Sunday, June 3, 2012

சிப்ஸும் சூர்யாவும் :)


நடிகர் சூர்யாவை உங்களுக்கு பிடிக்குமா? ம்… நீங்க சொல்றது சரிதான். அவரைப் பிடிக்காதவங்க ரொம்பக் குறைவாதான் இருப்பாங்க. ஒரு நல்ல நடிகனாகவும், அதற்கும் மேலே நல்ல மனிதனாகவும், சூர்யாவை எனக்கும் பிடிக்கும். அதுவும் இப்ப விஜய் தொலைக்காட்சியில் வர்ற கோடி ரூபா நிகழ்ச்சியை அவர் நடத்தற விதத்திலிருந்து (பொதுவா இந்த மாதிரி விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தவிர்க்கும் எனக்கே) இன்னுமே பிடிச்சிருக்கு! 


 

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஒரு நல்ல கருத்து (message), அல்லது நல்ல விஷயம் கற்றுத் தரக் கூடிய ஏதாவது ஒரு நிகழ்வு, இப்படி ஏதாவது சொல்றார். அதே போல, முடிக்கும் போதும் ஏதாவது ஒரு நல்ல சிந்தனையோட முடிக்கிறார்.

போட்டியாளர்கள்கிட்ட அவங்களுக்குத் தகுந்த மாதிரி, அல்லது அவங்க வாழ்க்கையின் நிலைமைக்குத் தகுந்த மாதிரி, கனிவாவும், பொறுப்பாவும் பேசறார். பேசற விஷயத்துக்குத் தகுந்த மாதிரி தன்னோட அனுபவங்களையும் பகிர்ந்துக்கறார். சில சமயம் இலவச அறிவுரைகளும் கிடைக்கும்…

மொத்தத்தில் சூர்யா ரொம்ப நல்ல பிள்ளை அப்படிங்கிற எண்ணம் இன்னும் உறுதிப்படற மாதிரி நடந்துக்கறார். தமி’ழ்’ உச்சரிப்பு மட்டும் இன்னும் கொஞ்சம் அ’ழு’த்தமா இருக்கலாம்னு தோணுது :) நேரங் காட்டியை (அதாங்க ‘timer”!) “மணி அண்ணே”ன்னு கூப்பிடறது க்யூட் :)

அதெல்லாம் சரி… சிப்ஸுக்கும் சூர்யாவுக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு உங்களுக்குத் தோணுமே?

அதொண்ணுமில்லீங்க… உருளைக்கிழங்கு வறுவல் (சுத்தத் தமிழில் ‘சிப்ஸ்’!) எனக்கு ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கும் பிடிக்கும்தானே? அதுவும் இப்ப பிரபலமா இருக்கிற ஒரு brand (brand-க்கு தமிழில் என்ன?) சிப்ஸ்ல – ‘ஒண்ணே ஒண்ணு சாப்பிடுங்க, அப்புறம் நிறுத்தவே மாட்டீங்க’ அப்படின்னு போட்டிருப்பாங்க. என்னை வச்சுத்தான் அப்படிப் போட்டாங்களோ என்னவோ? நான் சிப்ஸ் சாப்பிட ஆரம்பிச்சாலும் அப்படித்தான். நிறுத்தவே முடியாது! 

என்னடா இது, அப்படின்னு எனக்கு என் மேலேயே வெறுப்பு. இந்த சிப்ஸ் இவ்ளோண்டா இருந்துக்கிட்டு நமக்கு இவ்வளவு தொந்தரவு குடுக்குதே, என்ன பண்ணலாம்னு யோசிச்சேன்…
ஒரு நாள் ‘டக்’குன்னு தீர்மானம் பண்ணி, சிப்ஸ் சாப்பிடற பழக்கத்துக்கு ஒரு பெரீய்ய்ய முற்றுப் புள்ளி வச்சிட்டேன். கிட்டத்தட்ட ரெண்டு வருஷமாவது இருக்கும்னு நினைக்கிறேன், இப்பல்லாம் சிப்ஸை தொடறதில்லை. (touch wood).

ஆனா என்ன, இப்ப இந்த சிப்ஸ் மாதிரிதான் சூர்யா நிகழ்ச்சியும் ஆகிக்கிட்டிருக்கு. பார்க்க ஆரம்பிச்சிட்டா, பாதில நிறுத்த முடியலை! அதுவும் இங்கே விஜய் டி.வி.ல விளம்பரங்களே இல்லாம வேற நிகழ்ச்சிகள் போடறாங்களா, அதனால பார்க்கணும்கிற எண்ணத்தை இன்னும் தூண்டி விடுது… இப்ப தலைப்பு வந்திருச்சா? :)

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: http://cinema.dinakaran.com/cinema/TelevisionDetail.aspx?id=6165&id1=6

20 comments:

  1. நல்ல வேளையாப் பார்க்கிறதில்லை; உ.கி.சிப்ஸும் அதிகமாச் சாப்பிடறதில்லை. :)))))))

    ReplyDelete
  2. சிப்ஸ் தலைப்பைப் பார்த்துட்டு சூர்யா இதுக்கு விளம்பரம் கொடுக்கிறார் போலனு நினைச்சேன். :D

    ReplyDelete
  3. எல்லோரும் நல்லாருக்கணும்!

    ReplyDelete
  4. அட சிப்ஸும் சூரியாவையும் மிக அழகாகப்
    பொருத்திவிட்டீர்களே
    கூந்தலுள்ள்ள மகராசிஎப்படியும் அலங்காரம்
    செய்து கொள்ளலாம்தான் என்பதைப் போல
    எழுதத் தெரிந்தவர்கள் எதையும் எப்படியும் சுவாரஸ்யமாக
    எழுதிவிடமுடியும் என்பதற்கு இந்தப் பதிவு
    நல்ல உதாரணம்
    ரசித்துப் படித்த பதிவு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நான் எழுதியிருந்தா 'சிக்கனும் சூர்யாவும்'ன்னு தலைப்பு போட்டிருப்பேனோ? :-)

    ReplyDelete
  6. அட ! நான் சிப்ஸ் ன்னதும் கம்ப்யூட்டர் சிப்ஸ் பற்றி ஏதோ இருக்கும்ன்னு நினச்சிட்டேன் . உருளைக்கிழங்கு சிப்ஸ் உடம்புக்கு கெடுதல் அதை விட்டது சரிதான். ஆனால், நல்ல விஷயங்களை சொல்லும் நிகழ்ச்சியை ஏன் அதோடு ஒப்பிடுகிறீர்கள்...!?

    ReplyDelete
  7. //நல்ல வேளையாப் பார்க்கிறதில்லை; உ.கி.சிப்ஸும் அதிகமாச் சாப்பிடறதில்லை. :)))))))//

    வாங்க கீதாம்மா! அதென்ன 'நல்ல வேளையா'ன்னு சொல்லிருக்கீங்க? :)

    //உ.கி.சிப்ஸும் அதிகமாச் சாப்பிடறதில்லை.//

    உங்களோட சமர்த்து எனக்கு வர இன்னும் நாளாகும் அம்மா :)

    ReplyDelete
  8. //சிப்ஸ் தலைப்பைப் பார்த்துட்டு சூர்யா இதுக்கு விளம்பரம் கொடுக்கிறார் போலனு நினைச்சேன். :D//

    அது சரி :)
    வாசிச்சதுக்கு நன்றிம்மா.

    ReplyDelete
  9. //இராஜராஜேஸ்வரி said...
    எல்லோரும் நல்லாருக்கணும்!//

    நன்றி அம்மா :)

    ReplyDelete
  10. //ரசித்துப் படித்த பதிவு.//

    மிக்க நன்றி ரமணி! :)

    ReplyDelete
  11. //நான் எழுதியிருந்தா 'சிக்கனும் சூர்யாவும்'ன்னு தலைப்பு போட்டிருப்பேனோ? :-)//

    ஹாஹா :) ரசித்துச் சிரித்தேன் :) நன்றி குமரன்.

    ReplyDelete
  12. //நல்ல விஷயங்களை சொல்லும் நிகழ்ச்சியை ஏன் அதோடு ஒப்பிடுகிறீர்கள்...!?//

    நீங்க சொன்னது எனக்கு கொஞ்சம் தாமதாமாத்தான் புரிஞ்சது :) நான் நிகழ்ச்சியை சிப்ஸோட ஒப்பிடலை. சிப்ஸுக்கும், நிகழ்ச்சிக்குமான என் உணர்வுகளைத்தான் ஒப்பிட்டேன், தானைத் தலைவி :) - "Once you start, you will never stop"!

    ReplyDelete
  13. Once you start, you will never stop"! //

    இதுக்குத் தான் "நல்லவேளையா" இப்படி ஒரு பழக்கத்தை வைச்சுக்கலை. அதுக்குத் தான் நல்லவேளையானு சொன்னேன். :)))))))பொறுமை பத்தாது எனக்கு.

    ReplyDelete
  14. இப்ப சிப்ஸ் சாப்பிடுறீங்களா இல்லையா? :-)

    ReplyDelete
  15. நிகழ்ச்சி முன்ன விட நல்லாருக்கு. நான் தொடர்ந்து பாக்குறதில்ல. அப்பப்ப பாக்குறது.

    குமரன் இங்க வந்து பின்னூட்டம் போடுறாரு. நம்ம பதிவுகளுக்குதான் வர்ரதில்லை :)

    ReplyDelete
  16. //இதுக்குத் தான் "நல்லவேளையா" இப்படி ஒரு பழக்கத்தை வைச்சுக்கலை. அதுக்குத் தான் நல்லவேளையானு சொன்னேன்./

    ஆமாம் அம்மா. நல்ல வேளைதான் :)

    // :)))))))பொறுமை பத்தாது எனக்கு.//

    நம்ம ஊர்ல விளம்பரங்களுக்கு நடுவில் பார்க்கறதுக்கு எனக்குமே பொறுமை இல்லை. இங்கே விளம்பரங்கள் வரதில்லை, விஜயில் மட்டும். அதனால பார்க்கறதுண்டு.

    ReplyDelete
  17. //இப்ப சிப்ஸ் சாப்பிடுறீங்களா இல்லையா? :-)//

    இல்லைப்பா, விட்டாச், வெற்றிகரமா!

    வருகைக்கு நன்றி உழவன் :)

    ReplyDelete
  18. //நிகழ்ச்சி முன்ன விட நல்லாருக்கு. நான் தொடர்ந்து பாக்குறதில்ல. அப்பப்ப பாக்குறது.

    குமரன் இங்க வந்து பின்னூட்டம் போடுறாரு. நம்ம பதிவுகளுக்குதான் வர்ரதில்லை :)//

    அட, ஜிரா!

    அச்சோ பாவம் குமரன் :) அவரே அத்தி பூத்தாப்லதான் இங்கே வருவாரு. அப்படி அபூர்வமா வரப்ப உங்ககிட்ட சரியா சிக்கிக்கிட்டாரே :)

    வருகைக்கு நன்றி ஜிரா :)

    ReplyDelete
  19. இராகவன், எங்க வரணும்ன்னு தெளிவா சொன்னாத்தானே வர்றது? எந்த பதிவுல எழுதுறீங்க? தெரிஞ்சா ஓடோடி வந்துற மாட்டேன்?!

    ReplyDelete
  20. //இராகவன், எங்க வரணும்ன்னு தெளிவா சொன்னாத்தானே வர்றது? எந்த பதிவுல எழுதுறீங்க? தெரிஞ்சா ஓடோடி வந்துற மாட்டேன்?!//

    அட, உங்களுக்கு நெஜம்மாவே தெரியாதா! இங்கேதாம்ப்பா! :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)