Wednesday, January 27, 2010

குமரன் என்பதவன் பேரு!

இந்த பாட்டு எழுதி ஒரு வருஷத்துக்கு மேல இருக்கும். 'முருகனருள்' பதிவில், பலரும் பாடி இடணும்கிற எண்ணத்தோட எழுதியது. என்ன காரணத்தாலோ அது நடக்கவே இல்லை. சொந்த வீட்டிலேயே இடணும்கிறது இறை விருப்பம் போல. இந்த தைப்பூசத்துக்கு இங்கேயே இட முடிந்ததில் மகிழ்ச்சியே.

குட்டி (முருகக்) குழந்தையின் பட்டுப் பாதங்கள் சரணம் சரணம்.

வெற்றி வேல் முருகனுக்கு... அரோகரா!



தோழி மீனாவின் குரலில்... கேட்டுக்கிட்டே படிங்க... நன்றி மீனா!

Murugan kavadi son...


குமரன் என்ப தவன் பேரு - குன்று
தோறும் அவனது ஊரு - தன்னை
மன்றாடிடும் அடியார்களைக் கண்போலவே காத்திடும் அவன்
இறைவன் எங்கள் தலைவன்

சூரனை வே லால் பிளந்தான் - கொண்டைச்
சேவற் கொடியோனாய்த் திகழ்ந்தான் - சக்தி
வேலன் சிவ பாலன் அவன் தேவர் துயர் தூசாக்கிட
உதித்தான் அவ தரித்தான்

மயில் மீதில் ஏறியே வருவான் - அவன்
துயர் களைக் களைந் தெறிந் தருள்வான் - ஆறு
முகங் கொண்ட முருகன் அவன் அழகன் என் மனங் குழைந்திட
வருவான் இன்பம் தருவான்

காவடி தூக்கியே ஆடு - அவன்
காலடி பணிந்து பாடு - நம்
பாவங் களைக் பொடியாக் கிடும் தூயன் அவன் திருவடி களை
நாடு தினம் நாடு

ஆறு படை வீடு பாரு - அது
ஆறு தலைத் தரும் கேளு - கந்தன்
சரவணபவ எனும் மந்திரம் வினைகள் களை திரு மந்திரம்
கூறு நாளும் கூறு

செந்தமிழ்க் காவலன் அவனே - நாமும்
சிந்தையில் கொள்ளுவோம் அவனை - சின்ன
முருகன் அவன் அழகன் அவன் குமரன் அவன் கந்தன் பதம்
பணிவோம் பணிந்து மகிழ்வோம்

--கவிநயா

படத்துக்கு நன்றி: கௌமாரம்.காம்

18 comments:

  1. தங்களின் பாடலும், அதைப் பவ்வியமாகப் பாடிய தோழியர் மீனாவின் குரலும், அந்த அழகனின் திருவடிகளில் அர்ச்சிக்கும் மலர்களாகவேத் தோற்றம் தந்தன.
    துன்பங்களைத் தூர விலகிடச்செய்ய
    நம்மை அவன் வேல் காக்கட்டும்.
    சேவலம்கொடியோன் திருவடிகளே சரணம்.

    ReplyDelete
  2. அழகான பாடலை உங்கள் தோழி அருமையாகப் பாடி இருக்கிறார்கள். உங்களுக்கும் அவருக்கும் என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. //சின்ன முருகன் அவன் அழகன் அவன் குமரன் அவன் கந்தன் பதம்
    பணிவோம் பணிந்து மகிழ்வோம் //

    முருகனுக்கு அரோகரா. கந்தனுக்கு அரோகரா.

    முத்துகுமரன் தரிசனம் காணுங்கள்

    http://natarajar.blogspot.com/2010/01/blog-post_27.html

    ReplyDelete
  4. இந்த வருடமும் பாடிப் பணிந்தேன் அக்கா.

    இதனை முருகருளிலும் இடுங்கள் அக்கா.

    ReplyDelete
  5. முருகனுக்கு... அரோகரா

    அழகான வரிகள்...பாடலை பிறகு கேட்டு சொல்கிறேன் ;)

    ReplyDelete
  6. நானும் ஒருமுறை வாய்விட்டுப் பாட....ஹிஹி...படிச்சுட்டேன்..முருகனருளட்டும்....நன்றிக்கா.

    ReplyDelete
  7. //முருகனருள்' பதிவில், பலரும் பாடி இடணும்கிற எண்ணத்தோட எழுதியது. என்ன காரணத்தாலோ அது நடக்கவே இல்லை...//

    ஆகா!

    இது வரை முருகனருளில் 146 பதிவுகள் ஆகி இருக்கு-க்கா!

    இந்தக் "கவிநயக் காவடிச் சிந்தை" 150ஆம் பதிவாக இட, உங்கள் அனுமதி வேண்டுகிறேன்!
    இந்தக் கண்ணனுக்கும், அன்னை வேல் தருவீங்களா?

    ReplyDelete
  8. //பலரும் பாடி இடணும்கிற//

    அதையும் செஞ்சிட்டாப் போச்சு!

    அம்மன் பாட்டு-100 மீனா அவர்கள், "பாடி" இருக்காங்க!
    ஸோ, நான் "கத்தத்" துவங்குகிறேன்! :)

    ReplyDelete
  9. வாங்க ஜீவி ஐயா.

    //அதைப் பவ்வியமாகப் பாடிய தோழியர் மீனாவின் குரலும்,//

    அப்படின்னு அழகா சொன்னீங்க.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  10. //அழகான பாடலை உங்கள் தோழி அருமையாகப் பாடி இருக்கிறார்கள். உங்களுக்கும் அவருக்கும் என் வாழ்த்துக்கள்!//

    நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  11. //முத்துகுமரன் தரிசனம் காணுங்கள்//

    சீக்கிரம் வரேன் கைலாஷி.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  12. //இந்த வருடமும் பாடிப் பணிந்தேன் அக்கா.//

    நல்லது குமரன்.

    //இதனை முருகனருளிலும் இடுங்கள் அக்கா.//

    அவன்ல மனசு வெக்கணும்? :)

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  13. //அழகான வரிகள்...பாடலை பிறகு கேட்டு சொல்கிறேன் ;)//

    நன்றி கோபி :)

    ReplyDelete
  14. //நானும் ஒருமுறை வாய்விட்டுப் பாட....ஹிஹி...படிச்சுட்டேன்..முருகனருளட்டும்....நன்றிக்கா//

    உங்களப் போலதான் நானும் :)

    வருகைக்கு நன்றி மௌலி.

    ReplyDelete
  15. //இந்தக் "கவிநயக் காவடிச் சிந்தை" 150ஆம் பதிவாக இட, உங்கள் அனுமதி வேண்டுகிறேன்!
    இந்தக் கண்ணனுக்கும், அன்னை வேல் தருவீங்களா//

    கசக்குமா என்ன? மிக்க மகிழ்ச்சி கண்ணா.

    அன்போட கேட்டா அம்மா என்ன வேணாலும் தருவா :)

    //அம்மன் பாட்டு-100 மீனா அவர்கள், "பாடி" இருக்காங்க!
    ஸோ, நான் "கத்தத்" துவங்குகிறேன்! :)//

    ரொம்ப தன்னடக்கம் உங்களுக்குன்னு எனக்கு தெரியுமே!

    நன்றி கண்ணா.

    ReplyDelete
  16. கண்ணா,

    நேற்று கோவில் தைப்பூச விழாவில் நீங்க எழுதின காவடிச் சிந்தை பாடினோம் என்பதை மகிழ்ச்சியோட தெரிவிச்சுக்கறேன்!

    ReplyDelete
  17. பாடல் அருமை காவடி சிந்தை சற்று உரக்க பாடினால் தானே ...முருகன் காதில் விழும்
    ஏன் என்றல் அன்று காவடிகள் சத்ததில் கேட்காது
    ..அரோகரா ...............ரா.....ரா முருகா வெற்றி வேல் முருகா

    உங்கள் இ மெய்ல் விலாசம் தேவை

    சி த்ரம் ..//

    ReplyDelete
  18. வாருங்கள் திரு.ராமசந்திரன். இந்தப் பக்கம் முதல் வருகைன்னு நினைக்கிறேன். வருகைக்கும் பாடலை ரசித்தமைக்கும் மிக்க நன்றி. உங்கள் பாடலையும் "முருகனருளி"ல் வாசித்து மகிழ்ந்தேன். பின்னூட்டவில்லை.

    என்னுடைய மின்னஞ்சல் குமரனிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)