ஊர் இருக்க நெலவரத்தப்
பாத் தெனக்குக் கலவரம்
கண்ணு மண்ணு தெரியாம
கண்ட படி ஓடுறாக
காரு வண்டி எடுத்துக்கிட்டு
வேக மாக ஓட்டுறாக
பாலு மொதல் பெட்ரோல் வரை
பாத்துப் பாத்துப் பதுக்குறாக
பள்ளிக் கூடம் எல்லாத்தயும்
பயந்துக் கிட்டு மூடுறாக
என்னடா இதுன்னு விசாரிச்சா,
அட,
நாளக்கி "ஸ்நோ"வாம்!
-- கவிநயா
எங்கூர்ல ஸ்நோ வந்தா இந்த கலாட்டாதான். எப்பவாச்சும் வரதால அப்படி. அடிக்கடி வர ஊர்கள்ல இம்புட்டு பயந்துக்க மாட்டாங்க. எங்கூர்ல நேத்திக்கே ஸ்நோ வந்திருச்சு. இன்னிக்கும் நிக்கிறாப்ல இல்ல. கவிதையைப் போடதான் கொஞ்சூண்டு தாமதம். பாலும் பெட்ரோலும் பதுக்காம விட்ட சோகத்துல இருந்துட்டேன், வேறொண்ணுமில்ல :(
படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/spodzone/3118214068/sizes/m/
\\அட,
ReplyDeleteநாளக்கி "ஸ்நோ"வாம்!
\\
இதான் மேட்டரா
ஏதோ அரசியல் மாதிரி போனிச்சே
\\
ReplyDeleteஅட,
நாளக்கி "ஸ்நோ"வாம்!
\\
:))
//கவிதையைப் போடதான் கொஞ்சூண்டு தாமதம். பாலும் பெட்ரோலும் பதுக்காம விட்ட சோகத்துல இருந்துட்டேன், வேறொண்ணுமில்ல :(//
ReplyDeleteஅதான் பார்த்தேன்..
'ஸ்நோ' முடிகிற நேரத்தில்
சொல்கிறீர்களே என்று!..
பால் புரியுது.
ReplyDeleteஸ்னோ வந்தா பெட்ரோல் ஏன் பதுக்குறீங்க? வெளீயே போக முடியாட்டா பெட்ரோல் எதுக்கு?
பனி பொழிவதையும் பொழியப்போவதையும் எவ்வளவு அழகாக ஒரு பதிவாக்கியிருக்கிறீர்கள் :)
ReplyDeleteரசித்தேன் சகோதரி !
பனி விழும் நாளென்று பரபரக்குது ஊர் அங்கு.
ReplyDeleteபால் பதுக்கா
எண்ணெய் வாங்கா
கவலைக்குள்ளும்
பரபரத்து விட்டது
பாருங்கோ உங்க கை
நாலு வரில நறுக்குன்னு
நெலவரத்த எங்களுக்குச்
சொல்லுபுடணும்னு:)!
\அட,
ReplyDeleteநாளக்கி "ஸ்நோ"வாம்! \\
ஆகா!!!..கலக்கல் ;)
ஸ் நோவாம் நாளைக்குன்னு நீங்க கிளப்பிய பிதியிலே
ReplyDeleteஹம்ஸ்த்வனியிலே ஆரம்பிச்சது மோஹனத்துலே முடியுது.
நீங்களும் சித்த பொருத்துகின்னு ஸ்னோவெல்லாம்
முடிஞ்சப்பறம் நல்ல ஒரு காஃபியை சாப்பிட்டுகிட்டு
வாங்க, ( எனக்கும் கொண்டாங்க. )
வெல்கம் டு மேனகாசூரி ப்ளாக்ஸ்பாட் காம்.
சுப்பு ரத்தினம்
ஸ்நோ வந்தா இப்படிங்களா!
ReplyDeleteநல்லாருக்குங்க... உங்களின் ஆதங்க வரிகள்! வாழ்த்துக்கள்!
வாங்க ஜமால்.
ReplyDelete//ஏதோ அரசியல் மாதிரி போனிச்சே//
அப்படியா. அரசியலுக்கும் எனக்கும் ரொம்ம்ம்ம்ப தூரங்க. வருகைக்கு நன்றி :)
வாங்க தமிழன். புன்னகை கண்டு மகிழ்ச்சி :) வருகைக்கு நன்றி.
ReplyDeleteவாங்க ஜீவி ஐயா.
ReplyDelete//அதான் பார்த்தேன்..
'ஸ்நோ' முடிகிற நேரத்தில்
சொல்கிறீர்களே என்று!..//
நீங்களும் இந்த பக்கந்தான் இருக்கீங்களா? :) உங்களுக்காக ஒரு ஆனை குட்டி ஆனையோட ரொம்ப நாளா காத்திருக்கு பாருங்க.
வருகைக்கு நன்றி ஐயா.
வாங்க திவா.
ReplyDelete//பால் புரியுது.
ஸ்னோ வந்தா பெட்ரோல் ஏன் பதுக்குறீங்க? வெளீயே போக முடியாட்டா பெட்ரோல் எதுக்கு?//
நல்ல கேள்வி. எமர்ஜென்சிக்குதான். கட்டாயம் வெளில போக வேண்டி வந்திருச்சுன்னா, இந்த மாதிரி பனிப்புயல் சமயங்கள்ல பெட்ரோல் கடையெல்லாம் மூடியிருக்க வாய்ப்பிருக்கு. அதான் முன்னெச்சரிக்கையா போட்டு வச்சிக்கிறது. வருகைக்கு நன்றி :)
//ரசித்தேன் சகோதரி !//
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி ரிஷு :) வருகைக்கு நன்றி.
வாங்க ராமலக்ஷ்மி.
ReplyDelete//பாருங்கோ உங்க கை
நாலு வரில நறுக்குன்னு
நெலவரத்த எங்களுக்குச்
சொல்லுபுடணும்னு:)!//
உண்மையச் சொல்லிடறேன். போன ஸ்நோவுக்கு எழுதினதுப்பா. அப்ப வலைப்பூ இருக்கல. அதான் இப்ப ஸ்நோ வந்தோன்ன போட்டேன் :)
வருகைக்கு நன்றி. அப்படியே நீங்க எழுதின குட்டிக் கவிதைக்கும் :)
//ஆகா!!!..கலக்கல் ;)//
ReplyDeleteஆகா பார்த்தோன்ன மிக்க மகிழ்ச்சி கோபி :) வருகைக்கு நன்றி.
வாங்க சுப்பு தாத்தா.
ReplyDelete//நீங்களும் சித்த பொருத்துகின்னு ஸ்னோவெல்லாம்
முடிஞ்சப்பறம் நல்ல ஒரு காஃபியை சாப்பிட்டுகிட்டு
வாங்க, ( எனக்கும் கொண்டாங்க. )//
வந்துட்டேன் உங்களுக்கு குளம்பியோட :) இந்த கவிதைக்கு கூட இசையமைச்சுட்டீங்களே, நீங்க சாதாரணமானவரில்லை :) நன்றி தாத்தா.
//ஸ்நோ வந்தா இப்படிங்களா!
ReplyDeleteநல்லாருக்குங்க... உங்களின் ஆதங்க வரிகள்! வாழ்த்துக்கள்!//
நல்வரவு ஷீ-நிசி. ஆமாங்க, ஸ்நோ வந்தா, அதுலயும் புயலோட நெறய வந்தா இயல்பு வாழ்க்கை பல விதங்கள்ல பாதிக்கப்படும். முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி.
எங்க ஊருல பனி பெய்யுறப்பவும் வாழ்க்கை எப்பவும் போல போய்க்கிட்டு இருக்கும். ரொம்ப அதிகமா பெய்யுறப்ப மட்டும் போக்குவரத்து கொஞ்சம் தாமதம் ஆகும் - அதுக்காக ஒரு நாலைஞ்சு மணி நேரம் வெளியே போகாம இருக்க முயலுவோம். அம்புட்டுதான். அப்புறம் பழைய படி வாழ்க்கை தொடரும். :-)
ReplyDeleteபாலும் இல்லாட்டி கஷ்டமாச்சே. :-(
பத்திரமா இருங்க.
வர்ஜினியா ரயில்வே ஸ்டேஷன்ல பனி அள்ளுவதைப் பார்த்தேன். உங்க ஊருமா:(
ReplyDeleteஇன்னும் ரெண்டு வெள்ளிக் கவிதை போட்டு விடுங்கள்;)
//எங்க ஊருல பனி பெய்யுறப்பவும் வாழ்க்கை எப்பவும் போல போய்க்கிட்டு இருக்கும்.//
ReplyDeleteஆமால்ல? இதுக்காகவே உங்க ஊருக்கு வந்து எப்படி சமாளிக்கிறீங்கன்னு பாக்கணும்னு நினைச்சுப்பேன் :)
//பாலும் இல்லாட்டி கஷ்டமாச்சே. :-(//
ஆமா. தட்டுத் தடுமாறி இன்னிக்கு போய் வாங்கியாச்!
//பத்திரமா இருங்க.//
நன்றி குமரா :) வழுக்கி விழாம நடக்கறது ரொம்பவே கஷ்டமாதான் இருக்கு :(
வாங்க வல்லிம்மா.
ReplyDelete//வர்ஜினியா ரயில்வே ஸ்டேஷன்ல பனி அள்ளுவதைப் பார்த்தேன். உங்க ஊருமா:(//
எங்கூரும் வர்ஜீனியாலதான் இருக்கு! இங்கேதான் இருந்தீங்களா?
//இன்னும் ரெண்டு வெள்ளிக் கவிதை போட்டு விடுங்கள்;)//
வெள்ளிக் கவிதைன்னா என்ன? புரியலயே :(
வருகைக்கு நன்றி அம்மா.
நியு ஜெர்ஸ்ஸியில் என் மனியின் தம்பி இருக்கிறான். அவன் பசங்கள் இரண்டு பேரும் பனி சருக்கு விளயாட்டு வீட்டிலேயே விளையாடுகிறர்கள் படம் அனுப்பியுருந்தார்கள்
ReplyDeleteகொழந்தைகளுக்கு கொண்டாட்டம்தான்
அது சரி ஸ்ன்நோ இல்லாமலே இதெல்லாம் சென்னையில் நடக்குதே! நம்மவூரே தேவலாம்
//கொழந்தைகளுக்கு கொண்டாட்டம்தான்//
ReplyDeleteஆமாம் தி.ரா.ச. ஐயா. சரியா சொன்னீங்க :)
//அது சரி ஸ்ன்நோ இல்லாமலே இதெல்லாம் சென்னையில் நடக்குதே! நம்மவூரே தேவலாம்//
நம்மூரு நம்மூருதான். :)
வருகைக்கு நன்றி ஐயா.