குட்டக் குட்டக் குனிவதனால்
நான் முட்டாளில்லை...
குனிந்து தரையில் வீழ்வதனால்
நான் கோழையுமில்லை...
மட்டந்தட்டிப் பேசுவோரிடம்
மார்தட்டி வீரம் காட்ட
நான்
மீசை வைத்த ஆண் பிள்ளையுமில்லை...
ஒரு வார்த்தை வீசுதற்கு
ஒரு நொடியும் ஆகாது;
ஆயினும்,
வீசியதைப் பிடிக்கும் வலை
இவ்வுலகில் எங்குமில்லை
என்றுணர்ந்த
சாதாரண பெண்தான் நான்...
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://arouna-selvame.blogspot.com/2013/08/blog-post.html
(அந்தக் காலத்தில், 2005-ல் எழுதியது, இப்பவும் சரியாதானே இருக்கு? :)
ம்ம்ம்ம்ம் எப்போவுமே சரியாவும் இருக்கும். :)
ReplyDelete:) ஆமாம்!
Deleteவருகைக்கு நன்றி அம்மா.
எப்பவுமே சரியாகத்தான் பொருந்தும்...
ReplyDeleteஉண்மை அம்மா :) நன்றி!
Deleteரொம்ப ரொம்ப சரியா இருக்கு :)!
ReplyDelete:) ரொம்ப ரொம்ப நன்றி!
Deleteசூப்பர்!.. 'நச்'சுனு இருக்கு வரிகள்!..
ReplyDeleteநன்றி பார்வதி!
Deleteஹ! என்னமாய் தன்னை வெளிப்படுத்தல்!....
ReplyDeleteஅறிவும் மனமும் வெவ்வேறாய் இல்லாமல் இணைந்து செயல்பட்ட அழகான கவிதை வரிகள்! 'இப்பவும் சரியாய் இருக்கிற' ஆதங்கம் புரிகிறது!
//அறிவும் மனமும் வெவ்வேறாய் இல்லாமல் இணைந்து செயல்பட்ட அழகான கவிதை வரிகள்!//
Deleteஆமால்ல? நீங்க சொன்ன பிறகுதான் உணர்றேன்... மிக்க நன்றி ஜீவி ஐயா!
correct
ReplyDelete:) நன்றி தானைத் தலைவி!
Delete///வீசியதைப் பிடிக்கும் வலை
ReplyDeleteஇவ்வுலகில் எங்குமில்லை
என்றுணர்ந்த
சாதாரண பெண்தான் நான்..///
அந்த புரிதல் வந்த பின்னே அசாதாரணப் பெண்ணே அவள்.
நல்ல கருத்து
அப்படியா சொல்றீங்க! மிக்க நன்றி கபீரன்பன் ஐயா!
Deleteஉண்மை தான்
ReplyDeleteநன்றி திகழ்!
Deleteஒரு வார்த்தை வீசுதற்கு
ReplyDeleteஒரு நொடியும் ஆகாது;//
அருமை.. கண்ணியம் காப்பதில் பெருமைதான் நமக்கும்
//கண்ணியம் காப்பதில் பெருமைதான் நமக்கும்//
ReplyDeleteஉண்மைதான்! வருகைக்கு நன்றி ரிஷபன்!