உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Tuesday, January 7, 2014
மறுபடியும் பிள்ளையார்
பிள்ளையார் வேஷம் போட்டு நிறைய படங்களில் பார்த்திருக்கோம். ஆனால் இது வரை நான் பார்த்ததிலேயே best பிள்ளையார், விஜய் தொலைக்காட்சியில், ‘சிவம்’ தொடர்ல வர்ற பிள்ளையார்தான்!
வழக்கமா செய்யற மாதிரி ஒரு யானை முக முகமூடியை மாட்டி விடாம, இந்தப் பிள்ளைக்கு மூக்கில் ஆரம்பிச்சு முகத்தோட முகமா தும்பிக்கை செய்திருக்காங்க. அதனால விநாயகர் முகம் ரொம்ப இயற்கையா, அழகா, அமைஞ்சிருக்கு. அதோட மட்டுமில்லாம, அந்தக் குட்டிப் பிள்ளைக்கு தொந்தியும் பிள்ளையார் போலவே perfect-ஆ இருக்கு! ஒரு காலை மடிச்சு ஒரு காலைத் தொங்க விட்டு உட்காரும்போது சாட்சாத் பிள்ளையாரே பிரத்தியட்சமா வந்துட்டாரோன்னு தோணும்!
பிள்ளையாரை முருகனுக்கு இளையவரா சித்தரிச்சிருக்காங்க. கள்ளமில்லாத வெள்ளை மனசோட, சத்தியவானா, அன்பானவரா, பரோபகாரியா இருக்கிற குட்டிப் பிள்ளையாரைப் பார்க்கப் பார்க்கப் பரவசம்தான். அவர் வரும் காட்சிகள் எனக்குப் பிடித்தமானவை. நெற்றியும் கண்களும் மட்டுமே வெளியில் தெரியற நிலையில், கண்களை மட்டுமே சுருக்கியும், விரிச்சும் பாவங்களை வெளிப்படுத்தறது இந்தப் பிள்ளையோட சிறப்பு. சிவன் மற்றும் நந்தியா வர்றவங்களோட நடிப்பும் ரொம்பவே அருமை.
பிள்ளையாரா வந்து அசத்தற இந்தக் குட்டிப் பிள்ளை யாருன்னு தேடிப் பார்த்தேன், இன்னும் பேரு கண்டு பிடிக்க முடியலை. உங்களுக்குத் தெரியுமா?
***
அதோடு கூட புது வருஷத்துக்கான, எனக்குப் பிடிச்ச, ஆங்கிலக் கவிதை ஒண்ணு:
Once again, wish you all a very Happy, Healthy, and a Wonderful New Year!
“Another fresh new year is here . . .
Another year to live!
To banish worry, doubt, and fear,
To love and laugh and give!
This bright new year is given me
To live each day with zest . . .
To daily grow and try to be
My highest and my best!
I have the opportunity
Once more to right some wrongs,
To pray for peace, to plant a tree,
And sing more joyful songs!”
― William Arthur Ward
அன்புடன்
கவிநயா
படத்துக்கு நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
நான் டி.வில பார்க்கலை. ஆனா நீங்க போட்டிருக்கிற படம் ரொம்ப நன்னா இருக்கு. இப்போல்லாம் மேக்கப் ல நிறைய முன்னேறிட்டாங்க. புது வருஷ கவிதை அற்புதம், ரொம்ப நேர்மறையான கருத்து. எனகென்னவோ, ஆங்கிலம் படிக்க முயர்ச்சி பண்ண கூட தயக்கம் தான். நீங்க போட்டா படிக்கிறேன். தேடிப்போய் படிக்க தெரியல. ம்..ம்.. இன்னும் முன்னேறணும். :)))
ReplyDeleteவாங்க தானைத் தலைவி. சரியா சொன்னீங்க. இப்பதான் மேக்கப்லாம் ரொம்ப அழகா சுலபமா பண்றாங்களே...ஆங்கிலம்... ஆங்கிலம் மட்டுமில்ல, பொதுவாகவே இப்பல்லாம் அதிகமா வாசிக்கறதில்லை...நேரமும் இல்லை. இந்த மாதிரி கண்ல பட்டா பகிர்ந்துக்கறேன். வருகைக்கு நன்றி :)
Deleteஅழகான பிள்ளை 'யார்'...
ReplyDeleteகவிதை அருமை...
நன்றி தனபாலன் :)
DeleteI have the opportunity
ReplyDeleteOnce more to right some wrongs,//
ரொம்பப் பிடிச்சது. ம்ம்ம்ம்ம், பிள்ளையார் பெயரைப் பார்த்துட்டு ஓடோடி வந்தேன். ஆனால் நீங்க சொல்றதெல்லாம் புதுசு. பார்த்ததில்லை. :))))
வாங்க கீதாம்மா. போன வாரமே பிள்ளையாரைப் பார்க்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன், ஆனா நீங்க வரவே இல்லை :( சரி பரவாயில்லை, இப்ப வந்ததே மகிழ்ச்சி :) நன்றி அம்மா.
Delete//போன வாரமே பிள்ளையாரைப் பார்க்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன், ஆனா நீங்க வரவே இல்லை //
ReplyDeleteபோன மாசம் முழுக்கவுமே இணையத்தில் அதிகமா இல்லை. குழும மாடரேஷன் மடல்களை மட்டும் பார்க்க அரைமணி, ஒரு மணி வருவேன்! :)))) அதனால் பிள்ளையார் போன வாரம் வந்தது தெரியாது. பார்க்கிறேன் அவரையும். :))))
வந்து பார்த்ததைப் பார்த்தேன்... நன்றி அம்மா!
Deleteஅழகான பிள்ளையார்....
ReplyDeleteகவிதை அருமை...
வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சே.குமார்!
Delete