உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Monday, March 30, 2009
பதங்களின் சரசம் !
அண்ட சராசரம் அனைத்தும் உறைய!
ஆடிய பதங்களில் ஆனந்தம் துலங்க!
இருகரு விழிகளில் கனவுகள் விரிய!
நவரசம் கண்டு நானிலம் மயங்க!
காற்றினில் கால்கள் கவிதைகள் எழுத!
காற்சதங்கை ஒலி பாடல்கள் இசைக்க!
கூந்தல் கலைந்து வானம் அளக்க!
அபிநயம் பார்த்து அகிலம் வியக்க!
சுவாசம் சற்றே வேகம் கூட்ட!
வியர்வை கங்கை ஆறாய் ஓட!
நினைவுகள் யாவும் நிர்மலமாக!
உணர்வுகள் மறைந்து உலகம் ஜொலிக்க!
ஆடல் புரிதல் ஆனந்தமன்றோ!!
பதங்களின் சரசம் பரவசமன்றோ!!
--கவிநயா
படத்திற்கு நன்றி: கயல்விழி முத்துலக்ஷ்மி, மற்றும் ராமலக்ஷ்மி
Subscribe to:
Post Comments (Atom)
ஆனந்த தாண்டவம்
ReplyDeleteஅழகாய் வரிகளில்.
அத்தனை வரிகளிலும் மனமது லயிக்க
ReplyDeleteஅற்புதக் கவிதையில் அசந்தே போனேன். அருமை கவிநயா. வாழ்த்துக்கள்.
படத்துக்கு எனக்குமா நன்றி:)? அந்த அபிநய தருணத்தை அழகாகப் படம் பிடித்த முத்துலெட்சுமியிடன் அனுமதி மட்டும்தானே பெற்றுத் தந்தேன்:)? சும்மா சொல்லக் கூடாது இந்தக் கவிதைக்கு அப்படம் அத்தனை பொருத்தமாக அமைந்து விட்டிருக்கிறது.
ReplyDeleteநயமும் செறிவும் மிக்க கவிதை
ReplyDeleteசூப்பர்க்கா...கலக்குங்க.. :)
ReplyDeleteஅழகு !
ReplyDelete/கூந்தல் கலைந்து வானம் அளக்க!//
ReplyDeleteஅச்சச்சோ! சரியா பின்னிக்கப்படாதோ!
:-0
ஹிஹி நல்லா இருக்கு கவிதை!
தன்யாசி ராகத்தில் வெகு பொருத்தமாக அமைந்திருக்கிறது.
ReplyDeleteஇதை எனது வலைப்பதிவு
http://menakasury.blogspot.com
கேட்டு மகிழவும்.
இந்த அழைப்பு திருமதி ராமலக்ஷ்மி, முத்துலக்ஷ்மி, மற்றும் மேடம் கவினயா அவர்களின்
வலைப்பதிவுக்கு வருகை தரும் எல்லோருக்கும்.
சுப்பு தாத்தா.
கவிதை தாண்டவம் ;))
ReplyDeleteபடத்துக்கு ஏற்ப கவிதையை அழகு படுத்திட்டிங்க்கா ;)
//ஆனந்த தாண்டவம்
ReplyDeleteஅழகாய் வரிகளில்.//
வாங்க ஜமால். மிக்க நன்றி :)
//அத்தனை வரிகளிலும் மனமது லயிக்க
ReplyDeleteஅற்புதக் கவிதையில் அசந்தே போனேன்.//
வாங்க ராமலக்ஷ்மி. எனக்கே பிடிச்ச (என்னுடைய) ஒருசில கவிதைகளில் இதுவும் ஒண்ணு. உங்களுக்கும் பிடிச்சிருப்பது பற்றி மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் :)
//முத்துலெட்சுமியிடன் அனுமதி மட்டும்தானே பெற்றுத் தந்தேன்:)?//
ReplyDeleteசரியான நேரத்தில் அல்லவா உதவினீங்க? அதுக்குத்தான் அந்த நன்றி :)
//சும்மா சொல்லக் கூடாது இந்தக் கவிதைக்கு அப்படம் அத்தனை பொருத்தமாக அமைந்து விட்டிருக்கிறது.//
ஆமால்ல? :) கயல்விழி பார்த்தாங்களான்னு தெரியல.
//நயமும் செறிவும் மிக்க கவிதை//
ReplyDeleteவாருங்கள் திரு.மாலன்! உங்கள் முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் :)
//சூப்பர்க்கா...கலக்குங்க.. :)//
ReplyDeleteசொல்லிட்டீங்கள்ல, கலக்கிருவோம்... :) வருகைக்கு நன்றி மௌலி.
//அழகு !//
ReplyDeleteகுட்டியூண்டு பின்னூட்டமா இருக்கு? வருகைக்கு நன்றி ரிஷு :)
//அச்சச்சோ! சரியா பின்னிக்கப்படாதோ!
ReplyDelete:-0//
சரியான ஆளு திவா... உங்களுக்குன்னு தோணுமே :)
//ஹிஹி நல்லா இருக்கு கவிதை!//
ஹிஹி... நன்றி :)
//தன்யாசி ராகத்தில் வெகு பொருத்தமாக அமைந்திருக்கிறது.//
ReplyDeleteநீங்களே சொல்லியிருக்க மாதிரி வெகு பொருத்தமாக இருக்கு தாத்தா. படங்களும் ஜெட் வேகத்துல பொருத்தமா அழகா பிடிச்சு போட்டிருக்கீங்க. அருமை. மிக்க நன்றி.
//கவிதை தாண்டவம் ;))//
ReplyDeleteவாங்க கோபி. மிக்க நன்றி :)
//படத்துக்கு ஏற்ப கவிதையை அழகு படுத்திட்டிங்க்கா ;)//
கவிதைக்கேற்ற படத்தை பிடிச்சிட்டேன்னு சொன்னா இன்னும் பொருத்தமா இருக்கும் :) கவிதைதான் முதல்ல வந்தது :)
//அந்த அபிநய தருணத்தை அழகாகப் படம் பிடித்த முத்துலெட்சுமியிடம்//
ReplyDeleteகயல்விழி முத்துலக்ஷ்மிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிச்சுக்கறேன்.
//அத்தனை வரிகளிலும் மனமது லயிக்க
ReplyDeleteஅற்புதக் கவிதையில் அசந்தே போனேன்.//
அதே ! அதே !!
//அதே ! அதே !!//
ReplyDeleteவாங்க சதங்கா. மிக்க நன்றி :)
கவிதை நயம் கவிநயா...
ReplyDelete:)
வாங்க முத்துலட்சுமி கயல்விழி :) உங்க பேரை திருப்பி சொல்லிட்டேன்னு நினைக்கிறேன். 'கயல்விழி'ங்கிற பேரு எனக்குப் பிடிக்கும்; அதனாலயா இருக்கும் :)
ReplyDelete//கவிதை நயம் கவிநயா...//
படத்தோடு வருகையும் தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி :)
//ஆடல் புரிதல் ஆனந்தமன்றோ!!
ReplyDeleteபதங்களின் சரசம் பரவசமன்றோ!!//
-- இத்தனைக்கும் பிறகு 'ஆடல் புரிதல்' ஆனந்தமன்றோ!
ஆனந்தம் பார்ப்பவர்க்கு; பார்த்து பரவசப்படுவோருக்கு. இல்லையா?
எந்த கலைப்படைப்பும் 'எவ்வளவு சிரமத்திற்கு பிறகு' என்று பெருமூச்சு தான் பிறக்கிறது..
பரவசப்படுவோரிடமிருந்து ஒரு சிறு பாராட்டு கிடைத்தாலும், உள்ளமெலாம் மகிழ்ந்து, இத்தனை சிரமங்களும் போன இடம் தெரியாமல் பொசுங்கிப் போய், அந்த நேரத்து தான் கலைஞனை பரவசப்படுத்துகிறது..
பிறர் ரசனைக்காக பரவசத்தைப் படைத்து, அவர் ரசனையின் மூலம் தான் பரவசப்படுவது! கோடி பொன் கொடுத்தாலும் கலைஞன் அடையும் இந்த பரவசத்திற்கு ஈடு இணை ஏது?..
இறைவனின் கடாட்சம் கிடைத்த
கலைஞர்கள் பாக்கியசாலிகள்!
அழகான கவிதைக்கு வாழ்த்துக்கள், கவிநயா!
வாருங்கள் ஜீவி ஐயா.
ReplyDelete//ஆனந்தம் பார்ப்பவர்க்கு; பார்த்து பரவசப்படுவோருக்கு. இல்லையா?//
ஆடுபவர்க்கும் பரவசம்தான் :) அனுபவத்தில் உணர்ந்த ஆனந்தத்தை பகிர்ந்து கொள்ள விரும்பியதால் பிறந்ததே இந்த கவிதை :)
(ஏதாவது ஒரு நடன நிகழ்ச்சி பார்த்துட்டு வந்தா போதும்; உடனே தானும் ஆடணும்னு கால் பரபரக்கும் :)
//கோடி பொன் கொடுத்தாலும் கலைஞன் அடையும் இந்த பரவசத்திற்கு ஈடு இணை ஏது?..//
நீங்கள் சொல்வது சரிதான். நீங்கள் கூறியதில் சிந்தனையைத் தூண்டும் செய்திகள் பல இருக்கின்றன.
//இறைவனின் கடாட்சம் கிடைத்த
கலைஞர்கள் பாக்கியசாலிகள்!//
மிகவும் உண்மை :)
வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி ஐயா.
ஆகா. அருமை. அனுபவித்து அனுபவித்து ஆனந்தப்பட்டிருந்தாலன்றி இவ்வளவு அழகாக அமையாது கவிதைகள்.
ReplyDelete//ஆகா. அருமை. அனுபவித்து அனுபவித்து ஆனந்தப்பட்டிருந்தாலன்றி இவ்வளவு அழகாக அமையாது கவிதைகள்.//
ReplyDeleteவருக குமரா. அனுபவிச்சு கவிதை வாசிச்சதுக்கு மிக்க நன்றி :)