உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Saturday, February 13, 2010
அதிசயக் குளம்!
வற்றாத குளமொன்று
வாகாக வெட்டி வைத்தேன்
கருத்தோடு தூரெடுத்து
கச்சிதமாய்க் கட்டி வைத்தேன்
அள்ள அள்ளக் குறையாத
அதிசயக் குளம் இதுவாம்
சொல்லச் சொல்ல இனிப்பாகி
சொக்க வைக்கும் குளம் இதுவாம்
புது முகம் பழைய முகம்
பேதங்கள் பார்ப்பதில்லை
வழிப்போக் கரானாலும்
வரம்புகள் ஏதுமில்லை
பாலை யெல்லாம் சோலையாக்கும்
கோழை யென்றால் வீரமாக்கும்
காய்ந்த தெல்லாம் தழைக்கவைக்கும்
பாய்ந்து மனம் குளிரவைக்கும்
ஆழ் மனதால் நெய்தகுளம்
ஆசை யாகச் செய்தகுளம்
இறைக்கக் குறையாத இன்பக்குளம் -
இந்த அன்புக்குளம்!
***
காதலர் தினம்னா காதலரின் தினம் மட்டும்தானா என்ன? அதையே அன்புள்ளங்களின் தினம், அல்லது அன்பின் தினமாகவும் கொண்டாடலாம்தானே. நீங்க ஒவ்வொருத்தரும், இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு உயிரும், ரொம்ப ரொம்ப ரொம்ம்ம்ப நல்ல்ல்லா இருக்கணும்னு மனமார வாழ்த்தி வேண்டிக்கிறேன்.
அன்புடன்
கவிநயா
Subscribe to:
Post Comments (Atom)
/ஆழ் மனதால் நெய்தகுளம்
ReplyDeleteஆசை யாகச் செய்தகுளம்
இறைக்கக் குறையாத இன்பக்குளம் -
இந்த அன்புக்குளம்!/
அருமை
எல்லாரும்
எப்பொழுதும் குளிக்க
விரும்பும் குளம்
உங்களுக்கும்
அனைவருக்கும்
அன்பர் தின வாழ்த்துகள்
அன்புக் குளம் அதிசயக் குளமேதான்! அழகாய் சொன்னீர்கள்! பின்குறிப்பும் அருமை! வாழ்த்துக்கள் கவிநயா யூத்விகடன் கவிதைக்கும்!
ReplyDeleteநல்லா எழுதி இருக்கீங்க கவிநயா..
ReplyDeleteஅனைத்துலக காதல் ஜோடிகளுக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.
ஆஹா!...ரூம் போட்டு சிந்திக்கிறது இதுதானோ?....:) யக்கோவ், நண்பர்கள் தினம் என்பதும் அன்பு சார்ந்தது தானா?. :).. பெற்றோரிடமும் அன்புடந்தான் இருக்கோம், அப்போ அவர்களுக்கு தனியாக எதற்கு தந்தையர் தினம், தாய்மார் தினம் எல்லாம் ?....ஆமா!, எல்லா அன்பும் இந்த ஒருநாளில் இருந்தா போதுமா?...என்னமோ ஒண்ணுமே பிரியல்ல :)
ReplyDeleteயக்கோவ், கோவிக்காதிக...சும்மா ஒரு ரவுசுக்காக மட்டுமே!....அன்பு எல்லா ஜீவராசிகளிடத்தும் என்றும் இருந்துவிட்டால் கலியாவது, கிலியாவது.... :)
ரோஜா மலரே ராஜ குமாரி,
ReplyDelete,ஆசை கவியே அழகிய ராணி ,,,அருகினில் வரலாமா?
வருவது சரிதானா ?
வருவது முறை தானா?
,,,,,,ரோஜா கூட்டம் (( அது )) மனதில் பறக்குது பட்டம் chitram
ரோஜா பூ சின்ன ரோஜா பூ
ReplyDeleteஎன் பேரெ சொல்லும் ரோஜாப்பூ
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டில் மட்டும் தனியாக இது எங்க குடும்ப பாடல்
என் சகோதரிகள் ஒன்று சேர் ந்தால் இப்பாட்டை மூனுமுனுப்போம் ,,,,,,so இதல் கள் விரிந்த ரோசாவை போட்டு மன ம் விரிந்து ஆனந்த ப்பட்டது
சித்ரம்..//
//எல்லாரும்
ReplyDeleteஎப்பொழுதும் குளிக்க
விரும்பும் குளம்//
ஆம் திகழ் :) வருகைக்கு நன்றி.
//அன்புக் குளம் அதிசயக் குளமேதான்! அழகாய் சொன்னீர்கள்! பின்குறிப்பும் அருமை!//
ReplyDeleteஅப்படின்னு நீங்க சொல்றீங்க, மௌலி இப்படிச் சொல்லிட்டாரே :(:)
//வாழ்த்துக்கள் கவிநயா யூத்விகடன் கவிதைக்கும்!//
நன்றி ராமலக்ஷ்மி :)
//நல்லா எழுதி இருக்கீங்க கவிநயா..
ReplyDeleteஅனைத்துலக காதல் ஜோடிகளுக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.//
வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோபி :)
//ஆஹா!...ரூம் போட்டு சிந்திக்கிறது இதுதானோ?....:) யக்கோவ், நண்பர்கள் தினம் என்பதும் அன்பு சார்ந்தது தானா?. :).. பெற்றோரிடமும் அன்புடந்தான் இருக்கோம், அப்போ அவர்களுக்கு தனியாக எதற்கு தந்தையர் தினம், தாய்மார் தினம் எல்லாம் ?....ஆமா!, எல்லா அன்பும் இந்த ஒருநாளில் இருந்தா போதுமா?...என்னமோ ஒண்ணுமே பிரியல்ல :)//
ReplyDeleteஅது சரி... ரூம் போட்டு யோசிக்கிறது நீங்களா, நானா? :P எனக்கு இப்படில்லாம் தோணவே இல்லையே? :(
//யக்கோவ், கோவிக்காதிக...சும்மா ஒரு ரவுசுக்காக மட்டுமே!....அன்பு எல்லா ஜீவராசிகளிடத்தும் என்றும் இருந்துவிட்டால் கலியாவது, கிலியாவது.... :)//
பெரிய மனசாக்கும் நமக்கு. நீங்க பின்னாடி சொன்னது சரிங்கிறதால மன்னிச்சு விட்டுட்டேன். பொழச்சு போங்க :)
//என் சகோதரிகள் ஒன்று சேர் ந்தால் இப்பாட்டை மூனுமுனுப்போம் ,,,,,,so இதல் கள் விரிந்த ரோசாவை போட்டு மன ம் விரிந்து ஆனந்த ப்பட்டது//
ReplyDeleteவாங்க சித்ரா. ரோஜாப்பூ படம் உங்களுக்கு ரொம்பவே பிடிச்சுப் போயிருச்சு போல :) வருகைக்கு நன்றி.
//பெரிய மனசாக்கும் நமக்கு. நீங்க பின்னாடி சொன்னது சரிங்கிறதால மன்னிச்சு விட்டுட்டேன். பொழச்சு போங்க :)//
ReplyDeleteமன்னிச்சதுக்கு நன்றியக்கோவ்!...அந்த பின்னூட்டத்தில் நான் சொல்லவந்தது, எல்லா நாளும் அன்புடன் இருத்தல் என்பதில்லாது, ஏதோ ஒரு நாள் அன்பு இவருக்கு, ஒருநாள் அவருக்கு அவருக்கு என்று இருப்பது எனக்கு சரியெனப்படவில்லை...அதே சமயத்தில் நான் ராமசேனாவைச் சார்ந்தவன் அல்ல என்பதையும் தெளிவாகக் கூறிவிடுகிறேன்.. :)
அதிசயக்குளமாம், இந்த அன்புக்குளத்திலே,
ReplyDeleteவற்றாத குளத்திலே குளித்துக்கொண்டே
பாடலையும் கேட்க,
இங்கே வாருங்கள்.
சுப்பு தாத்தா.
அன்புக் குளத்தில் மூழ்கடிக்க வைத்துவிட்டீர்கள் :-)
ReplyDelete//வற்றாத குளமொன்று
ReplyDeleteவாகாக வெட்டி வைத்தேன்
கருத்தோடு தூரெடுத்து
கச்சிதமாய்க் கட்டி வைத்தேன்..//
ஒவ்வொரு வரியும் மிகவும் பொருள் பொதிந்தது. 'வற்றாத' 'வாகாக'
எல்லாவற்றையும் தாண்டி, 'தூரெடுத்து' அதுவும் அதைக் கருத்தோடு -- அற்புதம், கவிநயா!
'வெள்ளத்து அனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்- உள்ளத்து அனையது உயர்வு' என்கிற தெய்வப்புலவர் வாக்குதான் நினைவுக்கு வருகிறது.
//பாடலையும் கேட்க,
ReplyDeleteஇங்கே வாருங்கள்.//
http://www.youtube.com/watch?v=llfjVKovHPM&feature=player_embedded
கேட்டேன் தாத்தா. ரெண்டு குளத்தில் ஒரே சமயத்தில் குளிச்ச மாதிரி இருந்தது. மிக்க நன்றி :)
//அந்த பின்னூட்டத்தில் நான் சொல்லவந்தது, எல்லா நாளும் அன்புடன் இருத்தல் என்பதில்லாது, ஏதோ ஒரு நாள் அன்பு இவருக்கு, ஒருநாள் அவருக்கு அவருக்கு என்று இருப்பது எனக்கு சரியெனப்படவில்லை...//
ReplyDeleteஅது சரிதான் மௌலி. ஆனால் நமக்கெல்லாம் தான் (எனக்குன்னு சொல்லணுமோ? :) நல்ல விஷயமெல்லாம் அடிக்கடி மறந்து போயிடுமே. அதனால இந்த நாளெல்லாம் அந்த நல்ல விஷயங்களை நினைவுபடுத்துற தினங்கள்னு வச்சுப்போம் :)
//அன்புக் குளத்தில் மூழ்கடிக்க வைத்துவிட்டீர்கள் :-)//
ReplyDeleteஇந்தக் குளத்தில் நல்ல்ல்லாவே மூழ்கலாம் உழவன். மூச்சே முட்டாது :)
வருகைக்கு நன்றி.
//ஒவ்வொரு வரியும் மிகவும் பொருள் பொதிந்தது. 'வற்றாத' 'வாகாக'
ReplyDeleteஎல்லாவற்றையும் தாண்டி, 'தூரெடுத்து' அதுவும் அதைக் கருத்தோடு -- அற்புதம், கவிநயா!//
நான் உணர்ந்து எழுதியதை நீங்கள் உணர்ந்து பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது ஜீவி ஐயா. மனமார்ந்த நன்றிகள்.
eppadi ivalavu alagaaga aalamaga solla mudiyudhu!miga arumai.
ReplyDeleteNatarajan.
"வழிப்போக் கரானாலும்
ReplyDeleteவரம்புகள் ஏதுமில்லை"
அருமையான வரிகள். மிகவும் ரசித்தேன்.
எளிய நடை அதே சமயம் சொல்ல வந்த கருத்து ஆழமானது.
//eppadi ivalavu alagaaga aalamaga solla mudiyudhu!miga arumai.//
ReplyDeleteமிக்க நன்றி திரு.நடராஜன் :)
//அருமையான வரிகள். மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteஎளிய நடை அதே சமயம் சொல்ல வந்த கருத்து ஆழமானது.//
வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி ஹேமலதா :)
அருமையான சிந்தனை..
ReplyDeleteஅழகான வார்த்தைகள்..
கவிதை அற்புதமாய் இருக்கிறது...
வாருங்கள் திலகா. முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி.
ReplyDelete