Sunday, June 6, 2010

நம்பிக்கை



இருளடைந்த கானகத்தே
இலக்கின்றி அலைந்திடினும்

திசைதெரியாப் பாதையிலே
வழிமறந்து தொலைந்திடினும்

துயர்சூழ்ந்த வாழ்க்கையினால்
மனம்துவளும் வேளையிலும்

சிற்றெறும்புப் புற்றினுள்ளும்
சூரியஒளி புகுவதுபோல்

சின்னஞ்சிறு நீர்த்துளிகள்
பெரியவெள்ளம் ஆவதுபோல்

மூங்கில்வழி நுழைந்துகாற்று
இனியகீதம் இசைப்பதுபோல்

சிறியஎழில் அகல்விளக்கு
கரும்இருளை விரட்டுதல்போல்

நம்பிக்கைசிறி திருந்துவிட்டால்
நானிலமும் வென்றிடலாம்!

--கவிநயா


படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/notreallyunique/2634711906/sizes/m/

18 comments:

  1. /நம்பிக்கைசிறி திருந்துவிட்டால்
    நானிலமும் வென்றிடலாம்!/

    உண்மை தான்

    ReplyDelete
  2. சிற்றெறும்புப் புற்றினுள்ளும்
    சூரியஒளி புகுவதுபோல்

    நல்லா இருக்கு கவிநயா

    ReplyDelete
  3. தன்னம்பிக்கை கவ்தைக்கு வாழ்த்தும், பாராட்டுக்களும்.

    ReplyDelete
  4. நம்பிக்கை விளக்கு இங்கும் தொடர்கிறதா :)

    நன்றாக வந்துள்ளது கவிதை. வாழ்த்துகள்

    ReplyDelete
  5. உங்க பதிவு ஒரு 58 வருசம் முன்னாடி நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவூட்டியது.
    அது என்ன எனப்படிக்க
    அருள் கூர்ந்து எங்கள் குல தெய்வத்தைத்
    தரிசிக்க வாருங்கள்.
    அப்படியே பாட்டையும் கேளுங்கள்
    சுப்பு ரத்த்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  6. நல்லா இருக்கு கவிநயா.

    ReplyDelete
  7. திகழ்
    பூங்குழலி
    சி.கருணாகரசு
    கபீரன்பன் ஐயா
    சுப்பு தாத்தா
    ஜெஸ்வந்தி
    அ.தங்கமணி

    உங்கள் அனைவரின் வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள்.

    ReplyDelete
  8. பிரசுரத்திற்கு அல்ல.

    'உருவில் எளிய தீப்பொறியும்
    அரிய காட்டை அழிப்பது போல்'

    --என்கிற அழிவைச் சொல்லாமல்,

    'சிறு சிறு மழைத்துளியும் (பலவாகி)
    பெரும் காட்டை வளர்ப்பது போல்'

    --என்று ஆக்கபூர்வமாகச் சொல்லலாமோ என்று தோன்றிற்று.

    தன்னம்பிக்கை நல்ல செயல்களுக்கே
    செயல்படும் தன்மைத்து. நல்ல நோக்கமில்லாத பிறர் அழிவுக்காக ஒருவர் கொள்ளும் நம்பிக்கை அவரையே அழித்துவிடும் என்பதினால் இந்த மாற்றம். நல்லத்தொரு கவிதையில் இந்த இரண்டு வரிகள் மட்டும் முரண்பட்டு நிற்பதாகத் தெரிகிறது. உங்களுக்குப் பிடித்த மாதிரி, வேறு ஏதாவது ஆக்கபூர்வமான வரிகளைக் கொண்டும் மாற்றி விடலாம் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  9. வாருங்கள் ஜீவி ஐயா. நீங்கள் பிரசுரத்திற்கு அல்ல என்றாலும், நீங்கள் சொன்ன கருத்து எனக்கு சரியாகப் பட்டதால், பிரசுரித்து விட்டேன். கவிதை வரிகளையும் சிறிது மாற்றி இருக்கிறேன் (மழைத்துளி பற்றி ஏற்கனவே சொல்லி விட்டதால், அகல் விளக்கு...)

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  10. // சிறியஎழில் அகல்விளக்கு
    கரும்இருளை விரட்டுதல்போல் //

    அட! இந்த வரிகள் அழகாக நிறையவே வெளிச்சம் கொடுக்கின்றதே!

    ReplyDelete
  11. //சிற்றெறும்புப் புற்றினுள்ளும்
    சூரியஒளி புகுவதுபோல்
    //

    great lines akka!!..:)

    ReplyDelete
  12. //great lines akka!!..:)//

    அட, தக்குடுவுக்கு இந்த பக்கம் வரக் கூட நேரம் இருக்கே :)

    நன்றி தம்பீ.

    ReplyDelete
  13. //beautiful kavinaya!//

    மிக்க நன்றி மாதங்கி!

    ReplyDelete
  14. //அட! இந்த வரிகள் அழகாக நிறையவே வெளிச்சம் கொடுக்கின்றதே!//

    உங்கள் மீள் வருகை உற்சாகம் அளிக்கிறது. மிகவும் நன்றி ஜீவி ஐயா.

    ReplyDelete
  15. நல்ல கவிதை.நம்பிக்கையை நல்லோர் மனதில் நாளும் விளைவிக்கும்.அப்படியே என்னுடைய தன்னம்பிக்கை கட்டுரையையும் படியுங்கேன். காலிங்கராயர்.

    ReplyDelete
  16. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.எழிலன். நேரம் கிடைக்கையில் அவசியம் வருகிறேன்...

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)