ஹி…ஹி… இல்லைங்க, ஒரு ஒரு விருதுதான்! :) ஆனா அதோட மதிப்பு ஆயிரம் பொற்காசுகளுக்கும்
மேலே! அள்ளித் தந்த தலைவி நம்ம தானைத் தலைவிதான்! அவங்கதான் எனக்கு ‘Versatile Blogger’ என்கிற விருதை பகிர்ந்து கொடுத்திருக்காங்க. இதிலிருந்தே தெரிஞ்சிருக்குமே,
அன்பாலதான் கொடுத்திருக்காங்க, வேற ஒண்ணும் காரணம் இல்லைன்னு! :)
அவங்க முதல் முதலா பரதம் பற்றிய
பதிவுக்கு பின்னூட்டம் போட்டிருந்தாங்க(ன்னு நினைக்கிறேன்). (நானும் ரொம்ப நாளா இன்னொரு பரதம் பற்றிய பதிவிடணும்னு
நினைச்சுக்கிட்டே…. இருக்கேன், எப்போ நிறைவேறப் போகுதோ?). வழக்கம் போல அவங்களைப் பற்றித் தெரிஞ்சுக்கலாமேன்னு அவங்க பதிவுக்குப் போய் பார்த்தேன். அப்பதான் அவங்களும் அம்பாள்
பக்தை, அதுவுமில்லாம புதுக்கோட்டை புவனேஸ்வரி அவங்களுக்கும் ரொம்பப் பரிச்சயம், அப்படின்னு
தெரிஞ்சது! அப்பவே அவங்க ‘நம்ம செட்’ ஆகிட்டாங்க! அவங்க எழுதறதும் அருமையா இருந்தது.
சீரியஸான விஷயங்களும் எழுதுவாங்க; ஆன்மீகமும் எழுதுவாங்க; எல்லாத்துக்கும் மேலே, நகைச்சுவையா
எழுதறது அவங்களுக்கு இயல்பாகவே கை வந்த கலையா இருக்கு! இப்பேர்ப்பட்ட பன்முக எழுத்தாளரா
வளர்ந்துக்கிட்டிருக்கிற தானைத் தலைவிதான் இந்த விருதை எனக்கு (போய்) கொடுத்திருக்காங்க!
ரொம்ப நன்றி தானைத் தலைவி!
இந்த விருதை வாங்குகிறவங்களுக்கு
சில கடமைகள் இருக்காம். முதலில் விருது கொடுத்தவங்களுக்கு நன்றி சொல்லணும். (இயல்பாகவே
எல்லாரும் செய்யறதுதானே இது? ஹி…ஹி… :)) அடுத்தது தன்னைப் பற்றி சில விஷயங்கள் பகிர்ந்துக்கணும்.
அடுத்தது, இன்னும் 5 பேருக்கு விருதை பகிர்ந்து கொடுக்கணும்; அவங்க பதிவுகளுக்கு போயி,
அவங்களுக்கு விருது கொடுத்திருக்கிற விஷயத்தைச் சொல்லணும்! பரவாயில்லைல்ல? கொஞ்சம்
சுலபம் மாதிரிதான் தெரியுது :)
‘நினைவின் விளிம்பில்…’ தொடர்ந்து
வாசிக்கிறவங்களுக்கு என்னை பற்றி நல்லாவே தெரிஞ்சிருக்கும். புதுசா வாசிக்கிறவங்களுக்காக
என்னைப் பற்றி ஒரு சிறு குறிப்பு:
-கவிநயா என்பது எழுதுவதற்காகவே
முதல் முதலாக நானே புனைந்து, இட்டுக் கொண்ட புனை பெயர் (இப்போ கவிநயாங்கிற பெயர் பொதுவுடமை
ஆகிக்கிட்டு வருது!)
-கணினி மென்பொருள் துறையில் வேலை
-பரதம் கத்துக்கிட்டிருக்கேன்;
இன்னும் கத்துக்கறேன், சொல்லியும் தரேன்
-பேசாம வேணுன்னாலும் இருந்துருவேன்,
ஆனா எழுதாம இருக்கிறது ரொம்பவே கஷ்டம்
-ஆன்மீகத்திலும், அன்னை பராசக்தியிடமும்,
ஈடுபாடு அதிகம்
அவ்ளோதான்!
இந்த விருதை இவங்களுக்கு பகிர்ந்து
கொடுக்கிறேன்!
இந்த விருதினால் இவருக்குப் பெருமை
என்பதை விட, இவருக்குத் தருவதால் இந்த விருதுக்குப் பெருமை, என்று சொல்வார்களே. அதுவே
இங்கும் பொருந்தும்! ராமலக்ஷ்மி, மிகச் சிறந்த எழுத்தாளராகவும், மிகச் சிறந்த புகைப்படக்
கலைஞராகவும், வெகு வேகமாக வளர்ந்து வருபவர். எழுத்தென்றால், கவிதை, சிறுகதை, கட்டுரை,
விமர்சனம், மொழிபெயர்ப்புக் கவிதை, இப்படிப் பலப் பல வடிவங்களையும் புரட்டி எடுக்கிறவர்!
பதிவுலகுக்கு வந்த ஆரம்ப காலத்தில் அவர் காட்டிய தோழமையும் அன்பும், இவ்வளவு வளர்ந்த
பின்னரும் மாறாமல் இருப்பது ஆச்சர்யம். நட்பைப் பொறுத்த வரையில் என்றும் இதே போல் இருக்கவும்,
அவருடைய துறைகளில் அவர் மேலும் வளர்ந்து சிகரங்கள் தொடவும், என் மனமார்ந்த வாழ்த்துகள்!
ரமணி –
இவரைப் பற்றி அதிகம் தெரியாது
என்றாலும், இவர் எழுத்துகளைத் தெரியும். நடைமுறை விஷயங்களை எளிமையாகவும், இனிமையாகவும்,
சற்றே வித்தியாசமான சிந்தனையுடனும், அதே சமயம் மனதில் பதியும் வண்ணமும் சொல்வதில் வல்லவர்.
இவர் பதிவுகளை தொடர்ந்து வாசித்தாலும், பின்னூட்டங்கள் எப்போதாவதுதான் இடுவேன். (அவருடைய
பதிவுகளில் எப்போதும் பெரிய பின்னூட்டக் கூட்டம் இருக்கும்; அதில் என்னுடையது காணாமல்
போய்விடக் கூடும் என்றுதான் :)).
உழவன் -
மனதைச் சட்டென்று கவ்வி இழுக்கிற
மாதிரியான கவிதைகளை எழுதுவது இவருடைய சிறப்பு. அரசியல், சினிமா, சமூக உணர்வுடனான கட்டுரைகள்,
சிறுகதைகள், இப்படிப் பலப் பல வடிவங்களையும் அருமையாக எழுதுபவர். பத்திரிகைகளிலும்
நிறைய பிரசுரித்திருக்கிறார்.
ஜிரா –
முருகனடிமை. இவரை, கேயாரெஸ் எல்லாம்
பற்றி நினைக்கும் போதெல்லாம், முருகன்தான் முதலில் நினைவுக்கு வருவான். ஜி.ராகவன் என்பதுதான்
ஜிராவாக சுருங்கி இருக்கிறது. தமிழ் மற்றும் இலக்கிய ஆர்வத்துடன் சமையலிலும் ஆர்வம்
காட்டுபவர். நான் வலைப்பூ உலகிற்கு வந்த புதிதில் கேயாரெஸ், குமரன், மற்றும் இவரது
எழுத்துகளைத் தான் விடாமல் வாசிப்பேன்… ‘இனியது கேட்கின்’ என்ற வலைப் பூவில் தமிழும்
ஆன்மீகமும் கலந்த இனிய இலக்கியப் பதிவுகள் நிறைய எழுதினார். குமரனும், இவரும் ‘சொல்
ஒரு சொல்’ என்று தூய தமிழ் சொற்களுக்கான வலைப்பூ ஒன்று எழுதி வந்தார்கள். நடுவில் ரொம்ப
நாள் காணாமல் போய் விட்டு இப்போது wordpress-ல் எழுத ஆரம்பித்திருக்கிறார்! கட்டுரைகள்
மட்டுமின்றி, கதைகளும் அருமையாக எழுதுவார். நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர்.
கோபிநாத் –
இசைஞானி இளையராஜா அவர்களின் பரம
பக்தர். இப்போதெல்லாம் அவ்வளவாக பதிவெழுதக் காணோம். ஆடிக்கொரு முறை அமாவாசைக்கொரு முறை
எழுதினாலும், சொல்ல வந்ததைத் தெளிவாகவும், சுவையார்வத்துடனும் சொல்வதில் கை தேர்ந்தவர்.
முக்கியமாக ‘நினைவின் விளிம்பில்…’ பதிவுகளை தொடர்ந்து வாசித்து, பின்னூட்டி, ஊக்கமளித்து
வருகின்ற அன்புத் தம்பி!
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!
எல்லோரும் நல்லாருக்கணும்!
அன்புடன்
கவிநயா
வாழ்த்துகள். மேலும் பல விருதுகளைப் பெறவும் வாழ்த்துகள்.
ReplyDeleteநட்புகள் கையால் விருது மனதுக்கு இதம்:)! ஆரம்ப காலத்தில் உங்களைப் போன்ற நண்பர்கள் தந்த ஊக்கம்தான் என்னை இன்னும் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. அன்பினால் அதிகப்படியாக சொல்லி விட்டிருந்தாலும் தொடரும் ஊக்கத்துக்கும் வாழ்த்துகளுக்கும் விருதுக்கும் மனமார்ந்த நன்றி கவிநயா!
ReplyDeleteதானைத் தலைவியின் விருதைப் பெற்றத் தங்களுக்கும், தங்களிடமிருந்து விருதை வாங்கியிருக்கும் மற்றவருக்கும் என் நல்வாழ்த்துகள்!
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!
ReplyDelete//பேசாம வேணுன்னாலும் இருந்துருவேன், ஆனா எழுதாம இருக்கிறது ரொம்பவே கஷ்டம்.//
ReplyDeleteஇங்க அப்படியே மாற்றி, எழுதாம வேணும்னாலும் இருந்துடுவேன், ஆனா பேசாம மட்டும் இருக்கவே முடியாது. :)) வாழ்த்துக்கள்.
ஆகா...அக்காவிடம் இருந்து என்டா அழைப்புன்னு வந்தேன் வந்தா விருதுடன் ஆயிரம் பொற்காசு..நன்றியோ நன்றி அக்கா ;-))
ReplyDeleteதலைவியின் இடம் இருந்து விருது பெற்ற உங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா ;))
விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-))
\\பதிவுகளை தொடர்ந்து வாசித்து, பின்னூட்டி, ஊக்கமளித்து வருகின்ற அன்புத் தம்பி!\\
இதான் எப்போதும்..அதுவே போதும் கூட ;-))
அட, கோபி, இவ்வளவெல்லாம் பின்னூட்டத்திலே எழுதுவீங்க?? :P:P:P
ReplyDeleteஎன்னையும் நல்ல பதிவ்ர்களுடன் இணைத்து
ReplyDeleteகௌரவித்தமைக்கு மனமார்ந்த நன்றி
நல்ல பதிவுகள் தரவேண்டும் என்கிற உறுதியை
தங்கள் பரிசு ஏற்படுத்திப் போகிறது
வாழ்த்துக்கள்
மிக மகிழ்வோடு பெரு நன்றியை உரிதாக்குகிறேன்.
ReplyDeleteஉங்கள் அன்பான விருதுக்கு நன்றி பல. :) உங்களுக்கும் மிகப் பொருத்தமான விருதுதான்.
ReplyDeleteஇப்பிடியெல்லாம் விருது குடுத்தா இன்னும் பொறுப்பா எழுதனும்னு கட்டாயம் வந்துருதே :)
//வாழ்த்துகள். மேலும் பல விருதுகளைப் பெறவும் வாழ்த்துகள்.//
ReplyDeleteஆசிகளுக்கு மிகவும் நன்றி கீதாம்மா!
//அன்பினால் அதிகப்படியாக சொல்லி விட்டிருந்தாலும்//
ReplyDeleteதன்னடக்கமும் உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம், ராமலக்ஷ்மி! ரொம்பக் குறைவாகத்தான் சொல்லியிருக்கிறேன் என்பதே உண்மை :) விருதினை ஏற்றுக் கொண்டமைக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும்!
//இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!//
அனைவரின் சார்பிலும் மிகவும் நன்றி அம்மா!
//ஆகா...அக்காவிடம் இருந்து என்டா அழைப்புன்னு வந்தேன் வந்தா விருதுடன் ஆயிரம் பொற்காசு..நன்றியோ நன்றி அக்கா ;-))//
ReplyDeleteஅன்பான தம்பிக்கு என்னால் கொடுக்க முடிஞ்சது அவ்ளோதான் :)
//தலைவியின் இடம் இருந்து விருது பெற்ற உங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா ;))//
நன்றிப்பா.
//விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-))//
அனைவரின் சார்பிலும் நன்றி :)
//இதான் எப்போதும்..அதுவே போதும் கூட ;-))//
ரசித்தேன் :)
//அட, கோபி, இவ்வளவெல்லாம் பின்னூட்டத்திலே எழுதுவீங்க?? :P:P:P//
ReplyDeleteஹாஹா :) இதையும் ரசித்தேன் :)
//என்னையும் நல்ல பதிவ்ர்களுடன் இணைத்து//
ReplyDeleteஇப்படிச் சொல்லி விட்டீர்களே. நீங்கள் நல்ல பதிவர் இல்லை, மிக நல்ல பதிவர் என்பதை உங்கள் வாசகர்கள் உடனடியாக ஒப்புக் கொள்வார்கள் :)
//நல்ல பதிவுகள் தரவேண்டும் என்கிற உறுதியை
தங்கள் பரிசு ஏற்படுத்திப் போகிறது
வாழ்த்துக்கள்//
விருதை ஏற்றுக் கொண்டதற்கும், வாழ்த்துகளுக்கும் மிக நன்றி, ரமணி!
//மிக மகிழ்வோடு பெரு நன்றியை உரிதாக்குகிறேன்.//
ReplyDeleteமிக்க மகிழ்ச்சியும், நன்றியும், உழவன்!
//உங்கள் அன்பான விருதுக்கு நன்றி பல. :)//
ReplyDeleteநன்றிக்கு நன்றி :)
//உங்களுக்கும் மிகப் பொருத்தமான விருதுதான்.//
ஆஹா, இப்படிச் சொன்னதுக்காகவே உங்களுக்கு இன்னொரு ஆயிரம் பொற்காசுகள் தரலாம்னு தோணுதே! :)
//இப்பிடியெல்லாம் விருது குடுத்தா இன்னும் பொறுப்பா எழுதனும்னு கட்டாயம் வந்துருதே :)//
உங்க பொறுப்புணர்வைப் பற்றி எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, ஜிரா :) நீங்க இதே உற்சாகத்தோடு எழுதுவதைத் தொடரணும் என்பதே என் அன்பான வேண்டுகோள்! செய்வீங்கதானே? :)
//இங்க அப்படியே மாற்றி, எழுதாம வேணும்னாலும் இருந்துடுவேன், ஆனா பேசாம மட்டும் இருக்கவே முடியாது. :)) வாழ்த்துக்கள்.//
ReplyDeleteஅது சரி :) அப்படின்னா நல்ல பொருத்தம்தான்! நீங்க பேசிக்கிட்டே இருங்க, நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் :)
எனக்கு விருதும், இந்த வாய்ப்பும் தந்தமைக்கு மீண்டும் மனமார்ந்த நன்றிகள், தானைத் தலைவி!