Sunday, January 15, 2012

பொங்கல் நினைவுகள்

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

பண்டிகைகளிலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சது பொங்கல்தான். அதுவும் கிராமத்தில் கொண்டாடும் சுகமே சுகம்!

எங்க வீட்டுக் கோலம்

பாட்டி வீடு 'ஜே ஜே'ன்னு இருக்கும். சும்மாவே எனக்கு கோலம் போடறதுன்னா ரொம்பப் பிடிக்கும். அதனாலேயே பொங்கலும் பிடிக்க ஆரம்பிச்சிருச்சு போல. (சொல்ல மறந்துட்டேனே! மார்கழியும் அதனாலதான் பிடிக்கும் - சின்னப் பிள்ளையா இருக்கும் போதே!)

முதல் நாள் இராத்திரியே முற்றத்தில் பெருசா பெருசா மாக்கோலம் போடுவோம். பிறகு அடுப்பு, பானைகளுக்கெல்லாமும் கோலமிட்டு மஞ்சள் கொத்து கட்டுவோம். மறு நாள் காலையில் குளிச்சு, புதுசு கட்டி, வாசல் நிறைய்ய்ய்ய வண்ணக் கோலம் போடுவோம். பிறகு அடுப்பில் விறகை வச்சு புகையப் புகைய ஊதி ஊதி கண்ணு எரிய எரிய அதை எரிய வச்சு பொங்கல் இட்டாதான் பொங்கல் கொண்டாடின மாதிரியே இருக்கும்! கோவிலுக்கு எல்லாப் பொருளும் எடுத்துகிட்டு போய் அங்கேயும் பொங்கல் வைப்போம். இதுக்கு நடுவில் சமையலும் நடக்கும். இன்னொரு பக்கம் கரும்பு, பனங்கிழங்கு இதெல்லாம் உள்ள போயிக்கிட்டே இருக்கும்!


அவலை நினைச்சுக்கிட்டே உரலை இடிச்ச கதைதான் இங்கே. வீட்டுக்குள்ளேயே குட்டியா கோலம் போட்டு, மின் அடுப்பில் பொங்கல் வச்சு, கிடைக்கிற காயை சமைச்சு வச்சு சாமி கும்பிட்டா பொங்கல் முடிஞ்சது. இந்த வருஷம் ஞாயிற்றுக் கிழமை வந்ததில் இங்கே எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம் :) ஓரளவு உருப்படியா சூரியன் இருக்கும் போதே சாமி கும்பிட்டாச்சு. (நம்மூர்ல விடுமுறை நாள்ல ஒண்ணு குறைஞ்சிருச்சேன்னு வருத்தம் போல!). என்ன செய்யறது, ஒருத்தருக்கு இருட்டுன்னா இன்னொருத்தருக்கு பகல்!

நீங்களும் சாப்பிட வாங்க!

நிலங்கள் அழிஞ்சு நகரங்கள் ஆகாமல், விவசாயமும் விவசாயிகளும் செழிப்பா இருக்கணும். உணவளிக்கும் உழவர்களுக்கும், கதிரவனுக்கும், மாடுகளுக்கும், எல்லாவற்றையும் நடத்தும் இயற்கைக்கும், அதையும் நடத்தும் இறைவனுக்கும், நன்றி... நன்றி... நன்றி!

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

14 comments:

  1. அக்கா மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ;-)

    ஏவ்வ்வ்வ் ;-)))

    ReplyDelete
  2. நிலங்கள் அழிஞ்சு நகரங்கள் ஆகாமல், விவசாயமும் விவசாயிகளும் செழிப்பா இருக்கணும். உணவளிக்கும் உழவர்களுக்கும், கதிரவனுக்கும், மாடுகளுக்கும், எல்லாவற்றையும் நடத்தும் இயற்கைக்கும், அதையும் நடத்தும் இறைவனுக்கும், நன்றி... நன்றி... நன்றி!//


    mmmmm ithan mukkiyam.:(

    ReplyDelete
  3. குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ;-

    subbu rathinam
    pl see your own Pongal Greetings posting by clicking your name in
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  4. நன்று..பொங்கல்-கனு...வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
  5. வாழ்த்துகளுக்கும்,

    //ஏவ்வ்வ்வ் ;-)))//

    சாப்பிட்டதுக்கும், மிக்க நன்றி கோபி :)

    ReplyDelete
  6. //mmmmm ithan mukkiyam.:(//

    ஆமாம் கீதாம்மா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. //குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ;-//

    மிக்க நன்றி தாத்தா. நீங்கள் ஒவ்வொருவராக நினைவில் வைத்து வாழ்த்திய அன்பையும் கண்டேன். மிகவும் நன்றி.

    ReplyDelete
  8. //நன்று..பொங்கல்-கனு...வாழ்த்துக்கள் அக்கா...//

    நன்றி மௌலி. உங்களுக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  9. Kolam Alagaai irukkirathu;Ilayil ulla patharthangalum!
    Natarajan.

    ReplyDelete
  10. /Kolam Alagaai irukkirathu;Ilayil ulla patharthangalum!//

    நன்றி திரு.நடராஜன் :)

    ReplyDelete
  11. உரலை நன்றாகவே இடித்திருக்கிறீர்கள், அவலை நினைத்து.....! வாழ்த்துக்கள்!சோமு.பழ.கருப்பையா.

    ReplyDelete
  12. //அவலை நினைச்சுக்கிட்டே உரலை இடிச்ச கதைதான் இங்கே. //

    அதுதான் நடக்கு:))! கொஞ்சம் முனைஞ்சு அவலாக்காம பழச நினைச்சபடியே குக்கரிலே பொங்கலிட்டு சன்னல் வழியே சூரியனை நமஸ்கரிச்சு முடிச்சுக்கறோம் பொங்கலை:)!

    நல்ல பகிர்வு. வாழ்த்துகள் கவிநயா.

    ReplyDelete
  13. //உரலை நன்றாகவே இடித்திருக்கிறீர்கள், அவலை நினைத்து.....! வாழ்த்துக்கள்!சோமு.பழ.கருப்பையா.//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, சோமு!

    ReplyDelete
  14. //அதுதான் நடக்கு:))! கொஞ்சம் முனைஞ்சு அவலாக்காம பழச நினைச்சபடியே குக்கரிலே பொங்கலிட்டு சன்னல் வழியே சூரியனை நமஸ்கரிச்சு முடிச்சுக்கறோம் பொங்கலை:)!//

    ஏதோ நம்மால முடிஞ்சது... :)

    நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)