உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Sunday, November 16, 2008
காணாமல் போனவர்கள்
"தத்தரிகிட தத்தரிகிட தத்தோம்" கம்பீரமான மிருதங்கத்தின் தாள கதிக்குத் தகுந்தபடி வேகமாகச் சுழன்று ஆடுகிறாள், அந்தச் சிறுமி.
கச்சிதமான பட்டுப் பாவாடை சட்டையில், கர்ப்பக்கிருகத்திலிருந்து அப்போதுதான் எழுந்து வந்த அம்மன் போல் அப்படி ஒரு அழகு! சலங்கை கட்டிய கால்களுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு அவயமும் அபிநயம் பிடிக்கிறது, அபிநயா என்ற அவள் பெயருக்கு ஏற்றாற்போல்.
அவள் ராதாவாக கண்ணனை வரிக்கையில் அவளோடு சேர்ந்து அனைவருக்கும் கன்னம் சிவக்கிறது, வெட்கத்தில். அவள் யசோதாவாக மாறி சின்னக் கண்ணனைக் கூப்பிடுகையில், அனைவரும் திரும்பி அந்தத் திசையில் பார்க்கிறார்கள், உண்மையாகவே அங்கே கண்ணன் நிற்பதைப் போல்; அவன் பவழ வாய் திறந்து அவளுக்கு உலகத்தைக் காண்பிக்கையில், அவளோடு சேர்ந்து அனைவரும் அந்தக் காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்து நிற்கிறார்கள். அவள் ஆட்டம் மட்டுமின்றி, பாட்டும், மிருதங்கமும், நாதஸ்வரமும் கூட அந்த அரங்கத்தில் மாயாஜாலம் போல அற்புதமாக ஒலிக்கின்றன. ஒவ்வொரு ஒலி வடிவிலும், அவளும் தன் சலங்கைகளுடன் ஏறிப் பயணம் செய்வது போன்ற பிரமை.
பார்வையாளர்கள் அனைவருக்கும் நடனம் முடிந்தது கூடத் தெரியவில்லை; இன்னும் அந்த இனிய மந்திரத்துள் கட்டுண்டு மயங்கிக் கிடக்கிறார்கள். அரங்கமெங்கும் பூரண நிசப்தம். ஒரு நிமிடம்தான். பிறகு அரங்கம் அதிரும் அளவுக்கு எழுந்த கரவொலி வானைப் பிளக்கிறது. வாத்தியக் கோஷ்டியும், அவளும் மேடைக்கு நடுவில் வந்து வணங்குகிறார்கள். ஒரே கணத்தில் சின்னஞ்சிறுமியாக மாறி, பட்டுப் பாவாடையின் இரண்டு பக்கங்களையும் விரித்துப் பிடித்துக் கொண்டு மேற்கத்திய நடன மாதர்கள் போல் தலையைக் குனிந்து வந்தனம் அபிநயிக்கிறாள், கன்னங்குழியச் சிரித்தபடி. இந்தக் குறும்புக் காரக் குழந்தையா இவ்வளவு நேரம் காதல் வயப்பட்டாள், யசோதாவாக மாறிக் கண்ணனைக் கண்டித்தாள், என்று எல்லோருக்கும் மிகவும் அதிசயமாக இருக்கிறது.
அன்று அந்த மேடையில் இருந்தவர்கள் எல்லோருமே சின்னஞ்சிறார்கள்தான். ஏன், பார்வையாளர்களிலும் பெரியவர்கள் கொஞ்சம்தான் இருக்கிறார்கள். இனி அடுத்த நிகழ்ச்சி நடக்கும் வரை அனைவரும் இந்த நிகழ்ச்சியைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். மேடையை விட்டு இறங்கியதும், அனைவரும் அருகில் வந்து வாழ்த்துச் சொன்னார்கள்.
மிருதங்கம் வாசித்த பையன் பெயர் பாலா. அவன் மட்டும் அபிநயாவின் அருகில் தங்கினான். "அபி, நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்", என்றான் தயக்கத்துடன்.
அவன் முக பாவத்தைப் பார்த்ததுமே ஏதோ வருத்தத்தில் இருக்கிறான் என்று புரிந்தது, அபிக்கு. "என்னடா ஆச்சு? சும்மா சொல்லு", என்று ஊக்குவித்தாள்.
"அது வந்து... வந்து... எனக்கு அழைப்பு வந்திடுச்சு அபி. நான் நாளைக்கே கிளம்பணும்", குரல் இலேசாக நடுங்குகிறது.
"என்னடா, நிஜமாவா சொல்ற?" அபியின் குரலிலும் கண்ணீரின் ஆரம்பம். என்ன இருந்தாலும், பாலா ஒருவன்தான் அவளுக்கு உயிர் நண்பன். அவனும் போய் விட்டால்? ஆனாலும் இது எதிர்பார்த்ததுதானே? எப்போதும் இங்கு யாராவது வருவதும் யாராவது போவதுமாகத்தான் இருக்கிறது. யாரும் எதுவும் நிரந்தரமில்லை என்பது தெரிந்த விஷயம்தானே?
பாலாவை இப்போதுதான் பார்த்தது போல் இருக்கிறது. அவள்தான் முதலில் இங்கு வந்தாள். வந்த புதிதில் ஒன்றுமே புரியவில்லை. முதலில் பயந்தாலும், இயல்பான தன் தைரியத்தால் சீக்கிரம் பழகி விட்டாள். அவள் வந்து சில நாட்களில் பாலா வந்தான். அவளைப் போல் அவன் தைரியமாக இல்லை. வந்த போதே பயத்திலேயே மயங்கி விழுந்து விடுவான் போல இருந்தது. இவள்தான் அவனுக்கு ஆறுதல் சொல்லி, இந்த இடத்தைப் பற்றி விளக்கித், தன் அருகிலேயே வைத்துப் பார்த்துக் கொண்டாள். பிறகு சீக்கிரத்தில் இருவரும் சிறந்த நண்பர்களாகி விட்டார்கள். அந்த பாலாதான் இப்போது போகிறேன் என்கிறான். துக்கம் தொண்டையை அடைக்கிறது, அபிக்கு. பாலாவுக்கு அவளுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. இத்தனை நாளும் அபிதான் அவனுக்கே ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
வழக்கம் போல வெகு சீக்கிரம் தன்னைத் தேற்றி கொண்டு விட்டாள், அபி. "சரி, இனிமே நம்ம கவலப்படக்கூடாது. உண்மையிலேயே உனக்கு இது சந்தோஷமான விஷயம். இந்த இடத்துக்கு வந்துட்டு திரும்பிப் போற சந்தர்ப்பம் எல்லாருக்கும் எப்போதும் கிடைக்கிறதில்லன்னு உனக்குத் தெரியுமே? அதனால நீ கிளம்பற வரைக்கும், நம்ம சந்தோஷமா இருக்கணும். சரியா?" வரவழைத்து கொண்ட உற்சாகத்துடன் அவன் கையைப் பிடித்து இழுத்துச் செல்கிறாள்.
"உனக்கு அழைப்பு எப்படி வந்தது?" ஆவலுடன் கேட்கிறாள். முன்பே சிலரிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறாள். இருந்தாலும் பாலாவையும் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசை.
"என் கனவில் வந்தது. என்னைப் போலவே இருக்கிறவர் ஒருத்தர், ஆனால் என்னை விடப் பெரியவர், என் கனவில வந்தார். வந்து, 'தயவு செய்து என்கிட்ட திரும்பி வந்துடு. இனி உன்னை மறக்கவே மாட்டேன்; பிரியவே மாட்டேன். இது சத்தியம்', னு சொல்லி ரொம்பக் கெஞ்சினார்"
"இங்க சில பேரெல்லாம் அவங்க கனவுல வந்த அழைப்ப நம்பாம போகாமயே இருந்திட்டாங்க. தெரியுமா? ஆனா நீ அப்படி இருக்க வேண்டாம். நீ சொல்றதப் பாக்கும் போது அவர் உண்மையாகவேதான் உன்னைக் கூப்பிடறாப்ல தோணுது", என்றாள் அபி.
அது ஒரு வினோதமான உலகம். காணாமல் போன, கண்டு கொள்ளாமல் போன, அடியோடு மறந்து போய் விட்ட பல்லாயிரம் திறமைகள் சேர்ந்து (§)தங்கியிருக்கும் உலகம். அங்கு நிறம், மொழி, இன பேதங்கள் கிடையாது. அநேகம் பேர் சிறு வயதிலேயே திறமைகளை அடையாளம் கண்டு கொள்ளாமலோ, வளர்த்துக் கொள்ளாமலோ நிராகரித்து விடும்போது, அவை எல்லாம் இங்கு வந்து வசிக்க நேரிடும். அபூர்வமாக சிலர் பெரியவர்களாகும் வரை திறமைகளை வளர்த்து விட்டுப், பிறகு அவற்றுக்குத் தீனி போட நேரமின்றி அவற்றை மறந்து விடுவது உண்டு. அந்த மாதிரி மறக்கப்பட்ட திறமைகளும் இங்குதான் வந்து சேரும். பெரியவர்களான பின் சிலர் தாங்கள் அது வரை நினைக்காமலிருந்த திறமைகளை மறுபடியும் வரவழைத்து வளர்த்துக் கொள்ள முனைகையில்தான் பாலா போன்றவர்களுக்கு மறு வாழ்வு கிடைக்கிறது.
பாலாவுக்கும் அவன் திரும்பிப் போவது குறித்து மிகவும் சந்தோஷமாகத் தான் இருக்கிறது, அபியைப் பிரிய வேண்டும் என்பது தவிர அவனுக்கு வேறு வருத்தம் இல்லை. சிறுவர்களை விடச் சிறுமிகளுக்கு அழைப்பு வருவது இன்னும் அரிது என்பது அவனுக்கும் தெரியும். "கவலைப் படாதே, அபி. உனக்கும் ஒரு நாள் அழைப்பு வரும், பாரேன்", நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளுடன், பாலாவும் கிளம்பி விட்டான்.
அபி காத்துக் கொண்டிருக்கிறாள்.
--கவிநயா
பி.கு. இந்தக் கதை முன்பு 'திசைகளி'ல் வெளியானது.
படத்துக்கு நன்றி: http://flickr.com/photos/deep_shot/2048096515/
Subscribe to:
Post Comments (Atom)
//அது ஒரு வினோதமான உலகம். காணாமல் போன, கண்டு கொள்ளாமல் போன, அடியோடு மறந்து போய் விட்ட பல்லாயிரம் திறமைகள் சேர்ந்து (§)தங்கியிருக்கும் உலகம்//
ReplyDelete-- ரொம்ப நன்றி, கவிநயா! இந்த உலகத்திற்கு எங்களையும் கைபிடித்து
அழைத்துச் சென்று விட்டீர்கள்..
நினைவில் தோய்ந்து எழுதுகையில்,
அந்த தூங்கும் நினைவுகள், எழுத்துக்களாய் நெஞ்சில் பதிக்கும் தடங்கள், ஏக்கமாக இருக்கிறது. அற்புதமாக எழுதுகிறீர்கள்.. திசைகள்! அந்த பத்திரிகையின் ஆரம்ப கால நினைவுகளும் நினைவுக்கு வந்தன.
தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன்.
மிக்க நன்றி, கவிநயா!
முதல் பந்தி நல்லா இருக்கு ...எழுதிய விதம்...
ReplyDeleteகதை காத்திருப்புகளோடு முடிகிறதில் ஒரு எதிர்பார்ப்பு பாலாவிடம் உருவாகிறது எனக்கு...
ReplyDeleteஇன்னும் எழுதலாம் நீங்கள் வாழ்த்துக்கள்...கவிநயா...
ReplyDeleteரொம்ப அலட்டிக்காமல் இயல்பா எழுதியிருக்கீங்க, கவிநயா. படிக்க நல்லா இருந்தது.
ReplyDeleteஆனால் ஒரு விஷயம் கொஞ்சம் இடறுது. மேலெழுந்தவாரியாக பார்த்தால் அந்த சிறுவனை பற்றியே பேசுவது போல இருந்தாலும், எழுதியவர் (நீங்கள்) தன்னை அளவிற்கு அதிகமாக எண்ணுவது போல் ஒரு தோற்றம் தெரியுது.
இன்னும் உங்கள் இதர படைப்புக்களை படிக்கவில்லை. படித்து விட்டு பின்னூட்டம் போடுகிறேன்.
//அங்கு நிறம், மொழி, இன பேதங்கள் கிடையாது. அநேகம் பேர் சிறு வயதிலேயே திறமைகளை அடையாளம் கண்டு கொள்ளாமலோ, வளர்த்துக் கொள்ளாமலோ நிராகரித்து விடும்போது, அவை எல்லாம் இங்கு வந்து வசிக்க நேரிடும்.//
ReplyDeleteஅருமையான வித்தியாசமான சிந்தனை. முதலில் அதற்கு என் பாராட்டுக்கள்.
//அபூர்வமாக சிலர் பெரியவர்களாகும் வரை திறமைகளை வளர்த்து விட்டுப், பிறகு அவற்றுக்குத் தீனி போட நேரமின்றி அவற்றை மறந்து விடுவது உண்டு.//
உண்மை உண்மை!
//சிறுமிகளுக்கு அழைப்பு வருவது இன்னும் அரிது என்பது அவனுக்கும் தெரியும்.//
அந்த உலகிலும் அப்படித்தானா:(?
நம்பிக்கையுடன் காத்திருக்கும் அபிக்கு சீக்கிரம் அழைப்பு வரட்டும். நம்பிக்கைதானே அங்கும் வாழ்க்கை.
நானோ உங்களிடம் இந்த கதை குறித்து சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
ReplyDeleteஉங்கள் படைப்புகளின் எனக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்று இந்தப் படைப்பு. பண்ருட்டியில் ஒரு பையன் ஒரு தோட்டத்தில் இன்னும் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு எப்போது விடிவுகாலமோ?
கவிநயா,
ReplyDeleteநல்ல இருந்தது கதை.வாழ்த்துக்கள் ஒரு வேண்டுகோள் இன்னும் கூட சிறு சிறு பாரா பிரித்து எழுதலாம். படிப்பவர்களுக்கு அலுப்பு தட்டாமல் இருக்கும்.
//கச்சிதமான ........ இருக்கிறது.//
ரொம்ப நீண்ட .............................பாரா.
அடுத்து .... "திசை" சாவி நடத்திய பத்திரிக்கைதானே ? ஆசிரியர் மாலன்? 1978?
பழைய ந்ஜபகம் வந்து விட்டது. நானும் சாவியில் எழுதிஇருக்கிறேன். .
வாங்க ஜீவி ஐயா. இந்தக் கதையை இடணும்னு நினைச்சப்பவே உங்களுக்குப் பிடிக்கும்னு தோணுச்சு :) திசைகள் இணைய இதழா சில மாதங்கள் வந்தப்போ, திரு. மாலன் அவர்கள் உலகமெங்கும் இருந்து பல புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். அதுல நானும் ஒண்ணு. நீங்க தொடர்ந்து வாசித்து அளித்து வரும் ஊக்கத்திற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கேன். மிக மிக நன்றி உங்களுக்கு.
ReplyDeleteவாங்க தமிழன். முதல் பத்தியையும் கதையையும் ரசிச்சதுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க வித்யா. உங்க பின்னூட்டங்கள மத்த இடங்கள்ல பார்த்திருக்கேன். உங்க வருகை கண்டு மகிழ்ச்சி :)
ReplyDeleteஉங்களுக்கு மனோதத்துவத்துல ஆர்வமோ? :) நீங்க சொல்றது சரியா இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம் :)
நான் எழுதறது எல்லாமே என்னுடைய ஏதோ ஒரு உணர்வின் வெளிப்பாடுதாங்கிறதை மறுக்க முடியாது. சில கதைகள்ல சில பாத்திரங்கள்ல என்னுடைய குணமும் மனமும் இருக்குன்னு எனக்கே conscious-ஆ தெரியும். மற்ற சமயங்கள்ல என்னை அறியாம அப்படி ஆகலாம். இந்தக் கதை எழுதி கிட்டத்தட்ட 2 வருஷம் ஆச்சு. அந்த சமயம் இருந்த என் மனநிலை இப்ப நினைவில்ல. இருந்தாலும் இனி கதை எழுதும்போது நீங்க சொன்னதை நினைவில் வச்சுக்கறேன்.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. மற்ற படைப்புகளுக்கும் உங்க பின்னூட்டங்களை எதிர்பார்த்து... :)
வாங்க ராமலக்ஷ்மி. நீங்க வேகமா ஆமோதிக்கிறதைப் பார்த்தா உங்களுக்கும் அந்த மாதிரி அனுபவம் உண்டு போல இருக்கு :) சிறுமிகளுடைய நிலை இப்போ எவ்வளவோ பரவாயில்லை ராமலக்ஷ்மி :) வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க நாகு. பண்ருட்டியில காத்திருக்கிற பையன் அவனா வரமாட்டான். நீங்கதான் கூப்பிடணும் :) நீங்க அவனை சீக்கிரமே அழைத்துக் கொள்ள வாழ்த்துகள் :)
ReplyDeleteவாங்க ரவிசங்கர். நீங்க சொன்னது எனக்கே தோணுச்சு, ஆனாலும் ஏனோ மாத்தலை. இப்ப நீங்க சொன்ன பிறகு சின்னச் சின்ன பத்தியா மாத்திட்டேன் :)
ReplyDelete//1978?//
அச்சோ. அப்ப நான் ரொம்பக் குட்டிப் பொண்ணுங்க :) நான் சொன்ன திசைகள் - திரு.மாலன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு சமீபத்துல இணைய இதழா சில காலம் வெளி வந்தது :)
முதல் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி.
//உங்களுக்கு மனோதத்துவத்துல ஆர்வமோ? :) நீங்க சொல்றது சரியா இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம் :) //
ReplyDelete:)))) உங்களுக்கு வானிலை அறிவிப்புலே ஆர்வம்னு புரியுது. :) உங்கள் வாழ்த்துக்கு நன்றி கவிநயா.
உங்க இதர எழுத்துக்களையும் படிச்சேன். உங்க உணர்வுகளை விட உங்க மீது அதிக கவனம் இருக்கறா மாதிரி இருக்கு. நான் புரிஞ்சுக்கிட்டது தப்பா இருந்தா கோச்சுக்காதீங்க. :)
கோவம் எதுவுமில்ல. யாரும் இது வரை சொல்லாத விஷயம் சொல்லி, என்னை யோசிக்க வச்சிருக்கீங்க வித்யா. அதற்காக நன்றி.
ReplyDeleteஇப்போத்தான் படிக்க நேரம் கிடைத்தது...வித்தியாசமாக அதே நேரத்தில் நல்லாவும் இருக்கு. :)
ReplyDeleteவாங்க மௌலி. மிக்க நன்றி.
ReplyDelete:-)))))))))
ReplyDeleteரொம்பவே வித்தியாசமான கற்பனை!
கற்றது எப்பவும் வீண் ஆகாது. அடுத்த ஜன்மத்திலே தொடரும்.
அடேடே. வாங்க திவா. உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி :) நீங்க சொல்வது உண்மைதான். நீங்களும் இப்பதானே பூர்வஜென்ம வாசனைகள் பத்தி பேசினீங்க :)
ReplyDeleteஉங்க உடல் நலம் இப்ப தேறியிருக்கும்னு நம்பறேன்.
முதல் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி.
படித்து முடிக்கையில் உடம்பெல்லாம் புல்லரித்து போனதை சொல்லாமல் இருக்க மாட்டேன்..
ReplyDeleteநான் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட திறமைகள் அந்த உலகத்தில் இருக்குமா.. பரவா இல்லை.. அபிநயாவிற்கு கம்பெனி கொடுக்கும் பொருட்டு என் திறமை அங்கேயே இருக்கட்டும்.. :) [கதைக்குள் ரொம்ப போயிட்டேனோ]
ரொம்ப சூப்பரா கதைகள் எழுதறீங்க.. உங்கள் கதைகளின் வீரியம் ரொம்ப நல்லா இருக்கு கவிநயா..
////1978?//
ReplyDeleteஅச்சோ. அப்ப நான் ரொம்பக் குட்டிப் பொண்ணுங்க :) //
அப்போவெல்லாம் நான் பிறக்கவே இல்லை.. நான் ரொம்ப குட்டிப் பையன்.. :)
But அதுக்காக தம்பி அப்படி இப்படி என்று சொல்லிவிடாதீர்கள்.. நாம் நன்பர்களாவே இருப்போம்.. :)
ReplyDeleteவாங்க சரவணகுமார். அடடா, அபிக்குத் துணையாகவா... சரி.. சரி... :) ரொம்ப நல்ல மனசு உங்களுக்கு... நீங்க ரசிச்ச விதத்தைக் கேட்டு எனக்கும் புல்லரிச்சிடுச்சு :) மிக்க நன்றி.
ReplyDelete//But அதுக்காக தம்பி அப்படி இப்படி என்று சொல்லிவிடாதீர்கள்.. நாம் நன்பர்களாவே இருப்போம்.. :)//
சரிங்க தம்பி... :) I mean, நண்பரே :)
Kavinaya,
ReplyDeletea different and nice story.
வாங்க சதங்கா. மிக்க நன்றி.
ReplyDeleteஅபிநயா என்ற பெயரைப் படித்தவுடனேயே யார் அந்த அபிநயா என்று புரிந்தது போல் இருந்தது. முழுதும் படித்த பிற்கு அபிநயா யார் என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது.
ReplyDeleteஅமரனும் அங்கே இருக்கிறானோ? அபி அவனைப் பார்த்தால் கேட்டதாகச் சொல்ல சொல்லுங்கள்.
இந்த இரு வருடத்தில் அபி ஒரு முறையாவது அங்கிருந்து இங்கே வந்து போனாளா இல்லையா?
ReplyDeleteவித்யா,
ReplyDeleteஎன்னுடைய பதிவுகளையும் படித்து தங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். இரவிசங்கரிடமும் கவிநயா அக்காவிடமும் நீங்கள் பார்த்தவை என் பதிவுகளிலும் இருக்கலாம்; இருக்கும். எல்லோருமே அப்படித் தான் என்பது என் புரிதல். :-)
@ குமரன் ஜி
ReplyDeleteஉங்களில் யாரெல்லாம் என்னை விட வயதில் பெரியவர் சின்னவர் என்று தெரியவில்லை. எனவே பொதுவாக எல்லோரையும் மரியாதையாக அழைத்து விடுகிறேன். :)
//வித்யா,
என்னுடைய பதிவுகளையும் படித்து தங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். இரவிசங்கரிடமும் கவிநயா அக்காவிடமும் நீங்கள் பார்த்தவை என் பதிவுகளிலும் இருக்கலாம்; இருக்கும். எல்லோருமே அப்படித் தான் என்பது என் புரிதல். :)//
கே.ஆர்.எஸ் இடம் அப்படி எழுதினால் அவருக்கு உறுத்தல் இல்லையா என கேட்டுக் கொண்ட பின்னரே எழுதினேன்.
கே.ஆர்.எஸ் இடம் நான் சொன்னது வேறு. கவிநயா அவர்களிடம் நான் கண்டது வேறு.
கவிநயா அவர்கள் தன் மீது மிகுந்த வருத்தத்தில் இருந்து தன்னையே நினைத்துக் கொள்வது போல் அவரது பெரும்பாலான படைப்பில் தெரிந்தது. அதனால் படைப்புகளில் ஒரே மாதிரி இருப்பது போல் இருந்தன. அதை நட்பாகத்தான் சொன்னேன்.
ஆனால் இப்போது நீங்கள் எல்லாம் எழுதியிருப்பதை பார்த்தால் உங்களுக்கு இப்படி எழுதியிருப்பதில் வருத்தம் என்பது வெளிப்படையாக தெரிகிறது.
ஆகவே யாரும் அழையாமல் இனி என் கருத்தை சொல்லி பிறரை வருத்த வேண்டாமென்று தெரிந்து விட்டது.
புண்படாமல்தான் என் கருத்தை சொன்னதாக நினைத்துக் கொண்டிருந்தேன். தவறு என்று புரிந்து விட்டது.
இனி பாராட்ட மட்டும் வருகிறேன். :)
வித்யா.
ReplyDeleteவருத்தமெல்லாம் இல்லை. பாராட்டுகளை மட்டும் எதிர்பார்க்கவும் இல்லை. நேர்மையாக நீங்கள் சொன்னதற்கு நேர்மையான எனது பதில். அவ்வளவு தான்.
யார் எழுதினாலும் அவரவர் எழுத்தில் அவர்கள் கொஞ்சமேனும் வரத் தான் செய்வார்கள். தன்னைப் பற்றி அவர்கள் பெருமையாகவோ தாழ்வாகவோ எண்ணிக் கொள்வதாகப் படிப்பவர்களுக்குத் தோன்றத் தான் செய்யும். இது உலகளாவியது என்பது என் புரிதல்/கருத்து. அதனைச் சொன்னேன். அதற்கு எடுத்துக்காட்டாக என்னுடைய எழுத்துக்களும் இருக்கும் என்பதனால் உங்களைப் படிக்க அழைத்தேன். (சுயநலமும் காரணம். இப்படி நேர்மையாகக் கருத்து சொல்பவர் இன்னும் என் எழுத்துகளைப் படிக்கவில்லையே என்ற எண்ணமும் காரணம்).
கூடல் என்ற என்னுடைய பதிவில் எல்லாவற்றையும் படிக்க இயலாவிட்டாலும் 'புல்லாகிப் பூண்டாகி' என்றொரு தொடர்கதை இருக்கிறது. அதை மட்டுமாவது படித்துப் பாருங்கள். படித்த பின் தயங்காமல் சொல்ல நினைப்பதைச் சொல்லுங்கள்.
என் ப்ரொபைல் பார்த்தால் என் வயது தெரியும். நானே அக்கா என்று அழைப்பதால் கவிநயா அக்காவின் வயதும் தெரியும். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் வித்யா. :-)
ReplyDelete//கூடல் என்ற என்னுடைய பதிவில் எல்லாவற்றையும் படிக்க இயலாவிட்டாலும் 'புல்லாகிப் பூண்டாகி' என்றொரு தொடர்கதை இருக்கிறது. அதை மட்டுமாவது படித்துப் பாருங்கள். படித்த பின் தயங்காமல் சொல்ல நினைப்பதைச் சொல்லுங்கள்.///
ReplyDeleteகண்டிப்பாக வருகிறேன், குமரன். அழைப்பிற்கு நன்றி. :)
வித்யா
ReplyDeleteபல சமயங்களில் ஏதேனும் ஒரு விஷயத்தை அசை போடும்போது what if என்று ஒரு கேள்வி வந்துவிட்டால் அங்கே ஒரு கதை உருவாகிவிடுகிறது. யாருக்கும் தன்னை விட வேறு யாரை நன்றாக தெரியும்? அதனால் தான் கதைகளில் வருவது -ஏதேனும் ஒரு வழியில் - மிகவும் இயற்கையே. அது குறை அல்ல! :-))
@ திவா
ReplyDeleteஒருவர் அவரது கதைகளில் தெரிகிறார் என்பதை எந்த பொருளில் சொன்னேன் என்று சொல்லி விட்டேன்.
கதைகளில் 'தான்' தெரிவதை தவறென்று சொல்லவில்லை. தான் மாத்திரமே தெரிவது என்று ஒன்று இருக்கிறது. அதாவது கதையில் இதர பாத்திரங்களுக்கு அழுத்தம் விழாது. கட்டுரைகளில் இதர விஷயங்களுக்கு அழுத்தம் இருக்காது. அப்படி படிப்பவருக்கு தெரியும் பட்சத்தில் படித்ததையே திரும்ப திரும்ப படிப்பது போல் இருக்கும். இப்படி எனக்கு பட்டதை சொன்னேன். இதை இத்துடன் மூன்று முறை சொல்லிவிட்டேன். அதை படிக்காமல் ஒருவர் தெரிவது தவறில்லை என்று ஒன்றை புரிந்துக் கொண்டு சொன்னால் எப்படி?
ஒரு எழுத்தாளரது உணர்வுகள் அவர் படைப்பில் வராமல் இருக்கவே முடியாது. ஆனால் அது அளவிற்கு மீறி தெரிவது படைப்பை பலகீனப்படுத்தி விடாதா? இதை வெளியிலிருந்து படிப்பவர்தானே அறிந்து சொல்ல முடியும்?
என் எழுத்து எனக்கு அருமையாக இருக்கும். வெளியில் இருந்து படிப்பவருக்குத்தானே குறைகள் தெரியும். எனக்கு அப்படி தெரிந்ததை சொன்னேன்.
அதுவும் அப்படி சொல்லலாமா என்று கவிநயாவை கேட்ட பின்னரே சொன்னேன். அவரும் தாரளமாக சொல்லுங்கள் என்ற பின்னரே சொன்னேன்.
என் கருத்தை கண்டிப்பாக ஏற்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இப்படியும் ஒருவருக்கு தெரிகிறது என்று தெரிந்தால் நல்லதுதானே?
//தான் மாத்திரமே தெரிவது என்று ஒன்று இருக்கிறது.//
ReplyDeleteஆ, அது சரிதான். ஆனா அப்படி இப்பதான் சொல்கிறீங்க! :-))
போகட்டும். சில குழப்பங்கள். கவியும் சரியாகவே எடுத்துக்கொண்டு இருக்கிறார். இத்துடன் விட்டு விடலாம்.
:-))
//இப்படியும் ஒருவருக்கு தெரிகிறது என்று தெரிந்தால் நல்லதுதானே?//
நல்லதுதான்!
வாங்க குமரா. அமரனுக்கு அபிவிடு தூது அனுப்பியாச்சு :) வருகைக்கு நன்றி.
ReplyDelete//என் ப்ரொபைல் பார்த்தால் என் வயது தெரியும். நானே அக்கா என்று அழைப்பதால் கவிநயா அக்காவின் வயதும் தெரியும். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் வித்யா. :-)//
ReplyDeleteஹா ஹா :D இதைப் படிச்சு நல்லா சிரிச்சேன். குமரனுக்கு குசும்புதான் :) வித்யா, என் வயசு 1036x2 தான் :)
//என் கருத்தை கண்டிப்பாக ஏற்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இப்படியும் ஒருவருக்கு தெரிகிறது என்று தெரிந்தால் நல்லதுதானே?//
ReplyDeleteநல்லதுதான் வித்யா. உங்களுக்கு எப்படித் தெரியுதுன்னு புரிஞ்சிக்கிட்டேன். ஆனா உங்களுக்குத் தெரியற மாதிரி எனக்கு இன்னும் தெரியல. தெ/புரிஞ்சா மாத்திக்க முயற்சி செய்வேன்.
நீங்க ரெண்டாம் தரம் உங்க கருத்தை அழுத்திச் சொன்னப்போ என் மனம் சஞ்சலப் பட்டது உண்மைதான். ஆனா இப்ப தெளிஞ்சிட்டேன். எனக்கு இறைநம்பிக்கை உண்டு. என்னையும், உங்களையும், எல்லோரையும் இயக்குவது அவளேன்னு நம்பறேன்; ego பத்தி இப்பதான் பதிவு வேற போட்டேன்! :). அதனால நீங்க உங்க மனசில பட்டதை அப்படியே சொல்லலாம். அனைத்தும் அவள் விருப்பமே.
வித்யா, குமரனுடைய 'கூடலு'க்கு போகும்போது, அவசியம் "யத் பாவம் தத் பவதி"யும், "கண்ணாடி சேவை"யும் படிங்க. எனக்கு ரொம்பப் பிடிச்சது... :) உங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன் :) 'புல்லாகிப் பூண்டாகி', இனிமேதான் நானும் படிக்கணும். எப்படியோ விட்டுப் போச்சு. ஸாரி குமரா.
ReplyDeleteகவிக்கா. கட்டாயம் புல்லாகிப் பூண்டாகி படிங்க. பின்னூட்டங்களோட. கடைசி அத்தியாயம் வரைக்கும் 'என்ன இன்னும் கதையோட முக்கிய புள்ளிக்கே வரலை'ன்னு நண்பர்கள் எல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. கடைசி அத்தியாயம் வந்த பின்னாடி கதையோட முக்கிய புள்ளி எப்பவோ வந்து போயாச்சுன்னு புரிஞ்சுக்கிட்டாங்க. நான் கேட்டுக்கிட்டதால நிறைய பேரு விமர்சனமும் எழுதி கொடுத்தாங்க. நீங்க படிச்சுட்டு உங்க விமர்சனமும் சொன்னா நல்லா இருக்கும். :-)
ReplyDelete@திவா
ReplyDelete//ஆ, அது சரிதான். ஆனா அப்படி இப்பதான் சொல்கிறீங்க! :))// திவா
இதே இந்த பின்னூட்டப்பக்கத்தில் நான் இட்ட முதல் பின்னூட்டம் உங்கள் பார்வைக்கு.
[ஆனால் ஒரு விஷயம் கொஞ்சம் இடறுது. மேலெழுந்தவாரியாக பார்த்தால் அந்த சிறுவனை பற்றியே பேசுவது போல இருந்தாலும், எழுதியவர் (நீங்கள்) தன்னை அளவிற்கு அதிகமாக எண்ணுவது போல் ஒரு தோற்றம் தெரியுது.]vidhya
பாருங்கள். அளவிற்கு அதிகமாக என்றுதான் சொல்லியிருக்கிறேன். தன்னை வைத்து எழுதுவதை தப்பு என்று சொல்லவில்லை. அது அளவிற்கு அதிகமாக தெரிகிறது என்றே சொன்னேன்.
எனவே என் முதல் பின்னூட்டத்தை இந்த பக்கத்தில் நீங்கள் படிக்காமலே 'இப்போதுதான் சொல்லறீங்க' சொல்லிட்டீங்க. என்ன செய்ய?
////தான் மாத்திரமே தெரிவது என்று ஒன்று இருக்கிறது.////
ReplyDeleteமாத்திரமே என்ற வார்த்தையைதான் குறிப்பிட்டேன். போல்ட் எழுத்தா இருந்தது இல்லையா?
மற்றபடி நீங்க சொல்கிறது சரிதான் வித்யா.
மன்னிக்கணும்.:-))
//மாத்திரமே என்ற வார்த்தையைதான் குறிப்பிட்டேன். போல்ட் எழுத்தா இருந்தது இல்லையா?//திவா
ReplyDeleteஅது போல்ட் எழுத்தாய் எப்படி வந்தது என்று தெரியவில்லை திவா.
அந்த போல்ட் எழுத்தை பார்த்த பிறகுதான் தடித்த எழுத்துக்களை எப்படி வரவழைப்பது என்று தேடி கண்டுப்பிடித்து அறிந்து இன்று அனுப்பினேன். :)
அந்த 'தான் மாத்திரமே' என்ற சொல் முந்தைய வரியை தொடர்ந்து வரும் வரி. 'தான் தெரிவது தவறில்லை தான் மாத்திரமே படைப்புக்களில் தெரிந்தால் படைப்பு ஒரே மாதிரி தெரியும்' என்று சொல்லி இருந்தேன். ரஜினி படங்களில் நீங்கள் பார்த்ததில்லையா? ஒவ்வொரு படத்திலும் கதை வேறு வேறு மாதிரி இருந்தாலும் ரஜினி அதிகமாக தெரிவதால் எல்லா படங்களும் ஒரே மாதிரி இருப்பது போல இருக்கும். இது சகஜமாக எழுத்தில் நிகழும் தவறுதான். எழுத்தாளர் கதையின் கருவிலும், இதர முக்கிய விஷயங்களிலும் அவர் மனம் படியும் போது எழுத்திலும் முக்கியத்துவம் வேறு வேறு விஷயங்களுக்கு போகும். படிக்க நன்றாக இருக்கும். இப்படியாக எனக்கு புரிந்திருக்கிறது. மற்றப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் இருக்கலாம்; நோக்கு இருக்கலாம். அதையும் சொன்னால் எனக்கு உபயோகமாக நிச்சயம் இருக்கும். விமர்சனத்துக்கு விமர்சனம் இருக்க கூடாதா என்ன? :)
//அந்த போல்ட் எழுத்தை பார்த்த பிறகுதான் தடித்த எழுத்துக்களை எப்படி வரவழைப்பது என்று தேடி கண்டுப்பிடித்து அறிந்து இன்று அனுப்பினேன். :)//
ReplyDeleteஒரு தாங்க்ஸ் கிடையாதா? :-))
//ரஜினி படங்களில் நீங்கள் பார்த்ததில்லையா?//
சினிமாவே அதிகம் பாக்கிறதில்லை! இருந்தாலும் நீங்க சொல்ல வர விஷயம் புரியுது.
//விமர்சனத்துக்கு விமர்சனம் இருக்க கூடாதா என்ன? :)//
அததானே ரெண்டு பேரும் செஞ்சுகிட்டு இருக்கோம்! :-)))))))))))
ஆரோக்கியமான விவாதத்துக்கு நன்றி!
//ஒரு தாங்க்ஸ் கிடையாதா? :-))//
ReplyDeleteஉங்களுக்கு மாத்திரமா? கவிநயாவிற்கும் சேர்த்து தாங்க்ஸ். தாங்க்ஸ்னு சொல்லணுமா? தேங்க்ஸ்னு சொல்லணுமா? :)
//கவிக்கா. கட்டாயம் புல்லாகிப் பூண்டாகி படிங்க. பின்னூட்டங்களோட.//
ReplyDeleteஅவசியம் படிக்கிறேன் குமரா. ஆணி கொஞ்சம் குறைஞ்சோன்ன... :)
//கவிநயாவிற்கும் சேர்த்து தாங்க்ஸ்.//
ReplyDeleteவந்தனம் வித்யா.
//தாங்க்ஸ்னு சொல்லணுமா? தேங்க்ஸ்னு சொல்லணுமா? :)//
நன்றின்னு சொல்லணும்; சுத்தத் தமிழ்ல "டாங்கீஸ்"னும் சொல்லலாம் :)
//நன்றின்னு சொல்லணும்; சுத்தத் தமிழ்ல "டாங்கீஸ்"னும் சொல்லலாம் :)//
ReplyDeleteDonkeysஆ? அப்புறம் என்னை உதைப்பாங்க.
/Donkeysஆ? அப்புறம் என்னை உதைப்பாங்க.//
ReplyDelete:)) donkeys-க்கு அழகு உதைத்தல் :)
//:)) donkeys-க்கு அழகு உதைத்தல் :)
ReplyDelete//
:-)))))))))))))))))))
நான் அனாதைகள் ஆசிரமம் என நினைத்தேன். ப்பா பிரம்மாதம். தங்கள் கற்பனை கதைகள் செம்ம கலக்கல்.வாழ்த்துக்கள்.
ReplyDelete//ப்பா பிரம்மாதம். தங்கள் கற்பனை கதைகள் செம்ம கலக்கல்.வாழ்த்துக்கள்.//
ReplyDeleteமிக்க நன்றி ரமேஷ் :)