Saturday, October 5, 2013

நவ துர்கா தேவியர் - ஜாதவேதோ, சந்திர காந்தா


அக்கினி ரூபம் கொண்டு ஒளிரும் தாயவள்
அக்கினிக் கவளேஆ தார மானவள்
ஆறுபொறிகளை கங்கை நதியில் சேர்த்தவள்
ஆறுமுகனுக்கு ஸ்கந்த மாதா வானவள்

ஜாதவேதோவாய் ஜொலி ஜொலிக்கும் துர்க்கையே
சரணம் என்றிட சங்கடம் தீர்க்கும் துர்க்கையே

வெம்மை வினைகளைத் தானே வாங்கிக் கொள்பவள்
வாங்கிய பின்னே அன்பால் தாங்கிக் கொள்பவள்
சந்திர காந்தக் கல்போல் குளிர்ந்து கருணை செய்பவள்
சந்திர பிறையைப் பதி போல் அணிந்து கொள்பவள்

சந்திர காந்தா வான முக்கண் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

--கவிநயா

(தொடரும்)

துர்க்காஷ்டகம்: http://www.youtube.com/watch?v=X1qVil87_m4

படத்துக்கு நன்றி: http://nadababa.com/gallery/devas/nava_durga/

6 comments:

  1. அருமை...

    வாழ்த்துக்கள்... இணைப்புகளுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன்.

      Delete
  2. அழகிய படமும் நல்ல பகிர்வும்!

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி இளமதி.

      Delete
  3. அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சே.குமார்.

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)