காதலர் தினத்துக்காக இளமை விகடனில் பிரசுரமானது...
நொடி கூட நிற்காமல்
ஓடிக் கொண்டே இருக்கிறாயே
என் நினைவுக்குள்...
உனக்கு கொஞ்சமும்
கால் கடுக்கவில்லையா?
**
அடிக் கரும்புச் சாறாய்
தித்தித்துக் கிடக்கின்றாய்
அடிமனசில்...
ஆனாலும் எனக்குச் சற்றும்
திகட்டுவதே இல்லை,
உன் நினைவுகள்!
**
உன் நினைவே என்னுடைய
சுவாசமாய் ஆகியபின்
மனசெல்லாம் எப்போதும்
மணத்தே கிடக்கின்றது...
உன் வாசமாய்!
**
--கவிநயா
//நொடி கூட நிற்காமல்
ReplyDeleteஓடிக் கொண்டே இருக்கிறாயே
என் நினைவுக்குள்...
உனக்கு கொஞ்சமும்
கால் கடுக்கவில்லையா?//
அருமை. ரசித்தேன்.
இளமை விகடனில் அப்போதே வாசித்தேன். வாழ்த்துக்கள் கவிநயா!
தவறாத வருகைக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி :)
ReplyDelete/அடிக் கரும்புச் சாறாய்
ReplyDeleteதித்தித்துக் கிடக்கின்றாய்
அடிமனசில்...
ஆனாலும் எனக்குச் சற்றும்
திகட்டுவதே இல்லை,
உன் நினைவுகள்!/
அருமை
வாங்க திகழ். மிக்க நன்றி.
ReplyDeleteகவிதை காதல் மனம் வீசுகிறது.... நன்று.
ReplyDeleteநன்றி திரு.கருணாகரசு.
ReplyDeleteஅழகான காதல் கவிதை...வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாங்க ப்ரியா. முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி. உங்க வலைபூவை பார்த்தேன். வெகு அழகாக இருக்கிறது!
ReplyDeleteஅழகான வார்த்தை கோர்வை. ரசித்து படித்தேன் கவிநயா. வாழ்த்துக்கள்
ReplyDeletesema... pakka romance :)
ReplyDeleteநன்றி ரசிகன்.
ReplyDelete//அழகான வார்த்தை கோர்வை. ரசித்து படித்தேன் கவிநயா. வாழ்த்துக்கள்//
ReplyDeleteஎப்படியோ பதில் எழுத விட்டுப் போச்சு. மன்னிச்சுக்கோங்க, அப்பாவி தங்கமணி. முதல் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.