உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Sunday, February 7, 2010
ஆறிலும் கத்துக்கலாம்…, அறுபதிலும் கத்துக்கலாம்…!
அப்படின்னு சொல்லத்தான் ஆசை. அபூர்வமா இது உண்மையாகவே இருந்தால் கூட 60-ஐ 40-ன்னாவது கொஞ்சம் குறைக்கத்தான் வேணும்!
பரதநாட்டியம்!
இந்தக் காலத்தில் தங்கள் குழந்தைகள் படிப்பு தவிர பல கலைகளும் கத்துக்கணும், பல துறைகளிலும் சிறந்து விளங்கணும்னு எல்லா பெற்றோர்களும் ரொம்ப விரும்பறாங்க. பல அம்மாக்கள் பெண் குழந்தை பிறந்த உடனேயே “எப்பங்க என் பொண்ணை டான்ஸ் க்ளாசில் சேர்க்கலாம்?”னு கேட்க ஆரம்பிச்சிருவாங்க!
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் பரதம் கத்துக்க ஆரம்பிப்பதற்கு குறைஞ்சது 6 வயசாவது ஆகியிருக்கணும். அப்பதான் குழந்தைகளுக்கு கை கால்களை, விரல்களை விருப்பம் போல் நீட்டவும், மடக்கவும், சொல்வதை உள்வாங்கிப் புரிந்து கொண்டு அதன்படி செய்யவும் முடியும். coordination and comprehension ரொம்ப அவசியம்.
சில பேர் ஆர்வக் கோளாறால ரொம்ப சீக்கிரமே ஆரம்பிச்சாலும், வயசுக்கேத்த மாதிரியும், கிரகிப்புத் தன்மைக்குத் தகுந்த மாதிரியும்தான் அவங்களோட கத்துக்கற வேகமும் இருக்கும். அதனால குழந்தைகளை அவசரப்பட்டு ரொம்ப இளம் வயசிலேயே வகுப்பில் சேர்க்க வேண்டாம்! 4 வயசிலேயே அருமையா ஆடற குழந்தைகளும் இருப்பாங்க. விதி விலக்குகள் எல்லாத்திலயும் இருக்கே.
முத்திரையெல்லாம் கத்துக்க ஆரம்பிக்கும் போது இந்தக் குட்டிப் புள்ளைங்க ஒரு கையை வச்சு இன்னொரு கை விரல்களை மடக்கி அந்தக் கையை அந்த முத்திரையை செய்ய வைக்கிற அழகு இருக்கே, பார்க்க கண்கொள்ளாக் காட்சி! :)
கத்துக்க ஆரம்பிச்ச பிறகு ஆடிப் பார்க்கிறதும் பயிற்சி செய்யறதும் முக்கியம்தான். ஆனா குழந்தைகளுக்கு வெறுப்பு வந்திர்ற அளவு அவங்களை வற்புறுத்தக் கூடாது. எப்பவும் தன்மையா சொல்லி, நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துச் சொல்லிக்கிட்டே இருக்கணும். ஒரு சில பிள்ளைகளுக்கு நடனம் கத்துக்கறதில் விருப்பமே இருக்காது, பெற்றோரின் விருப்பத்துக்காக கஷ்டப்பட்டு வருவாங்க. அதனால பெற்றோருக்கும், சொல்லித் தர்றவங்களுக்கும், அந்த குழந்தைக்கும், இப்படி எல்லோருக்குமே கஷ்டம்தான்.
அதனால குழந்தைக்கு எதனாலாவது ஆர்வம் குறையற மாதிரி இருந்தா, அவங்க சொல்ற காரணங்களை காது கொடுத்துக் கேளுங்க. ஆனால், சில காலத்திற்கு பிறகுதான் குழந்தைக்கு ஓரளவாச்சும் தெரியும் தனக்கு இது பிடிக்குதா, இல்லையான்னு. அதை புரிஞ்சுக்கிட்டு பெற்றோர்கள் அதற்குத் தகுந்தாற்போல் நடந்துக்கணும். அவங்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து முடிவுகள் எடுங்க.
பொதுவா, சிறுமிகள் பருவ வயசை எட்டறதுக்கு முன்னாடியே கத்துக்க ஆரம்பிக்கிறது நல்லது. டீனேஜ் வயசில் அவங்களுக்கு பல கவலைகளும் பல distractions-ம் இருக்கும். நண்பர் வட்டத்தின் பாதிப்பு நிறையவே இருக்கும். அதனால, சின்ன வயசிலேயே ஆரம்பிச்சிட்டா, வளரும்போதே அவங்களுக்கு பரதமும் வாழ்க்கையில் ஒரு பகுதியாக ஆயிடும்.
நல்ல அங்க சுத்தத்தோட அடவுகள் (steps) பண்ணவும், ஓரளவு பாவம் வரவும் குழந்தைக்கு மனதிலும் முதிர்ச்சி வரணும். இதுக்கெல்லாம் சில வருஷங்களாவது ஆகும். “30 நாட்களில் ஹிந்தி” அப்படின்னு அவசரமா கத்துக்கற மாதிரி இதுல சாத்தியமில்லை. அதனால இதை புரிஞ்சுக்கிட்டு பெற்றோர்கள் கொஞ்சம் பொறுமையாத்தான் இருக்கணும்.
பரதம் கத்துக்க அதிகபட்ச வயசுன்னு ஒண்ணும் இல்லை! ஆர்வம் இருந்தா, உடம்பில் தெம்பு இருந்தா, யார் வேணும்னாலும் கத்துக்கலாம்! ஆனால் என்ன இருந்தாலும் சின்ன வயசில் உடம்பு வளையற மாதிரி வயசான பிறகு வளையாது. கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும், தீவிரமான பயிற்சி இருந்தா அதையுமே சரி செய்திடலாம்.
உதாரணத்துக்கு நானே இருக்கேன். 30-களில்தான் கத்துக்க ஆரம்பிச்சு, அரங்கேற்றமும் செய்தேன். இப்ப நடனம் சொல்லித் தரவும் செய்யறேன். என்னாலேயே முடியும்னா, ஆர்வம் இருந்தால் உங்களாலும் முடியும்னு சொல்லத்தான் இதைக் குறிப்பிட்டேன். நான் நடனம் கத்துக்க ஆரம்பிச்சப்ப என் வகுப்புத் தோழிகளெல்லாம் 7, 8 வயசுக் குழந்தைங்க :) நான் மட்டும்தான் பெரிய்ய்ய்யவ. ஆனா அதெல்லாம் என்னை கட்டுப்படுத்தலை. இப்போ பார்த்தீங்கன்னா, எனக்குப் பிறகு, எங்க ஊரிலேயே எக்கச்சக்க இல்லத்தரசிகள் பரதம் கத்துக்க ஆரம்பிச்சிட்டாங்க.
எந்த ஒரு செயலுமே முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது சிறந்த தியானமாகவும் ஆயிடும். கலைகள் இயல்பாகவே சுவாரஸ்யமாக இருக்கறதால, அவற்றில் ஈடுபடுதலும் இயல்பாகவே அமையுது. நடனக்கலைக்கு இருக்கும் இன்னுமொரு சிறப்பு, அது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் இயக்கறதால, தியானம் (மனசுக்கு), யோகம் (உடம்புக்கு), இரண்டுமே சாத்தியமாகும்படி செய்வதுதான்.
என்ன, பரதநாட்டிய வகுப்பை தேடி கிளம்பிட்டீங்களா? :)
அன்புடன்
கவிநயா
பி.கு.: நண்பர் ஒருவர் சொல்லுவார், 'பரதமும் தெரியும், எழுதவும் தெரியும்; பரதம் பற்றி ஏன் எழுதறதில்லை'ன்னு. ஏன்னா, எழுதற அளவு எனக்கு ஒண்ணும் தெரியாது :( இருந்தாலும், அவர் வார்த்தைக்கு மதிப்பு குடுக்கறதுக்காகவும், எழுதறதுக்காகவாச்சும் கொஞ்சமாவது தெரிஞ்சுக்கலாமே என்கிற சுயநலத்திற்காகவும், அப்பப்ப பரதக்கலை பத்தி ஏதாச்சும் எழுதலாம்னு இருக்கேன்.
Subscribe to:
Post Comments (Atom)
பரத நாட்டியம் பற்றி விளக்கமா எழுதுங்க. காத்திருக்கேன்.
ReplyDeleteசித்திரமும் கைப்பழக்கம்...என்பது போலதான் நடனமும் என்கிறீர்கள்.. :)
ReplyDeletenice keep writing.best of luck
ReplyDelete//முத்திரையெல்லாம் கத்துக்க ஆரம்பிக்கும் போது இந்தக் குட்டிப் புள்ளைங்க ஒரு கையை வச்சு இன்னொரு கை விரல்களை மடக்கி அந்தக் கையை அந்த முத்திரையை செய்ய வைக்கிற அழகு இருக்கே, பார்க்க கண்கொள்ளாக் காட்சி//
ReplyDeleteநான் பாத்தது இல்லை.. ஆனால் உணரமுடிகிறது... so cute.
//30-களில்தான் கத்துக்க ஆரம்பிச்சு, அரங்கேற்றமும் செய்தேன். இப்ப நடனம் சொல்லித் தரவும் செய்யறேன்.//
ஆஹா.. பாராட்டுக்கள்..
எந்த ஒரு செயலுமே முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது சிறந்த தியானமாகவும் ஆயிடும்//
உண்மை தான்.. மொத்தத்தில் நல்ல பதிவு.. இதுபோல் நிறைய எழுதுங்கள்..
//இப்போ பார்த்தீங்கன்னா, எனக்குப் பிறகு, எங்க ஊரிலேயே எக்கச்சக்க இல்லத்தரசிகள் பரதம் கத்துக்க ஆரம்பிச்சிட்டாங்க.//
ReplyDeleteமிக சரியே கவிநயா... கற்றுக்கொள்ள ஆர்வம் மட்டுமே வேண்டும்.... வயது ஒரு தடையே அல்ல....
//பி.கு.: நண்பர் ஒருவர் சொல்லுவார், 'பரதமும் தெரியும், எழுதவும் தெரியும்; பரதம் பற்றி ஏன் எழுதறதில்லை'ன்னு. ஏன்னா, எழுதற அளவு எனக்கு ஒண்ணும் தெரியாது :( இருந்தாலும், அவர் வார்த்தைக்கு மதிப்பு குடுக்கறதுக்காகவும், எழுதறதுக்காகவாச்சும் கொஞ்சமாவது தெரிஞ்சுக்கலாமே என்கிற சுயநலத்திற்காகவும், அப்பப்ப பரதக்கலை பத்தி ஏதாச்சும் எழுதலாம்னு இருக்கேன்.//
கண்டிப்பாக எழுதுங்கள் கவிநயா.. வாழ்த்துக்கள்........
நீங்க பதிவுல பரதம் ஆடும் போதே தெரியும்..உங்களுக்குள்ள ஏதே இருக்குன்னு...!
ReplyDeleteவாழ்த்துக்கள் ;)
\\அப்பப்ப பரதக்கலை பத்தி ஏதாச்சும் எழுதலாம்னு இருக்கேன்.\\
ரைட்டு ;))
சொல்லுங்க, சொல்லுங்க, பரதம் நானும் ஆட ஆரம்பிக்கலாமானு நினைக்கிறேன்! :))))))
ReplyDeleteநல்ல தன்னம்பிக்கை ஊட்டுற விதமா சொல்லிருக்கீங்க
ReplyDelete//அதனால குழந்தைகளை அவசரப்பட்டு ரொம்ப இளம் வயசிலேயே வகுப்பில் சேர்க்க வேண்டாம்! 4 வயசிலேயே அருமையா ஆடற குழந்தைகளும் இருப்பாங்க. விதி விலக்குகள் எல்லாத்திலயும் இருக்கே.
ReplyDelete// இல்லைனா என்னை மாதிரி ஒரு முன் அனுபவமாவது இருக்கனும்...:)
//சொல்லுங்க, சொல்லுங்க, பரதம் நானும் ஆட ஆரம்பிக்கலாமானு நினைக்கிறேன்!// கீதாம்மா நுழையாத துறையே கிடையாது!!!....:)
ReplyDelete//பரத நாட்டியம் பற்றி விளக்கமா எழுதுங்க. காத்திருக்கேன்.//
ReplyDeleteஉங்க ஆர்வம் கண்டு மகிழ்ச்சியா இருக்கு, அமைதிச்சாரல். முடிஞ்ச வரை எழுதறேன். உங்களோடது முதல் வருகைன்னு நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)
//சித்திரமும் கைப்பழக்கம்...என்பது போலதான் நடனமும் என்கிறீர்கள்.. :)//
ReplyDeleteசரிதான் மௌலி :) வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றிப்பா.
//nice keep writing.best of luck//
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி யாதவன் :)
//உண்மை தான்.. மொத்தத்தில் நல்ல பதிவு.. இதுபோல் நிறைய எழுதுங்கள்..//
ReplyDeleteகண்டிப்பா முயற்சிக்கிறேன். ரசித்தமைக்கு மிக்க நன்றி ஸ்வர்ணரேக்கா :)
//கற்றுக்கொள்ள ஆர்வம் மட்டுமே வேண்டும்.... வயது ஒரு தடையே அல்ல....//
ReplyDeleteஅதே, அதே!
//கண்டிப்பாக எழுதுங்கள் கவிநயா.. வாழ்த்துக்கள்........//
வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி கோபி.
//நீங்க பதிவுல பரதம் ஆடும் போதே தெரியும்..உங்களுக்குள்ள ஏதே இருக்குன்னு...!
ReplyDeleteவாழ்த்துக்கள் ;)//
அட, அதுவும் அப்படியா. மிக்க நன்றி கோபி(நாத்) :)
//சொல்லுங்க, சொல்லுங்க, பரதம் நானும் ஆட ஆரம்பிக்கலாமானு நினைக்கிறேன்! :))))))//
ReplyDeleteரொம்ப சந்தோஷம் :) நினைச்சதோட நிற்காம உடனே ஆடவும் ஆரம்பிங்க கீதாம்மா :)
//நல்ல தன்னம்பிக்கை ஊட்டுற விதமா சொல்லிருக்கீங்க//
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணாமலையான் :)
//இல்லைனா என்னை மாதிரி ஒரு முன் அனுபவமாவது இருக்கனும்...:)//
ReplyDeleteஅட, தக்குடுபாண்டிக்கு முன் அனுபவம் வேற இருக்கா? ஹ்ம்... எனக்கு உங்கள பத்தி ஒண்ணுமே தெரியலைன்னு நல்லாவே தெரியுது :) முதல் வருகைக்கு நன்றி தம்பி :)
//கீதாம்மா நுழையாத துறையே கிடையாது!!!....:)//
ReplyDeleteஉங்க அண்ணாவுக்கும் கீதாம்மாவுக்கும்தான் ஏழாம் பொருத்தம்னு நினைச்சேன். உங்களுக்கும் அப்படித்தானா? :)
அனுபவப் பகிர்வு அசத்தலாக இருக்கிறது. குழந்தைகளுக்குக் கற்பிப்பது கோடிப் புண்ணியம் தரும்!
ReplyDelete//அனுபவப் பகிர்வு அசத்தலாக இருக்கிறது. குழந்தைகளுக்குக் கற்பிப்பது கோடிப் புண்ணியம் தரும்!//
ReplyDeleteவாருங்கள் ஜீவி ஐயா. ஆசிகளுக்கு மிக்க நன்றி.
அருமையான ஆரம்பம்.
ReplyDelete//நான் நடனம் கத்துக்க ஆரம்பிச்சப்ப என் வகுப்புத் தோழிகளெல்லாம் 7, 8 வயசுக் குழந்தைங்க :) நான் மட்டும்தான் பெரிய்ய்ய்யவ. ஆனா அதெல்லாம் என்னை கட்டுப்படுத்தலை. இப்போ பார்த்தீங்கன்னா, எனக்குப் பிறகு, எங்க ஊரிலேயே எக்கச்சக்க இல்லத்தரசிகள் பரதம் கத்துக்க ஆரம்பிச்சிட்டாங்க.//
சபாஷ். நல்ல முன் உதாரணம் நீங்களே:)!
//எந்த ஒரு செயலுமே முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது சிறந்த தியானமாகவும் ஆயிடும். //
உண்மை கவிநயா.
வாங்க ராமலக்ஷ்மி. அன்பிற்கு மிகவும் நன்றி.
ReplyDeleteபரதம் பற்றி எழுதுறேன்னு சொன்னதுக்கு நன்றி அக்கா. ரொம்ப நாளா நானும் நினைக்கிறதுண்டு. பேரை கவிநயான்னு வச்சுக்கிட்டு கவி-பகுதியை மட்டும் தான் எழுதிக்கிட்டு இருக்காங்களே, எப்ப நயா-பகுதி எழுதுவாங்கன்னு. :-)
ReplyDeleteதேஜஸ்வினி 5 வயசுல இருந்து வகுப்புக்கு போறா. ஆனா இப்பத் தான் (இப்ப ஏழு வயசு) கொஞ்சமா சின்ன சின்ன அடவுகள் கத்துக்கறா. இவ்வளவு நாளாகுதேன்னு என் மனைவி சொல்லுவாங்க; ஆமா - இப்படித் தான் - ரொம்ப நாளாகும்ன்னு சொல்லுவேன். அதுவும் வாரத்துக்கு ஒரு நாள் அரை மணி நேரம் எவ்வளவு தான் கத்துக்க முடியும்ன்னும் கேப்பேன்.
இப்ப ஒரு மாசமா 'நானும் போயி கத்துக்கவா'ன்னு கேக்க ஆரம்பிச்சிருக்காங்க. தாராளமா கத்துக்கலாமேன்னு சொன்னேன். சின்ன வயசுல வகுப்புக்குப் போய் உடம்பு வளையலைன்னு வந்துட்டாங்களாம். அதான் யோசிக்கிறேன்னு சொன்னாங்க. இப்ப இந்தப் பதிவை அனுப்புறேன் அவங்களுக்கு. :-)
வருக குமரன் :)
ReplyDelete//கவி-பகுதியை மட்டும் தான் எழுதிக்கிட்டு இருக்காங்களே, எப்ப நயா-பகுதி எழுதுவாங்கன்னு. :-)//
அதுவா... நயா பகுதிக்கு அபிநயம் பிடிச்சு காட்டறது சுலபம்; எழுதறதுதான் கஷ்டம் :)
//அதுவும் வாரத்துக்கு ஒரு நாள் அரை மணி நேரம் எவ்வளவு தான் கத்துக்க முடியும்ன்னும் கேப்பேன்.//
உண்மைதான். இங்கேல்லாம் ஆரம்பத்தில் அரை மணி நேரம், பிறகு 1 மணி நேரம் ஆக்கிடுவோம்... :)
தேஜு கத்துக்கறது தெரிஞ்சு ரொம்ப சந்தோஷம் குமரன் :)
//இப்ப ஒரு மாசமா 'நானும் போயி கத்துக்கவா'ன்னு கேக்க ஆரம்பிச்சிருக்காங்க. தாராளமா கத்துக்கலாமேன்னு சொன்னேன்.//
ஆஹா, இப்படில்ல இருக்கணும்? கண்டிப்பா கத்துக்க சொல்லுங்க. இங்கேயும் நிறைய அம்மா/பொண்ணுங்க கத்துக்கறாங்க. அம்மாவும் கத்துக்கும் போது குட்டி பொண்ணுகளோட நடனத்திலும் பயிற்சியிலும் நிறைய (நல்ல) மாற்றம் இருக்கு. அதற்காகவாவது கத்துக்கறது நல்லதுதான் :)
வருகைக்கு மிக்க நன்றி குமரன்.
வெற்றி பெற வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி திகழ் :)
ReplyDeleteதமிழ் மனம் முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...
ReplyDelete// யோவ் said...
ReplyDeleteதமிழ் மனம் முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...//
தகவலுக்கு நன்றி. நீங்கள் சொன்ன பிறகே தெரிந்து கொண்டேன். உங்கள் கவிதை தேர்வாகியிருப்பதற்கும் வாழ்த்துகள்.
வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
கவிநயா,
ReplyDeleteபரதம் பற்றிய உங்கள் பதிவுகள் அருமை. என் மகளுக்கு dance தியரி கற்றுத்தர மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் விரிவாக எழுதவும்.
என் மகளின் நடன ஆசிரியையும் "உங்களுக்கு நல்ல ஆர்வம் இருக்கிறது." என்று கூறினார். என் மகளின் பள்ளி போட்டிக்கு நான் கற்று கொடுத்திருந்ததை பார்த்து விட்டு பலரும் நீங்கள் dancerரா என்று கேட்டார்கள். சிறு வயதில் பரதம் கற்றுகொள்ள மிகவும் விரும்பினேன். ஆனால் அப்போது வசதி இல்லை. இப்போதோ, உடலில் சிறு சிறு பிரச்சனைகள். இவற்றோடு நடனம் பயில முடியுமா?தயவு செய்து விளக்கவும்.
வாங்க தானைத் தலைவி. என்னோட புவனேஸ்வரி பாட்டைக் கேட்டுச்சு 'எஸ்' ஆகிட்டீங்கன்னு நினைச்சேன்! மறுபடி உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி :)
ReplyDelete//என் மகளுக்கு dance தியரி கற்றுத்தர மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.//
ரொம்ப சந்தோஷமா இருக்கு, கேட்க :)
//மேலும் விரிவாக எழுதவும்.//
முயற்சிக்கிறேன்...
//என் மகளின் நடன ஆசிரியையும் "உங்களுக்கு நல்ல ஆர்வம் இருக்கிறது." என்று கூறினார்.//
உங்க மகளுக்கு என் அன்பான வாழ்த்துகள்!
//என் மகளின் பள்ளி போட்டிக்கு நான் கற்று கொடுத்திருந்ததை பார்த்து விட்டு பலரும் நீங்கள் dancerரா என்று கேட்டார்கள்.//
வாவ்!
//சிறு வயதில் பரதம் கற்றுகொள்ள மிகவும் விரும்பினேன்.//
நானும்!
//இப்போதோ, உடலில் சிறு சிறு பிரச்சனைகள். இவற்றோடு நடனம் பயில முடியுமா?தயவு செய்து விளக்கவும்.//
அச்சோ! என்ன மாதிரி பிரச்சனைன்னு தெரியாம ஒண்ணும் சொல்ல முடியாதே. உங்க மகளோட நடன ஆசிரியையே கேட்டுப் பார்க்காலாமே.
உங்க விருப்பம் நிறைவேற புதுகை அம்மா அருளட்டும் :)
நன்றி கவிநயா,
ReplyDeleteபுவனேஸ்வரி பாடலை கேட்கும் வழி எனக்கு தெரியவில்லை. ஆனால் வேறு பாடலை காப்பி செய்து அதற்கு மெட்டும் போட்டு விட்டேன். அப்பப்பா ! எவ்வளவு எழுதி இருக்கிறிர்கள். அன்னை பராசக்தி தங்களுக்கு எல்லா வளங்களையும் அருளட்டும்.
நீங்கள் சொல்வது உண்மை, அன்னையின் திருஉளம் எப்படியோ அப்படித்தானே நடக்கும். என் மகளின் டீச்சரை கேட்பது பற்றி ஒன்றுமில்லை ஆனால் நான் அந்த மாதிரி திட்டத்தில் இருப்பது இன்னமும் அவருக்கு தெரியாது. தெரிந்தால் ஊரை விட்டே ஓடிவிட்டால் என்ன செய்வது....!? :)))))
//காப்பி செய்து அதற்கு மெட்டும் போட்டு விட்டேன்.//
ReplyDeleteஉங்களுக்கு பாடவும் தெரியுமா :) மெட்டமைக்கிறதை(யெல்லாம்) கண்டிப்பா எனக்கு அனுப்பணும்! எந்த பாடல் எடுத்தீங்க?
//அன்னை பராசக்தி தங்களுக்கு எல்லா வளங்களையும் அருளட்டும்.//
குளிர்ச்சியா இருந்தது. மிக்க நன்றி.
சாதாரணமா விளம்பரம் செய்யறதில்லை, ஆனா உங்களுக்கு அவளைப் பிடிக்கிறது என்பதால் சொல்லலாம்னு தோணுச்சு... அம்மன் பாட்டு என்கிற குழும வலைப்பூவிலும் எழுதறேன்... நேரம் கிடைக்கும் போது பாருங்க :)
//தெரிந்தால் ஊரை விட்டே ஓடிவிட்டால் என்ன செய்வது....!?//
சேச்சே... அப்படில்லாம் ஆகாது. தைரியமா கேளுங்க!
ம்ம்ம்...."அம்மன் பாட்டு" வலைபூவையும் ஏற்கனவே ஒரு சுற்று சுற்றி வந்து விட்டேன். அதனால் தான் மலைத்து போய் விட்டேன். என் வியப்பே அது தான், எனக்கு இவற்றை படிக்கவே நேரமில்லையே ! நீங்கள் எப்படி எழுதி இருக்கிறீர்கள்!
ReplyDeleteஎனக்கு பாடவா, படிக்கவே சரியாய் வராது. உங்கள் "முன்னேறு நீ முன்னேறு..." என்ற பாடலை ஏதோ nursery rhymes மாதிரி ஒரு மெட்டில் என் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தேன், அவ்வளவு தான்.
உங்கள் பாடல்களில் ஒன்றிரண்டையாவது இந்த நவராத்திரிக்குள் என் மகள்களுக்கு சொல்லி கொடுத்து எல்லார் வீட்டிலும் பாட செய்ய வேண்டும். இந்த பாட்டு யார் எழுதியது என்று கேட்டால், என் அம்மாவின் keyboard friend கவிநயா எழுதியது என்று அவர்கள் சொல்லவேண்டும் என்பது என் அவா.
/ம்ம்ம்...."அம்மன் பாட்டு" வலைபூவையும் ஏற்கனவே ஒரு சுற்று சுற்றி வந்து விட்டேன்.//
ReplyDeleteஅப்படியா... இலேசா சம்சயம் இருந்தது; இருந்தாலும் சொல்லலாம்னு சொன்னேன் :)
//எனக்கு இவற்றை படிக்கவே நேரமில்லையே ! நீங்கள் எப்படி எழுதி இருக்கிறீர்கள்!//
ஹாஹா :) இது நல்லாருக்கே. நான் வருஷக் கணக்கா எழுதியதை நீங்க நாள் கணக்கில் (மணிக் கணக்கில்?) படிச்சிடணும்னு நினைக்கிறீங்க போல :)
//எனக்கு பாடவா, படிக்கவே சரியாய் வராது. உங்கள் "முன்னேறு நீ முன்னேறு..." என்ற பாடலை ஏதோ nursery rhymes மாதிரி ஒரு மெட்டில் என் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தேன், அவ்வளவு தான்.//
உங்களுக்கு தன்னடக்கமும் நிறையன்னு தெரியுது :)
//உங்கள் பாடல்களில் ஒன்றிரண்டையாவது இந்த நவராத்திரிக்குள் என் மகள்களுக்கு சொல்லி கொடுத்து எல்லார் வீட்டிலும் பாட செய்ய வேண்டும். இந்த பாட்டு யார் எழுதியது என்று கேட்டால், என் அம்மாவின் keyboard friend கவிநயா எழுதியது என்று அவர்கள் சொல்லவேண்டும் என்பது என் அவா.//
ஆஹா, மனம் நெகிழ வச்சுட்டீங்க! That will be the best gift ever! அவள் அருளால் நடக்கட்டும். முன்கூட்டிய நவராத்திரி வாழ்த்துகள்.
மிக்க நன்றி தானைத் தலைவி.