உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Sunday, March 20, 2011
நீ அங்கு நலமா?
துயரக்கடலில் நீண்ட நேரம் நீந்தியும்
கரை சேராமல் களைத்துப் போகின்றன
நினைவலைகள்
கதிரவனைக் காணாத தைரியத்தில்
இறுக்கமாய் மனசை மூடிக்கொள்கின்றன
சூல்மேகங்கள்
கனவுகளில்கூட கணமும் நிற்காமல்
விடாமல் கொட்டுகிறது
கண்ணீர் கனமழை
எட்டிப் பார்த்த ஒரே ஒரு நட்சத்திரம்கூட
இருட்டுக்குப் பயந்து
சுருக்குப் போட்டுக் கொள்கிறது
எப்படியோ கண் அயரும்
அரைகுறை உறக்கத்தில்
அம்மாவின் அழைப்பு -
"நல்லாருக்கியாம்மா?"
அனிச்சையாய் ஒலிக்கும்
இவளின் பதில் -
"ஓ! ரொம்ப நல்லாருக்கேம்மா!"
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/gumpfisher/2061251378
Subscribe to:
Post Comments (Atom)
இயல்பாகிப் போன சில வழக்கங்களை ரொம்ப இயல்பாகவேச் சொல்லி விட்டீர்கள்.. அந்த "ரொம்ப நல்லா இருக்கேம்மா"வைத் தொடர்ந்தும் இருக்கிறது..
ReplyDelete"நல்லா இருக்கேம்மா.. நீ எப்படிருக்கே?"
"நானும் நல்லாருக்கேம்மா.."
அம்மாவிடமிருந்து வரும் பதிலைக் கேட்டு மனசுக்கு ஒரு திருப்தி.
சின்ன உரையாடல் தான். இருந்தும்
ஆயிரம் கஷ்டங்களுக்கிடையேயும் இரண்டு பக்கமும் ஏற்படும் மனநிறைவு மனசுக்கு ரொம்ப ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
மூன்று வார்த்தை விசாரிப்பு நிகழ்த்தும் அற்புதம், அனிச்சையான மூன்று வார்த்தை பதிலை எப்போதும் நிஜமாக்கியபடியே இருப்பதுதான்.
ReplyDeleteகவிதை மிகப் பிடித்தது கவிநயா.
அனிச்சையாய் ஒலிக்கும்//
ReplyDeleteவார்த்தைகள் மனதைத் தொட்டன.
"எட்டிப்பார்த்த ஒரே ஒரு நட்சத்திரம் கூட
ReplyDeleteஇருட்டுக்கு பயந்து
சுருக்குபோட்டுக் கொள்கிறது"
there's so much to read between these lines!
வருடங்கள் கடந்து போகும்
ReplyDeleteஇவளும் இதையே கேட்பாள்
இவள் மகளும் சொல்வாள்
ஓ... ரொம்பவே...
கதிரவனைக் காணாத தைரியத்தில்
ReplyDeleteஇறுக்கமாய் மனசை மூடிக்கொள்கின்றன
சூல்மேகங்கள்
எட்டிப் பார்த்த ஒரே ஒரு நட்சத்திரம்கூட
இருட்டுக்குப் பயந்து
சுருக்குப் போட்டுக் கொள்கிறது -
அருமையான வரிகள் ஆயிரம் அர்த்தங்கள்,நன்று கவிநயா
நல்லாருக்கீங்களா என்ற கேள்விக்கு நல்லாயில்லை என்ற பதிலை இதுவரை யாருமே கேட்டிருக்க முடியாது.. ஆனா கவிதை நல்லாருக்குங்க :-)
ReplyDelete//சின்ன உரையாடல் தான். இருந்தும்
ReplyDeleteஆயிரம் கஷ்டங்களுக்கிடையேயும் இரண்டு பக்கமும் ஏற்படும் மனநிறைவு மனசுக்கு ரொம்ப ஆரோக்கியத்தைக் கொடுக்கும்//
சரியாக சொன்னீர்கள் ஜீவி ஐயா.
வருகைக்கு மிக்க நன்றி.
//மூன்று வார்த்தை விசாரிப்பு நிகழ்த்தும் அற்புதம், அனிச்சையான மூன்று வார்த்தை பதிலை எப்போதும் நிஜமாக்கியபடியே இருப்பதுதான்.//
ReplyDeleteநீங்கள் சொன்ன விதத்தில் இருந்த அழகை ரசித்தேன். மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
//அனிச்சையாய் ஒலிக்கும்//
ReplyDeleteவார்த்தைகள் மனதைத் தொட்டன.//
மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.
//அருமையான வரிகள் ஆயிரம் அர்த்தங்கள்,நன்று கவிநயா//
ReplyDeleteமிக்க நன்றி செந்தில்வேலன்.
//there's so much to read between these lines!//
ReplyDeleteஉண்மைதான் லலிதாம்மா.
வருகைக்கு மிக்க நன்றி.
//வருடங்கள் கடந்து போகும்
ReplyDeleteஇவளும் இதையே கேட்பாள்
இவள் மகளும் சொல்வாள்
ஓ... ரொம்பவே...//
எங்கேயோ போயிட்டீங்களே. மகளாவது நிஜமாவே நல்லாருக்கட்டுமே :)
மிக்க நன்றி சிவகுமாரன்.
//நல்லாருக்கீங்களா என்ற கேள்விக்கு நல்லாயில்லை என்ற பதிலை இதுவரை யாருமே கேட்டிருக்க முடியாது.. //
ReplyDeleteஅதை சொல்ல வந்த கவிதைதாங்க, உழவன். எவ்வளவு துன்பத்தில் இருந்தாலும், பிறரை, குறிப்பாக பெற்றவளை கவலை கொள்ள வைக்கக் கூடாது என்ற மனசு...
//ஆனா கவிதை நல்லாருக்குங்க :-)//
மிக்க நன்றி.
அருமை
ReplyDeleteஅதுவும் அனிச்சையாய் சொல்லும் நலம்
மிக அருமை
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
//அருமை
ReplyDeleteஅதுவும் அனிச்சையாய் சொல்லும் நலம்
மிக அருமை
நல்ல பதிவு//
மிக்க நன்றி ரமணி.
உழவன் ரொம்ப சரியா சொன்னாரு!
ReplyDelete//உழவன் ரொம்ப சரியா சொன்னாரு!//
ReplyDeleteஅப்படின்னா அவருக்கு சொன்னதையே நானும் உங்களுக்கு சொல்லிடறேன்!
வருகைக்கு நன்றி திவா ஜி.