாருங்க!) யாராவது சொல்ற வரை எனக்கே மறந்து போன பிறந்த நாட்களும் உண்டு.


இந்த வருஷம் என்னமோ என் பிறந்த நாளை (போன வாரம்) நானே ரொம்பத்தான் கொண்டாடினேன். அதாவது காலைலயே கோவிலுக்குப் போனேன். (அதுவே பெரிய்ய கொண்டாட்டம்தான்!) ஆனா அர்ச்சகர் ரொம்ப பிசியா இருந்தார், அதனால தீபமோ, தீர்த்தமோ ஒண்ணும் கிடைக்கல. சின்னூண்டு ஏமாற்றம்தான். அம்மாகிட்ட போய் ஒரு டீல், ‘உன்னைத் தேடி வந்தேன், ஒண்ணுமே குடுக்கலையே நீ எனக்கு? உனக்கு என் மேல அன்பிருந்தா அதை எப்படியாச்சும் எனக்குக் காட்டு’ அப்படின்னு.

என் பெற்றோர், தங்கைகள், தோழிகள், எல்லோருமே தொலை பேசி வாழ்த்தினாங்க. யாருமே மறக்கலை, இந்த முறை! சாயந்திரம் நடன வகுப்பு இருந்தது. 7, 8 வயசு பிள்ளைங்களோடது. எதற்கோ பேச்சு வந்த போது, ஒரு குட்டிப் பொண்ணு, “என் அம்மாவுக்கு ஆகஸ்ட் 15 பிறந்த நாள்”, அப்படின்னு சொன்னா. உடனே நானும் யோசிக்காம சின்னப் பிள்ளை மாதிரி, “அப்படியா. எனக்குக் கூட இன்னிக்குதான் பிறந்த நாளாக்கும்”னு சொன்னேன்! அப்புறம் கொஞ்ச நேரம் அவங்கவங்க பிறந்த நாள் எப்பன்னு பேசிட்டு, வகுப்பில் ஆழ்ந்துட்டோம்.

வகுப்பு முடிஞ்ச பிறகு எல்லோருடைய வீட்டுப் பாட புத்தகத்தையும் பார்த்தேன். அதில் இரண்டு பிள்ளைங்க, அவங்க புத்தகத்தில் “Happy Birthday!”ன்னு, எழுதி வெச்சிருந்தாங்க! நான் மற்றவங்க புத்தகத்தைப் பார்க்கும் போது இவங்க எழுதி இருக்காங்க! சந்தோஷமா இருந்தது. நான் நன்றி சொன்ன போது, “முதல்லேயே தெரிஞ்சிருந்தா உங்களுக்காக நாங்க ஏதாவது செய்திருப்போம்”, அப்படின்னு சொன்னா, ஒரு பெரிய மனுஷி!

எல்லாம் பார்த்து முடிச்ச பிறகு, பிள்ளைங்க திடீர்னு ஒருத்தரை ஒருத்தர் பார்த்து, ஏதோ கண் ஜாடை காட்டிக்கிட்டாங்க. ஒரு பொண்ணு, “1…2…3…!” அப்படின்னு சொன்னா. உடனே எல்லோரும் சேர்ந்து “Happy Birthday to you” அப்படின்னு பிறந்த நாள் வாழ்த்துப் பாடலைப் பாட ஆரம்பிச்சிட்டாங்க! “Happy Birthday to you... chaa..chaa..chaa…” அப்படின்னு நடுவில் வாயாலேயே music effect வேற!

அப்பாடி! அந்த நிமிஷத்தில் ஏற்பட்ட எதிர்பாராத சந்தோஷத்தையும் நெகிழ்வையும், அனுபவிச்ச அன்பையும் வார்த்தைகளால் சொல்வது கஷ்டம். யாரும் சொல்லிக் கொடுக்காம, தானா மனசில் தோணி, அன்பை இந்த மாதிரி வெளிப்படுத்திய அந்தக் குட்டீஸையும், அந்த நாளையும் மறக்க முடியாது.

இப்பேற்பட்ட அழகான தருணத்தில் மறக்காம என் மனசுக்குள் வந்து சிரிச்சது யார்னு நினைக்கிறீங்க? நான் டீல் போட்டேனே, சாக்ஷாத் அவளேதான்!

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

20 comments:

  1. அன்னையின் அன்பூறும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்-க்கா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கண்ணா!

      Delete
  2. தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள். என்னோட பிறந்த நாளை எனக்கு நினைவு தெரிஞ்சு இணையத்துக்கு நான் வந்த முதல் வருஷம் தான் வ.வா.சங்கம் மூலமாக் கொண்டாடினேன். அப்போ 54 வயசு ஆகி இருந்தது. அப்போத்தான் முதல் முதலாக வாழ்த்துகளும் பெற்றுக் கொண்டேன். எங்க குழந்தைங்க மட்டும் எப்போவும் சொல்வாங்க. 2006 ஆம் வருஷம் வரைக்கும் எங்க குழந்தைகளுக்கு மட்டும் தெரிஞ்சதாக இருந்த என்னோட பிறந்த நாள் அந்த வருஷத்திலிருந்து எல்லாரும் வாழ்த்துச் சொல்லும்படியா நடந்துட்டு வருது. :)))))))

    மீண்டும் தாமதமான பிறந்த நாள்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்க பிறந்த நாள் என்றைக்கு கீதாம்மா?
      அன்பான வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் மிக்க நன்றி அம்மா!

      Delete
  3. கவிதாயினி கவி நயாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதாக இருந்தால்
    ஒவ்வொரு நாளுமே சொல்லவேண்டும்.

    அன்னையைப் போற்றிப் பாடும் ஒவ்வொரு நாளுமே
    அவள் தான் எமக்கு எல்லாம் எனக்குப் புரிந்த ஒவ்வொரு நாளுமே
    புதிதெனப் பிறந்த நாள்.

    வாழ்த்துக்கள். ஆசிகள்.
    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
    Replies
    1. //அன்னையைப் போற்றிப் பாடும் ஒவ்வொரு நாளுமே
      அவள் தான் எமக்கு எல்லாம் எனக்குப் புரிந்த ஒவ்வொரு நாளுமே
      புதிதெனப் பிறந்த நாள்.//

      நன்றாகச் சொன்னீர்கள் தாத்தா.

      //வாழ்த்துக்கள். ஆசிகள்.//

      வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் மிகவும் நன்றி தாத்தா.

      Delete
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)

    பிறந்த நாள்
    பிறந்த நாள்
    பிள்ளைகள் போலே
    நாம் தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் :)

    அந்தக் குழந்தைகளின் செய்கை மிக அருமை.

    நடன வகுப்புக்கும் நோட்டுப் புத்தகமா? ரொம்பவே கண்டிப்பான டீச்சரா இருப்பீங்களோ? :)

    ReplyDelete
    Replies
    1. //இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)//

      நன்றி ஜிரா!

      //பிறந்த நாள்
      பிறந்த நாள்
      பிள்ளைகள் போலே
      நாம் தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் :)//

      இந்தப் பதிவிற்கு தலைப்பு பற்றி யோசிச்சபோது இந்தப் பாட்டுதான் உள்ள ஓடிக்கிட்டிருந்தது :) (ஒண்ணும் உருப்படியா தோணலைகன்னு புரிஞ்சிருக்குமே? :)

      //அந்தக் குழந்தைகளின் செய்கை மிக அருமை.//

      ஆமால்ல? :)

      //நடன வகுப்புக்கும் நோட்டுப் புத்தகமா? ரொம்பவே கண்டிப்பான டீச்சரா இருப்பீங்களோ? :)//

      good observation :) ஆனா நான் கண்டிப்பா இருக்க மாட்டேங்கிறேன்னுதான் நிறைய பெற்றோர்களுக்குக் குறை. நோட்டு புத்தகம் சின்னப் பிள்ளைங்களுக்கு மட்டும்தான். அவங்களுக்கு regular-ஆ பயிற்சி செய்யற பழக்கம் வரதுக்காக.

      Delete
  5. கொஞ்சம் தாமசம் ஆகிடுச்சி...அக்காவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் (கடைசி வரைக்கும் தேதி சொல்லவேல்லியே);-))

    இதை எல்லாம் கண்டிப்பாக பதிவு பண்ணி வச்சிக்கனும்..மகிழ்ச்சியான பகிர்வு பதிவு ;)

    ReplyDelete
    Replies
    1. //கொஞ்சம் தாமசம் ஆகிடுச்சி...அக்காவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

      மிகவும் நன்றி தம்பீ! :)

      (கடைசி வரைக்கும் தேதி சொல்லவேல்லியே ;-))
      தேதி மட்டும் தானே! தாராளமா சொல்லலாமே! ஆடி 18 :)

      //இதை எல்லாம் கண்டிப்பாக பதிவு பண்ணி வச்சிக்கனும்..மகிழ்ச்சியான பகிர்வு பதிவு ;)//

      உண்மைதான். இப்படி ஒண்ணு எதிர்பாராம நடந்ததாலதான் இந்தப் பதிவு. இல்லைன்னா பி.நாளுக்கெல்லாம் பதிவிட்டிருக்க மாட்டேன் :) மகிழ்ச்சி குறித்து மகிழ்ச்சி கோபி :)

      Delete
  6. Migavum magilchi adainthen.miga arumaiyana pagirvu.
    Natarajan.

    ReplyDelete
  7. "பூந்தமிழ்ச்சொற்கள் பறித்து,

    பாமாலை பல தொடுத்து,

    ஆதித்தாயை அலங்கரித்து,

    ஆனந்தமாய் வாழ்க!வாழ்க!"


    என்று சற்று தாமதமாய் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுவது

    லலிதாம்மா.

    ReplyDelete
    Replies
    1. அழகான, எனக்குப் பிடித்த மாதிரியான வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி லலிதாம்மா :)

      Delete
  8. //கவிதாயினி கவி நயாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதாக இருந்தால்
    ஒவ்வொரு நாளுமே சொல்லவேண்டும்// :))) happy birthday madam! :)

    ReplyDelete
    Replies
    1. madam! உதை கிடைக்கும் தக்குடு! :) ரொம்ம்ம்ம்ப நாள் கழிச்சு இந்த உலகத்துக்கு வந்திருக்கீங்க! Welcome back! வாழ்த்துகளுக்கு நன்றி :)

      Delete
  9. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    (தாமதமாக)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, திகழ்!

      Delete
  10. மிகவும் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    தம்பியின் திருமணம் வரும் திங்களன்று
    அதனால் சில நாட்களாக பதிவுலகம் பக்கம் வரமுடியவில்லை.
    நல்ல பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வேலைகளுக்கிடையிலும் வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி தானைத் தலைவி!

      தம்பியின் திருமணம் நல்லபடியாக நடக்கவும், புதுமணத் தம்பதியரின் வாழ்வு ஒரு மனதாகச் சிறக்கவும், என்னுடைய அன்பான வாழ்த்துகள்!

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)