சுப்பு தாத்தா பாடியிருப்பதை கேட்டு மகிழுங்கள்! மிகவும் நன்றி தாத்தா!
சக்தி நீயின்றி எதுவும் இல்லை!
சக்தி நீதானே உலகின் எல்லை!
அன்னை தன் வடிவாய் உன்னைப் படைத்தாள்!
அன்பின் வடிவாய் உன்னை வடித்தாள்!
உயிரைத் தாங்கும் உரிமை தந்தாள்!
அகிலம் ஆக்கும் ஆற்றல் தந்தாள்!
அம்மா என்றுனை அழைக்கச் செய்தாள்!
அன்பால் உலகுனைத் துதிக்கச் செய்தாள்!
சக்தியும் நீயே! சகலமும் நீயே!
வித்தும் நீயே! விளைவும் நீயே!
அச்சமே யின்றி அநீதி எதிர்ப்பாய்!
துச்சம் நீயென எதிரியை அழிப்பாய்!
நல்ல சக்திகளை வளர்ப்பதுன் கடமை!
தீய சக்திகளை தீர்ப்பதுன் திறமை!
சக்தியை உணர்ந்து செயல்படுவாய்!
சகத்தினை நீயே காத்திடுவாய்!
சக்தி நீயின்றி எதுவும் இல்லை!
சக்தி நீதானே உலகின் எல்லை!!
--கவிநயா
நன்றி: வல்லமை (மகளிர் வாரச் சிறப்பிதழ்)
படத்துக்கு நன்றி: http://photobucket.com/images/women%20power/
பூமியைப்போல் நீ காத்திடு பொறுமை ;
ReplyDeleteஅளவுமீறினால் பொறுப்பதும் மடமை;
நாமெல்லாம் அன்புக்கு மட்டுமே அடிமை
நியாயமாய் நிலைநாட்டு உன் உரிமை.
கவிநயா !
பாட்டினால் புரியவைத்தாய் பெண்ணின் பெருமை !
ஐயாவின் குரலினில் பாட்டு மிக அருமை !
மிக அழகாகச் சொன்னீர்கள் அம்மா. மிகவும் நன்றி!
ReplyDelete