Saturday, April 5, 2008

பெண்

நீ ஒரு கூண்டுக்கிளி:


பெண் ஒரு தெய்வம்
அவள் கற்புக்கரசி
மென்மையில் மலர்
பொறுமையில் பூமிதேவி
இப்படி
போற்றிப் போற்றிப்
போதையேற்றி
வலி தெரியாமல்
சிறகுகள் கொய்து
தங்கக் கூண்டுக்குள்
பூட்டி வைத்தார்கள்
உன்னை


நீ ஒரு போராளி:


யாரும் காணாத பொழுதில்
சிறகுகள் வளர்த்தாய்
போதையை மறுத்தாய்
புத்தியில் தெளிந்தாய்
அறிவின் அலகால்
கூண்டினைத் திறந்தாய்
சிறகினை அடித்துப்
பறக்கவும் கற்றாய்


நீ ஒரு மாணவி:


அன்பாய் இரு
அடிமையாய் இராதே
பாசமாய் இரு
பைத்தியமாய் இராதே
பொறுமையாய் இரு
மந்தமாய் இராதே
இரக்கம் காட்டு
ஏமாந்து போகாதே
அன்னம் போல் இரு
நல்லோரைத் தெரிந்து கொள்
பண்போடு பழகு
பாதகரை அறிந்து கொள்
கண்ணீர் தவறில்லை
ஆனால் அதில் மூழ்கி விடாதே
வேகம் அவசியம்தான்
ஆனால் விவேகத்தை மறக்காதே
வானம் தொட முயற்சி செய்
விழுந்தாலும் எழுந்து நில்
வேலிகளைத் தகர்த்தெறி
யாரும் காயப்படாமல் பார்த்துக் கொள்


நீ ஒரு சுதந்திரப் பறவை:


புன்னகை அணிந்து கொள்
சந்தோஷம் பரப்பு
தன்னம்பிக்கை மனதில் கொள்
தளராமல் முன்னேறு
சிறகடித்துப் பறந்திடு
சிகரங்கள் தொட்டிடு!
விடாமல் முயன்றிடு
வெற்றிமாலை சூடிடு!


--கவிநயா

8 comments:

  1. சிறந்த அறிவுரையாக அமைந்துவிட்டது. வாழ்த்துக்கள்!

    அன்புடன்,
    அத்திவெட்டி ஜோதிபாரதி.

    ReplyDelete
  2. மிக்க நன்றி, ஜோதிபாரதி!

    ReplyDelete
  3. ஒவ்வொரு தலைப்பிலும் வரிகள் சுருக்கென்று நன்றாக இருக்கின்றன. சிறு சிறு வரிகள் - to the point!

    ReplyDelete
  4. படிப்படியாக ஒரு மாற்றம். நல்லா இருக்கு.

    ReplyDelete
  5. கூண்டுக்கிளி என்று ஆரம்பித்தது கொஞ்சம் முறண்பட்டு இருக்கோ என்பது என் எண்ணம். இப்பொழுதெல்லாம் நிலைமையே வேறல்லவா ?!!!

    ஆனாலும் அறிவுரைக் கவிதை ! அருமை.

    ReplyDelete
  6. கவிநயா,

    நல்ல முயற்சி.

    பித்தன்.

    ReplyDelete
  7. //ஒவ்வொரு தலைப்பிலும் வரிகள் சுருக்கென்று நன்றாக இருக்கின்றன. சிறு சிறு வரிகள் - to the point!//

    அட! ஒரு வழியா வழி தெரிஞ்சுடுச்சா :) நன்றி, நாகு!

    //படிப்படியாக ஒரு மாற்றம். நல்லா இருக்கு.//

    நன்றி, சேது!

    ReplyDelete
  8. //கூண்டுக்கிளி என்று ஆரம்பித்தது கொஞ்சம் முரண்பட்டு இருக்கோ என்பது என் எண்ணம்.//

    ஆரம்பத்துல அப்படி இருந்துட்டு அப்புறமா சுதந்திரமடைகிறதுதான் கவிதைல சொல்லப்பட்டிருக்கும் கருத்து. நன்றி, சதங்கா!

    //நல்ல முயற்சி.//

    வாங்க பித்தரே! வருகைக்கு நன்றி!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)