சின்னஞ் சிறிய குருவி போல
சிறகடித்துப் பறக்கலாம்!
வண்ண வண்ணப் பறவை போல
வான்முழுதும் அளக்கலாம்!
கன்னங்கருங் காக்கை போல
கூடியிருந்து மகிழலாம்!
பென்னம் பெரிய மரத்தைப் போல
பிறர்க்கு நிழலைக் கொடுக்கலாம்!
அளிந்த கனியைப் போல இனிய
வார்த்தைகளைப் பேசலாம்!
இயலாமல் இருப்பவர்க்கு இயன்ற
உதவி செய்யலாம்!
அன்பு என்னும் இறையை நமது
மனதில் நிலைக்கச் செய்யலாம்!
அகிலம் எல்லாம் நமது என்ற
உணர்வினிலே திளைக்கலாம்!!
--கவிநயா
நன்றி: அதீதம்
படத்துக்கு நன்றி: கூகுளார்
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!!
\\அகிலம் எல்லாம் நமது என்றஉணர்வினிலே திளைக்கலாம்!!\\
ReplyDeleteநன்று ;-)
உங்களுக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் ;)
செம ஸ்பீடுக்கா நீங்க ;-))
நன்றி கோபி!:)
ReplyDelete/
ReplyDeleteபென்னம் பெரிய மரத்தைப் போல
பிறர்க்கு நிழலைக் கொடுக்கலாம்!
/
அருமை. நல்ல கவிதை கவிநயா.
நன்றி ராமலக்ஷ்மி :)
ReplyDelete