Sunday, January 10, 2010

சொல்



வட்ட வட்டக் கண்ணுக்குள்ளே
வெள்ளம் போலத் தேங்கி நின்ன
உப்புக் கரிச்ச நீரு
ஒலகம் பூரா நனச்சிருக்க—

பொந்துக்குள்ள பொத்தி வச்ச
அக்கினிக் குஞ்சப் போல
வயித்துக்குள்ள ஒரு நெருப்பு
வளர்ந்து என்ன எரிச்சிருக்க—

முறுக்கிப் புழிஞ்சு வச்ச
துணியப் போல எம்மனசு
தாளாத தொயரத்துல
தொவண்டு சலிச்சிருக்க—

வாளெடுத்து வீசுனாலும்
வாளா இருந்திருக்கும்
சொல்லெடுத்து வீசுறத
தாங்கலயே பூ மனசு.


-- கவிநயா

படத்துக்கு நன்றி: http://flickr.com/photos/my-cutout/475945861/sizes/m/

19 comments:

  1. அருமையான கவிதை சகோதரி !

    ReplyDelete
  2. நன்றாக இருக்கிறது சொல்லி இருக்கும் விதம்

    படிக்கும் பொழுது வலிக்கிறது

    ReplyDelete
  3. கவிதை கிளர்த்தும் சோகத்தை
    இன்னொரு கவிதையால் தான்
    மறக்க முடியும் போலிருக்கு.

    ReplyDelete
  4. http://www.youtube.com/watch?v=7qdA-dCqJuw

    எப்படித்தான் இந்த உள்ளமுருகும் பாடலை பாடினீர்களோ !
    பாடும்போதே கண்கள் பனித்து விட்டன.

    உங்கள் பாடல் இங்கே ஒலிக்கிறது.
    http://www.youtube.com/watch?v=7qdA-dCqJuw

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  5. கவிதை நெகிழ வைக்கிறது.

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  7. உங்களின் கவிதையைப் படிக்கும்பொழுது
    இந்தத் தலைப்பிற்குப் பொருத்தமான பரவை அழகிரி அவர்களின் வரிகள் தான் நினைவிற்கு வருகிறது

    அதோ...
    அந்த‌த் த‌மிழ‌ரின் க‌டையில்
    அரிசி வாங்கினேன்
    அவ‌ர் சொன்னார்

    " இது சூப்ப‌ர் அரிசி அப்பா "

    ஐய‌கோ...
    என் இர‌த்த்தில் ந‌ஞ்சு க‌ல‌க்கிய‌து;

    அரிசியில் க‌லப்ப‌ட‌மாய்க்
    " க‌ல் " கிட‌ந்தால் நீக்கிடுவேன்
    அவ‌ரின் உச்ச‌ரிப்புக்குள்
    ஆங்கில‌ச்
    " சொல் " அல்ல‌வா கிட‌க்கிற‌து !

    ReplyDelete
  8. //அருமையான கவிதை சகோதரி !//

    வருக ரிஷு. மிக்க நன்றி.

    ReplyDelete
  9. //நன்றாக இருக்கிறது சொல்லி இருக்கும் விதம்//

    நன்றி திகழ்.

    //படிக்கும் பொழுது வலிக்கிறது//

    :) வலி(க்கவிதைகள்) நிறைய வச்சிருக்கேன் :)

    ReplyDelete
  10. //கவிதை கிளர்த்தும் சோகத்தை
    இன்னொரு கவிதையால் தான்
    மறக்க முடியும் போலிருக்கு.//

    வருகைக்கு நன்றி ஜீவி ஐயா :)

    ReplyDelete
  11. //எப்படித்தான் இந்த உள்ளமுருகும் பாடலை பாடினீர்களோ !//

    படத்தைப் பார்த்தீங்களா தாத்தா... அப்படித்தான் :)

    //பாடும்போதே கண்கள் பனித்து விட்டன.//

    பாடலைக் கேட்டேன் தாத்தா. முன்பு தலைப்பாக வைக்க நினைத்த வரியையே நீங்க முதன்மையாக வைத்துப் பாடியிருப்பதற்கு மகிழ்ச்சியும் நன்றியும் :)

    ReplyDelete
  12. //ரசித்தேன் ;))//

    நன்றி கோபி :)

    ReplyDelete
  13. //:(((((((((((((((((((((((((((//

    நன்றி கீதாம்மா :)

    ReplyDelete
  14. //கவிதை நெகிழ வைக்கிறது.//

    நன்றி ஜெஸ்வந்தி.

    ReplyDelete
  15. //இனிய புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்//

    வாங்க திகழ். உங்களுக்கும் (தாமதமான) வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. //அரிசியில் க‌லப்ப‌ட‌மாய்க்
    " க‌ல் " கிட‌ந்தால் நீக்கிடுவேன்
    அவ‌ரின் உச்ச‌ரிப்புக்குள்
    ஆங்கில‌ச்
    " சொல் " அல்ல‌வா கிட‌க்கிற‌து !//

    நானும் ஆங்கிலக் 'கல்'லோட சொல்றேன், சூப்பர்! :) பகிர்தலுக்கு நன்றி திகழ்.

    ReplyDelete
  17. theeinar churra punn aarume araathu naavinaar churra vadu
    enru valluvar anre sonnaar.
    miga aalamana sokam niraintha kaithai

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)