இந்தியா எங்கள் தாய் நாடு!
இதுவே எங்கள் திரு நாடு!
கோடி கோடியாம் மக்கள் சேர்ந்து
கட்டியிருக்கும் பெருங்கூடு!
(இந்தியா)
காடு கரை உண்டு, பாயும் நதியுண்டு,
பச்சை வயலுண்டு, திரு நாட்டில்!
மாடு மனை உண்டு, மக்கள் உழைப்புண்டு,
மதியும் நிதியும் உண்டு வள நாட்டில்!
(இந்தியா)
இயற்கை வளமுண்டு, இயங்கத் திறனுண்டு,
என்ன இல்லை எங்கள் திரு நாட்டில்?
அணைக்கும் அன்புண்டு, ஆன்ம
பலமுண்டு,
என்ன இல்லை எங்கள் வள நாட்டில்?
(இந்தியா)
--கவிநயா
என்ன வளம் இல்லை எங்கள் திருநாட்டில்... நல்ல வரிகள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுதல் வருகைக்கு மிக்க நன்றி சசி கலா!
Deleteவணக்கம்
ReplyDeleteபாரத தேசம் போற்றும் கவிதை அருமையாக உள்ளது.. பகிர்வுக்கு நன்றி
இனிய குடியரசு தினவாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்!
Deleteஅருமையான கவிதை படிக்கும் போது மனதிற்கு சந்தோஷம் அளிக்கிறது. ஆனால் உண்மையான நிலையை பார்க்கும் போது மனதிற்கு வலிதான் தோன்றுகிறது
ReplyDelete/என்ன இல்லை எங்கள் திரு நாட்டில்? //
ReplyDeleteநீதி நேர்மை
/என்ன இல்லை எங்கள் திரு நாட்டில்? //
ReplyDeleteநல்லெண்ணம் கொண்ட தலைவர்கள் இல்லை
/என்ன இல்லை எங்கள் திரு நாட்டில்? //
ReplyDeleteபெண்களை சமமாக மதிக்கும் ஆண்கள் இல்லை
ReplyDelete/என்ன இல்லை எங்கள் திரு நாட்டில்? //
நேர்மையானவர் நிம்மதியாக வாழ வழி இல்லை
நீங்கள் சொல்வது உண்மைதான். உங்கள் ஆதங்கம் புரிகிறது. அதனை நானும் பகிர்ந்து கொள்கிறேன்... அவை யாவும் மனிதர்கள் தாமாக வளர்த்துக் கொண்ட குறைகள். இருக்கின்ற இயற்கை வளத்தையும் நல்லவற்றையும் மட்டுமே எடுத்துச் சொன்னேன்...அவற்றை முறையாகப் பயன்படுத்துவது நம் கையில்தான் இருக்கிறது. வருகைக்கும், கருத்திற்கும் மிகவும் நன்றி!
Deleteநல்ல கவிதை...
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி.
நன்றி குமார்!
Delete