ஆடிதேடி வெதவெதச்சு
அருகிருந்து பாத்துக்கிட்டு
சோர்வில்லாம களையெடுத்து
சொந்தப்புள்ள போல்வளத்து
ஊருக்கெல்லாம் சோறுபோடும்
உழவருக்கு…
நாளொண்ணுந் தவறாம
ஓய்வொண்ணும் எடுக்காம
காலங்காலமா உதிச்சு
கெழக்குப்பக்கம் தெனம்முளைச்சு
ஒலகமெல்லாம் வாழவைக்கும்
கதிரவனுக்கு…
அம்மான்னு சொல்லும்ஆனா
அம்மாவா இருக்கும்பசு
ஏருபூட்டி உழணுமுன்னா
எருதுஉறு துணையாயிருக்கும்
பிரதிபலன் பாக்காம
பலவிதமா உதவிசெய்யும்
மாடுகளுக்கும்…
இன்னும் இயற்கை அனைத்துக்கும், அன்பே உருவான இறைவனுக்கும்,
மனமார நன்றி சொல்லி,
பொங்கல் திருநாளில் அனைவர் இல்லங்களிலும் இன்பமே தங்கவும் இதயங்கனிந்த வாழ்த்துகளையும் தெரிவிச்சுக்கறேன்!
அன்புடன்
கவிநயா
பி.கு.: சில நாட்களாகவே பதிவுலகில் உலவ சரியா நேரம் கிடைக்கிறதில்ல. படிக்க வேண்டிய பதிவுகள் நெறய்ய்ய்ய சேர்ந்து போச்சு. சீக்கிரம் இந்த நிலை மாறும்னு நம்பறேன். நான் வரல்லைன்ன்னாலும், அதுக்காக கோவிச்சுக்காம, இங்கே தொடர்ந்து வருகை தரும் அன்புள்ளங்களுக்கு மிகவும் நன்றி! நீங்கள்ளாம் பொங்கலைப் போலவே... ச்சோ ச்வீட்! :)
படத்துக்கு நன்றி: தினமலர்
உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Wednesday, January 13, 2010
நன்றி... நன்றி...!
Subscribe to:
Post Comments (Atom)
எங்க வீட்ல பொங்கல் பொங்கிருச்சு உங்க கவிதை போல...
ReplyDeleteபொங்கலோ பொங்கல்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
கவிநயா....
ReplyDeleteஉங்களின் பொங்கல் வாழ்த்து பிரமாதம்.... நெய், முந்திரி நிறைய போட்டு செய்த பொங்கல் போல் உள்ளது...
//பி.கு.: சில நாட்களாகவே பதிவுலகில் உலவ சரியா நேரம் கிடைக்கிறதில்ல. படிக்க வேண்டிய பதிவுகள் நெறய்ய்ய்ய சேர்ந்து போச்சு. சீக்கிரம் இந்த நிலை மாறும்னு நம்பறேன். நான் வரல்லைன்ன்னாலும், அதுக்காக கோவிச்சுக்காம, இங்கே தொடர்ந்து வருகை தரும் அன்புள்ளங்களுக்கு மிகவும் நன்றி! //
இப்படி எல்லாம் சொல்லி எஸ்கேப் ஆகாம, சேர்ந்து இருக்கற பதிவையெல்லாம் படிங்க....
உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்... என் பொங்கல் வாழ்த்து, இதோ ஒரு சிறப்பு பதிவாய், உங்கள் பார்வைக்கு :
பொங்கலோ பொங்கல் http://jokkiri.blogspot.com/2010/01/blog-post.html
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கவிநயா.
ReplyDeleteபொங்கல் நல்வாழ்த்துக்கள் கவிக்கா..
ReplyDeleteபொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் ;))
ReplyDeletehappy pongal
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=QVNTmufySL8
ReplyDeletehappy pongal
s r
//இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்//
ReplyDeleteவாங்க திகழ். நன்றி.
//எங்க வீட்ல பொங்கல் பொங்கிருச்சு உங்க கவிதை போல...//
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி Sangkavi. வாழ்த்துகளுக்கு நன்றி.
//உங்களின் பொங்கல் வாழ்த்து பிரமாதம்.... நெய், முந்திரி நிறைய போட்டு செய்த பொங்கல் போல் உள்ளது...//
ReplyDeleteநன்றி கோபி.
//இப்படி எல்லாம் சொல்லி எஸ்கேப் ஆகாம, சேர்ந்து இருக்கற பதிவையெல்லாம் படிங்க....//
எஸ்கேப்லாம் இல்லப்பா... உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை... :)
//உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்... என் பொங்கல் வாழ்த்து, இதோ ஒரு சிறப்பு பதிவாய், உங்கள் பார்வைக்கு ://
வாழ்த்துகளுக்கு நன்றி, சீக்கிரம் உங்க வலைக்கு வந்து பார்க்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கணும்.
//இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கவிநயா.//
ReplyDeleteநன்றி ஜெஸ்வந்தி.
//பொங்கல் நல்வாழ்த்துக்கள் கவிக்கா..//
ReplyDeleteநன்றி மௌலி.
//பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் ;))//
ReplyDeleteநன்றி கோபி.
//happy pongal//
ReplyDeleteமுதல் வருகைன்னு நினைக்கிறேன். மிக்க நன்றி சக்தியின் மனம்.
//http://www.youtube.com/watch?v=QVNTmufySL8
ReplyDeletehappy pongal//
அருமை தாத்தா! நான் பாட முடியும்னு நினைக்காததை எல்லாம் நீங்க அழகா பாடிடறீங்க :) அன்புக்கு மிக்க நன்றி தாத்தா.
அழகாய் சொல்லியிருக்கீங்க நன்றி
ReplyDeleteஉழவருக்கு…
கதிரவனுக்கு…
மாடுகளுக்கும்…
இன்னும் இயற்கை அனைத்துக்கும்,
அன்பே உருவான இறைவனுக்குமாய்..!
பாடலுக்கு நாங்கள் சொல்லிக் கொள்கிறோம் உங்களுக்கு..
நன்றி நன்றி!
தாமதமான பொங்கல் வாழ்த்துக்கள்!
வாங்க ராமலக்ஷ்மி. மிக்க நன்றி.
ReplyDelete'சொத்து குவிப்பு' போல நீங்க 'விருது குவிப்பில்' ஈடுபட்டிருக்கீங்க போல :))) மிக்க மகிழ்ச்சியும் மனமார்ந்த வாழ்த்துகளும்!
:))!
ReplyDeleteஇந்தப் பதிவின் தலைப்பையே சொல்லிக்கறேன்:)!