வாழுகிறாள்; ஆனால் வாடுகிறாள்
பாடுகிறாள்; அதிலும் வாடுகிறாள்
நாடுகிறாள்; அவனைத் தேடுகிறாள்
தேடுகிறாள்; மீண்டும் வாடுகிறாள்
இந்தப் பெண்ணின் சோகம்தான் என்னே.
கனவிலேயே நிலைத்திருக்கும் கண்கள்.
அவன் நினைவிலேயே நிலைத்திருக்கும்
நெஞ்சம்.
அவன் மணத்தையே சுவாசிக்கும் நாசி.
அவன் சுவையிலேயே கனிந்திருக்கும்
இதழ்கள்.
இந்தப் பெண்ணின் உலகமே வேறு.
ஆடியிலும் அவன் வதனம்.
பாடி வரும் அவன் வேய்ங்குழல்.
தொடுத்து வந்த மாலையை அவள் கரங்களாலேயே
எடுத்துச் சூடிக் கொள்ளும் அவன்
தோள்கள்.
இந்தப் பெண்ணின் நல்லூழ்தான்
என்னே.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
--கவிநயா
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே !
ReplyDeleteவாங்க, தானைத் தலைவி!
ReplyDelete