Monday, June 3, 2013

தளைப்படுத்தா அன்பு

ஒரு கற்பனை. அல்லது பெரும்பாலும் நடைமுறைதான் இது. பிள்ளை பள்ளிக்குச் சென்று விட்டான். (வேலைக்குப் போகாத :) அம்மா அவனுக்காக வேண்டியதெல்லாம் செய்கிறாள். துணி துவைக்கிறாள், அதைத் தேய்த்து வைக்கிறாள், அவனுக்குப் பிடித்ததைச் சமைத்து வைக்கிறாள், அவனுக்கு வேண்டியதை வாங்கி வைக்கிறாள். அவனுக்கோ பள்ளிக்குச் சென்ற பின், நண்பர்களைப் பார்த்த பின், எல்லாமே மறந்து விடுகிறது. பள்ளி வேலைகளிலும், நண்பர்களோடு விளையாடுவதிலும் அவன் கவனம் சென்று விடுகிறது. அம்மாவின் நினைவே வருவதில்லை. ஆனால், இங்கே அம்மாவோ அவனையே நினைத்துக் கொண்டு, அவனுக்காகவே காத்திருக்கிறாள்.


தாகூரின் இந்தக் கீதாஞ்சலி கவிதை. எனக்கு மிகப் பிடித்தது. உலகத்தாரின் அன்பு எல்லாமே, பெற்றோர், கணவன், மனைவி, பிள்ளை, நண்பர்கள் உட்பட, நம்மை எப்படியோ தளைப்படுத்துவதாகத்தான் இருக்கிறது, ஆனால், இறைவனின் அன்போ அப்படி இல்லை. நம்மை எப்போதும் நேசித்துக் கொண்டிருப்பவன் இறைவன். நாம் அவனை மறந்தாலும், நமக்காகவே அவன் காத்துக் கொண்டிருக்கிறான், பள்ளி சென்ற பிள்ளைக்காகக் காத்திருக்கும் தாயைப் போல.

Free Love
By all means they try to hold me secure who love me in this world.
But it is otherwise with thy love which is greater than theirs,
and thou keepest me free.
Lest I forget them they never venture to leave me alone.
But day passes by after day and thou art not seen.
If I call not thee in my prayers, if I keep not thee in my heart,
thy love for me still waits for my love.

Original in English by Rabindranath Tagore

***

என்னை நேசிப்போர் அனைவரும்
இயன்ற வழிகளிலெல்லாம் என்னைக்
இறுக்கிப் பிடித்து வைத்திருக்கிறார்கள்.
ஆயின்,
அவர்கள் எல்லோரையும் விட
என்னை அதிகம் நேசிக்கும் நீயோ,
என்னை விடுவித்தே வைத்திருக்கிறாய்.
அவர்களை நான் மறந்து விடுவேனோ என்ற அச்சத்தினால்
அவர்கள் என்னைத் தனியே விடுவதே இல்லை.
ஆனால் ஒவ்வொரு நாளும் கழிந்து கொண்டே இருக்கிறது,
உன்னைக் காணாமலேயே…
என் பிரார்த்தனைகளின் மூலம்
நான் உன்னை அழைக்காதிருக்கும் போதிலும்,
என் இதயத்தில் உன்னைப்
போற்றி வைக்காதிருக்கும் போதிலும் கூட,
எனக்கான உன் அன்பு,
என் அன்புக்காகக் காத்துக் கொண்டுதான் இருக்கிறது…

--கவிநயாபடத்துக்கு நன்றி: http://comefillyourcup.com/2012/10/01/mothers-in-waiting/


25 comments:

 1. அருமையான கவிதை. அழகான தமிழாக்கம். நன்றி கவிநயா.

  ReplyDelete
 2. நல்லதொரு பகிர்வு

  ReplyDelete
 3. கீதாஞ்சலி கவிதை அருமை...

  /// பள்ளி சென்ற பிள்ளைக்காகக் காத்திருக்கும் தாயைப் போல... ///

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. அருமையான மொழி பெயர்ப்பு. ஹிந்தியில் வாசித்திருக்கிறேன், வாசிப்பேன் அவ்வப்போது. ஆங்கிலத்தில் வாசித்ததில்லை. மிக்க நன்றி பகிர்வுக்கு. கடவுளை அம்மாவுக்கு உவமைப் படுத்தியதும், காத்திருக்கும் தாயைப் போல் இறைவனும் காத்திருக்கிறான் என்பதும் தாகூரின் கீதாஞ்சலி முழுக்கக் காணலாம். :))))

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதாம்மா! என்கிட்ட ஆங்கிலப் புத்தகம்தான் இருக்கு. என் மாமனார்கிட்ட இருந்து சுட்டுக்கிட்டு வந்த அந்தக் கால புத்தகம் :) அது மட்டுமில்லாம ஹிந்தி தெரியாத சிறுபான்மையினரில் நானும் ஒருத்தி :) நீங்க வந்து வாசிச்சதில் மகிழ்ச்சி அம்மா :)

   //கடவுளை அம்மாவுக்கு உவமைப் படுத்தியதும், காத்திருக்கும் தாயைப் போல் இறைவனும் காத்திருக்கிறான் என்பதும் தாகூரின் கீதாஞ்சலி முழுக்கக் காணலாம். :))))//

   அப்படியா சொல்றீங்க. பல கவிதைகளை வாசிக்கும்போது எனக்கு அதில் மதுர பாவம் அதிகம் தெரிந்த மாதிரி இருந்தது :) அல்லது எனக்குத்தான் அப்படித் தோணுச்சோ?

   Delete
 5. இன்றைக்குக் காலையில் தான் இதைப் பற்றி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு தாய் என்ற இடத்திலிருந்து அவர் தன் பிள்ளைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது..
  ஆச்சரியம்..!

  ஆங்கிலக் கவிதைகள் இதைக் கடந்து ஒரு நூற்றாண்டு வந்தபின்பும் தேவையில்லாமல் thee thou பயன்பாடு தாகூரிடம் காணப்பட்டதாகத் தோன்றும்.

  ReplyDelete
  Replies
  1. //இன்றைக்குக் காலையில் தான் இதைப் பற்றி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு தாய் என்ற இடத்திலிருந்து அவர் தன் பிள்ளைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது..
   ஆச்சரியம்..!//

   Great minds think alike :) உங்க க்ரேட் மைண்ட் கூட நானும் அப்படியே நைஸா சேர்ந்துக்கறேன் :) ஹி...ஹி...

   //ஆங்கிலக் கவிதைகள் இதைக் கடந்து ஒரு நூற்றாண்டு வந்தபின்பும் தேவையில்லாமல் thee thou பயன்பாடு தாகூரிடம் காணப்பட்டதாகத் தோன்றும்.//

   ம்... ஆனா அப்படிப் படிக்கும் போது நல்லாதானே இருக்கு?

   Delete
 6. இதென்ன தாகூர் வாரமா?

  ReplyDelete
  Replies
  1. முந்தியே எழுதி வெச்சது. இந்த வாரம் பதிவிடலாம்னு தீர்மானிச்சப்புறம் தான் ராமலக்ஷ்மியோடது பார்த்தேன் :) ஆனா என்கிட்ட வேற சரக்கு இல்லாததால இதையே இறக்கிட்டேன்!

   வருகைக்கு மிகவும் நன்றி அப்பாதுரை!

   Delete
 7. கீதாஞ்சலி முழுமையாகப் படித்ததில்லை. ஒரு சில கவிதைகள் மட்டுமே வாசித்திருக்கிறேன். பகிர்வுக்கு முதலில் நன்றி.
  கவிதையும் மொழிபெயர்ப்பும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. நானும் கொஞ்ச நாளாதான் படிக்கிறேன். ஒரு கவிதை படிச்சா அதை அசை போடவே பல நாளாகும். சில கவிதைகள் படிச்ச உடனே மனசுக்கு நெருக்கமா தெரியும்.

   வருகைக்கும் ரசிப்புக்கும் மிகவும் நன்றி சிவகுமாரன்!

   Delete
 8. ஒவ்வொருத்தருடைய பார்வையும் வித்தியாசப்படும் கவிநயா, அவரவர் எண்ணங்களுக்கேற்ப. :))) பொதுவாக இது ஆன்மா ஈசனிடம் ஐக்கியம் அடையவேண்டித் தேடி, வாடியதைக் குறித்து எனச் சொல்வாரும் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. //பொதுவாக இது ஆன்மா ஈசனிடம் ஐக்கியம் அடையவேண்டித் தேடி, வாடியதைக் குறித்து எனச் சொல்வாரும் உண்டு. //

   அப்படித்தான் நானும் புரிந்து கொண்டேன் அம்மா :)

   நேற்று மதுர பாவம் என்று சொல்லிய பிறகு மறுபடி சில கவிதைகளை வாசித்துப் பார்த்தேன். நான் சொன்னது மிகவும் தவறு என்று தோன்றியது. ஒரு சில கவிதைகளை வைத்து அப்படிப் பொதுவாகச் சொல்வது தவறுதானே? உண்மையில் தாஸ்ய பாவத்திலும் நிறைய கவிதைகள் இருக்கின்றன :)

   Delete
 9. உண்மையில் தாஸ்ய பாவத்திலும் நிறைய கவிதைகள் இருக்கின்றன :)//


  எல்லாமே தாஸ்ய பாவம் என்பது என் புரிதல். :)))))))

  ReplyDelete
  Replies
  1. ஆனால் முதலில் இப்படிச் சொன்னீர்களே : )

   //காத்திருக்கும் தாயைப் போல் இறைவனும் காத்திருக்கிறான் என்பதும் தாகூரின் கீதாஞ்சலி முழுக்கக் காணலாம்//

   தாஸ்ய பாவம் என்பது வேறு அல்லவா?

   சரி..சரி.. நான் இதோடு நிறுத்திக் கொள்கிறேன். ஆன்மாவின் தேடல் என்பதே பொதுவான பொருள். அவரே வந்து சொன்னாலொழிய அவர் என்ன நினைத்து எழுதினார் என்று யாருக்கு நிச்சயமாகத் தெரியும்? :)

   Delete
 10. ஆமாம், இங்கே கொடுத்த பதிவின் பின்னூட்டத்துக்கு ஏற்றவாறு மறுமொழி கொடுக்கணும் இல்லையா? நீங்கள் தாயைப் பற்றித் தான் குறிப்பிட்டிருந்தீர்கள், அப்போவே எழுதணும்னு! :))) ஆனால் மறுப்புச் சொல்ல வேண்டாம்னு சொல்லலை. நீங்க இப்போ தாஸ்ய பாவம் குறித்துக் குறிப்பிட்டதும் ஆமோதிப்புச் செய்தேன். ஒவ்வொருத்தரின் புரிதலும் நிச்சயமாய் வேறுபடும். :))) அப்போ சொன்னதிலும் தப்பில்லை, இப்போ சொல்வதிலும் தப்பில்லை. இது ஒண்ணும் வெட்டி விவாதம் இல்லையே! கீதாஞ்சலியின் உள்ளே ஆழ்ந்த கருத்தைப் புரிந்து கொள்ளும் ஒரு சின்ன முயற்சி.

  கீதாஞ்சலி முழுவதும் ஆன்மாவின் தேடலும், இறைவனின் காத்திருத்தலும் தான் காண முடியும் என்பது என் கருத்து. ஆன்மாவை குழந்தையாகவும், இறைவனைத் தாயாகவும் உருவகப் படுத்தி இருக்கிறீர்கள். அவ்வளவே! தவறே இல்லை. :)))))))

  ReplyDelete
 11. மறந்துட்டேனே, தாஸ்ய பாவம் நிச்சயமா வேறு தான்.

  ReplyDelete
 12. நன்றி கீதாம்மா! நீங்க ரொம்ப ச்வீட்! :)

  ReplyDelete
 13. கீதாஞ்சலி கவிதை...கீதாஞ்சலி கவிதை மொழி பெயர்ப்பும் கனடிய சி. யெயபரதன் திண்ணை இணையத்தில் தொடராக எழுதியுள்ளார் முன்பு. என்னிடம் பல பிரதிகள் உள்ளன திண்ணையில் எடுத்தவை . தங்கள் முயற்சிக்கு இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் வேதா. திரு.ஜெயபாரதன் அவர்களின் மொழி பெயர்ப்பை நானும் வாசித்திருக்கிறேன். வருகைக்கு மிக்க நன்றி!

   Delete
 14. சிறப்பானதோர் மொழிபெயர்ப்பு.....

  பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வெங்கட்!

   Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)