அனைவருக்கும் தித்திக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!
மனசெல்லாம் சுத்தம் செய்து நல்லதாக்குவோம்
கள்ளங் கபடமில்லா வெள்ளை உள்ளமாக்குவோம்
இறைவன் வந்து வாழுகின்ற இல்லமாக்குவோம், நம்
இஷ்ட தெய்வம் வந்துறையும் கோயிலாக்குவோம்!
நல்ல எண்ணங்களால் மனசை உழுது வைக்கணும்
நற்குணத்தை நாத்து நட்டு பயிரு வளர்க்கணும்
ஆசை, குரோதம், தன்னலமாம் களைகள் பிடுங்கணும்
அன்பை வளர்த்து அனைவருக்கும் அள்ளிக் கொடுக்கணும்!
மாடு போல சோர்வில்லாம நாம உழைக்கணும்
மற்றவர்க்கு உதவிடவே வாழ்க்கை வாழணும்
உலகமெல்லாம் ஒரேவீடா நாம நினைக்கணும்
உள்ள மக்களெல்லாம் நம்ம சொந்தமாகணும்!
அகத்தினிலே படிந்த இருள் விலகி ஓடட்டும்
அகமெல்லாம் இறையருளால் நிறைந்து ஒளிரட்டும்
இதயத்திலோர் கதிரவனாய் அவன் விளங்கட்டும்
இன்பமெல்லாம் அவன் பதமே என்றுணரட்டும்!
இறையடிகள் பணிந்து விட்டால் ஓடும் துன்பமே
இறையவனை உணர்ந்து விட்டால் என்றும் இன்பமே
இறையவனின் நினைவாலே இதயம் பொங்குமே
இறை நாமம் சொல்லச் சொல்ல இன்பம் தங்குமே!
--கவிநயா
நன்றி: வல்லமை பொங்கல் சிறப்பிதழ்
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்... சிறப்பு பகிர்வு :
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.html
பாடல் அருமை கவிநயா.
ReplyDeleteதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!
மிக்க நன்றி ராமலக்ஷ்மி!
Deleteஇனிய தைப் பொங்கல் +புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
ReplyDeleteகுடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக
மலரட்டும் ......
மிக்க நன்றி அம்பாளடியாள்.
Deleteஉங்கள் கவிதையில், உளப்பொங்கல் எவ்விதம் அருமையாய் வைக்கப்பட வேண்டுமென்பதை மிக அழகாய் விளம்பியுள்ளீர்கள். இனிப்பு, உப்பு, காரம் உட்பட அறுசுவையும் சரியான விகிதத்தில் இந்த பொங்கலுள்ளே பறிமாரப்பட்டிருக்கிறது. மனமெனு நா, இதனைத் தக்கப்டி சுவைப்பின், இறையின் பாதம் நம் சிரம் மேல் பதியும் நிச்சயமாய்!!
ReplyDeleteமிக்க அருமை, கவிநயா!!!
ஆனந்தப் பொங்கலை ரசித்து ருசித்தமைக்கு மிக்க நன்றி சுந்தர்!
Deleteஆஹா ! அற்புதம்! ஆனந்தம் பொங்க, பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி தானைத் தலைவி!
Deleteஅருமை....
ReplyDeleteஉங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.
மிக்க நன்றி வெங்கட்.
Deleteமிக்க நன்றி தனபாலன். உங்கள் பதிவையும் வாசித்து மகிழ்ந்தேன். சுட்டிக்கு நன்றி :)
ReplyDelete