அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்!
நவராத்திரிக்கு துர்க்கை பாடல் இங்கே இட்டிருந்தேன், சுப்பு தாத்தா ஆனந்த பைரவியில் பாடித் தந்தார்... இப்போது மகாலக்ஷ்மிக்கான பாடல் இங்கேயே :) சுப்பு தாத்தா அடானாவில் பாடித் தந்திருக்கிறார்! மிக்க நன்றி தாத்தா!
மதியொளி முகத்தினள் கதிரொளி நிறத்தினள்
தாமரைக் கரத்தினள் தங்கத்தின் குணத்தினள்!
அலைகடல் நடுவினில் அவதரித்தவள் அவள்
அரிதுயில் மாலவன் மனங்கவர் மனையவள்
விரிமலர் மீதினில் வீற்றிருப்பவள் அவள்
பரிகின்ற தாயென புவியினைக் காப்பவள்!
மரகத வண்ணனின் மார்பினில் உறைபவள்
மறைக ளெல்லாம் போற்றும் மங்கலப் பெண்ணவள்
கருவிழி இரண்டினால் உறுவினை அழிப்பவள்
கவிமழை யில்மகிழ்ந்து கனிமழை பொழிந்தவள்!
--கவிநயா
நன்றி: வல்லமை
சுப்பு தாத்தா அவர்களுக்கு மிக்க நன்றி...
ReplyDeleteபகிர்ந்து கொண்ட உங்களுக்கும் நன்றி...
இனிய நவராத்திரி வாழ்த்துகள் கவிநயா:)! அழகிய பாடல்.
ReplyDeletethanks both fr the sweet song !!
Deleteநவராத்திரி வாழ்த்துகள். அன்னைக்கு அழகிய பாமாலை சூட்டியதுக்கும் சேர்த்து வாழ்த்துகள்.
ReplyDelete