Tuesday, August 14, 2012

எங்கள் இந்தியா!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்! 


எங்கள் நாடு இந்தியா!
தங்க நாடு இந்தியா!
எங்கள் நாடு இந்தியா! – இன்பம்
தங்கும் நாடு இந்தியா!

இந்தியர் நாம் என்பதிலே
இன்பம் மிகக் கொள்ளுவோம்!
இந்தியராய் வாழ்ந்து நல்ல
இதயங்களை வெல்லுவோம்!

கடமைகளைச் செய்வதிலே
பெருமை மிகக் கொள்ளுவோம்!
கொடுமைகளை வேரறுத்து
சிறுமைகளை வெல்லுவோம்!

நல்லொழுக்கம் நம்முடைய
விழிகளெனப் போற்றுவோம்!
நற்குணங்களை வளர்த்து
நன்மைகளைக் கூட்டுவோம்!

சுத்தம் சுகா தாரமென்னும்
சூத்திரத்தை எண்ணுவோம்!
சுற்றும் பூமித் தாயைக் காக்க
சுற்றுச் சூழல் பேணுவோம்!

அன்பு என்னும் வேதந்தன்னை
அகிலமெங்கும் பரப்புவோம்!
அன்னை பாரதத்தை என்றும்
அருமையுடன் ஏற்றுவோம்!

எங்கள் நாடு இந்தியா!
தங்க நாடு இந்தியா!
எங்கள் நாடு இந்தியா! – இன்பம்
தங்கும் நாடு இந்தியா!


--கவிநயா

நன்றி: வல்லமை
படத்திற்கு நன்றி: http://www.indiacsr.in/en/?p=3795/

4 comments:

  1. அன்னை பாரதத்தைப் போற்றும் அருமையான பாடல். இனிய சுதந்திர தின வாழ்த்துகள் கவிநயா!

    ReplyDelete
  2. நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  3. மனம் நிறைந்த சுதந்திர திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தானைத் தலைவி!

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)