Sunday, August 19, 2012

எமிலி டிக்கின்ஸனின் "Hope" கவிதையின் மொழியாக்கம்




நம்பிக்கை

நம்பிக்கை என்பது
சிறகுகளுடன் கூடியது…
அது -
ஆன்மாவைத் தன்னுடைய
உறைவிடமாய்க் கொண்டிருக்கும்;
கணங்கூட இடைவெளி யின்றி
மொழியில்லா கானம் பாடும்.

இடி மின்னல் பெரு மழையும்
தரும் வலியைத் தாங்கிய படி
பலருக்கும் நிழல் தந்த
அந்தச் சின்னஞ்சிறு பறவை,
தன்னையே அழிக்க வரும்
புயற் காற்றின் நடுவினிலும்
இனிய கீதம் இசைத்திருக்கும்!

கடுங் குளிர் பிரதேசத்தில்
அதன் குரலைக் கேட்டதுண்டு;
தனிமையான கடல் நடுவே
அதன் பாடல் கேட்டதுண்டு;
எனினும்,
துயரங்கள் எல்லை மீறும் நேரங்களிலும்,
பிரதியாக அது என்னைத்
துகள் உணவும் கேட்டதில்லை!

--கவிநயா

Hope
 By: Emily Dickinson 

“Hope” is the thing with feathers
That perches in the soul
And sings the tune without the words
And never stops at all,


And sweetest in the gale is heard;
And sore must be the storm
That could abash the little bird
That kept so many warm.


I’ve heard it in the chillest land
And on the strangest sea,
Yet never, in extremity,
It asked a crumb of me.

நன்றி: வல்லமை.
2010-ல் எழுதிய நம்பிக்கை பற்றிய கவிதையையும் இங்கே படிச்சுப் பாருங்க!

5 comments:

  1. அருமையான மொழியாக்கம், கவிநயா.

    ReplyDelete
  2. நம்பிக்கை சிறகு அணிந்த Emily Dickinson அவர்களின் சிறப்பான கவிதை.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்மா!

      Delete
  3. பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...

    சிறப்பான வரிகள்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு.தனபாலன்!

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)