சின்னஞ் சிறிய சிறகொன்று…
தன்னந் தனியே…
காற்றின் கரத்தைப் பிடித்தபடி
நேற்றை முழுதாய் மறந்தபடி
செல்லும் திசையோ தெரியாது
போகும் வழியும் புரியாது
ஏறல் இறங்கல் அறியாது
இருந்தும் இயல்பாய் காற்றோடு
இணைந்தே நடக்குது மகிழ்வோடு
நானும் இன்னொரு பூஞ்சிறகு –
உன்றன் கரத்தைப் பிடித்தபடி
உன்றன் பெயரை ஜெபித்தபடி
உன்றன் அன்பில் திளைத்தபடி
நீயே எல்லாம், உணர்ந்தபடி...
--கவிநயா
மொத வெட்டு
ReplyDeleteகவிதை நல்லாருக்கு. உன்றன் என வந்த இடங்களில் உந்தன் என வந்தால் இன்னும் எளீமையாக இருக்கும்.
ReplyDeleteநீயே எல்லாம், உணர்ந்தபடி//
ReplyDeleteஇங்கே கொஞ்சம் வேறுவிதமாய்ப் பொருள் கொண்டேன் முதலில், அப்புறம் மறுபடியும் படிச்சதும், நீயே எல்லாம் என உணர்ந்திருக்கிறீர்கள் என்பது புரிந்தது. என் புரிதல் சரியா? :)))))))
பூஞ்சிறகு.. மிகப் பிடித்திருக்கிறது கவிநயா.
ReplyDelete/சின்னஞ் சிறிய சிறகொன்று…
ReplyDeleteதன்னந் தனியே…
காற்றின் கரத்தைப் பிடித்தபடி
நேற்றை முழுதாய் மறந்தபடி
செல்லும் திசையோ தெரியாது
போகும் வழியும் புரியாது
ஏறல் இறங்கல் அறியாது
இருந்தும் இயல்பாய் காற்றோடு
இணைந்தே நடக்குது மகிழ்வோடு
நானும் இன்னொரு பூஞ்சிறகு –
உன்றன் கரத்தைப் பிடித்தபடி
உன்றன் பெயரை ஜெபித்தபடி
உன்றன் அன்பில் திளைத்தபடி
நீயே எல்லாம், உணர்ந்தபடி...
/
இறகு என்னும் சொல்லுக்குள்
இறைவனின் இருப்பை
இனிமையாக இயல்பாக
எடுத்து உரைத்து வீட்டீர்கள்
'மொத வெட்டு' க்கு நன்றி செந்தில்குமார் :)
ReplyDelete//உன்றன் என வந்த இடங்களில் உந்தன் என வந்தால் இன்னும் எளீமையாக இருக்கும்.//
நீங்க சொல்றது ஒரு விதத்தில் சரியே, ஏன்னா எனக்குமே அப்படித்தான் பழக்கம் (என் பழைய கவிதைகளில் அப்படித்தான் எழுதியிருப்பேன்). பிறகு ஒரு முறை 'உன்றன்' 'என்றன்' என்பதே சரியான தமிழ் அப்படின்னு படிச்சேன், அதிலிருந்து சரியாகவே எழுதலாமேன்னு... :)
வருகைக்கு மிக்க நன்றி.
//அப்புறம் மறுபடியும் படிச்சதும், நீயே எல்லாம் என உணர்ந்திருக்கிறீர்கள் என்பது புரிந்தது. என் புரிதல் சரியா?//
ReplyDeleteசரிதான் அம்மா. அதனாலதான் ',' போட்டேன். "நீயே எல்லாம் (என்று) உணர்ந்தபடி" அப்படின்னு பொருள் வரும்படி.
வருகைக்கு மிக்க நன்றி கீதாம்மா.
//பூஞ்சிறகு.. மிகப் பிடித்திருக்கிறது கவிநயா.//
ReplyDeleteமிக்க நன்றி ராமலக்ஷ்மி :)
//இறகு என்னும் சொல்லுக்குள்
ReplyDeleteஇறைவனின் இருப்பை
இனிமையாக இயல்பாக
எடுத்து உரைத்து வீட்டீர்கள்//
உங்களுடைய சரியான புரிதல் மகிழ்ச்சியைத் தருகிறது, திகழ் :) மிக்க நன்றி.
yr saranaagathi made me feel as if i was floating in the air..i've never felt as light as this...the smaall feather[we] in total surrender to the breeze[HER]!!
ReplyDeleteTHIS FEELING IS REALLY FANTASTIC!!!
ஒரே மாதிரி இல்லாமல்,இது மாதிரி புதுப்புது முயற்சிகள் செய்து பார்ப்பது செய்பவருக்கும் சரி, வாசிப்பவர்க்கும் சரி, புதுமையாகத் தான் இருக்கிறது.
ReplyDeleteஅதோடு வார்த்தைகளின் எளிமை, எடுத்தாண்டிருக்கும் விஷயத்தின் மேன்மையை வெகு இலகுவாக எடுத்தோதுகிறது..
//yr saranaagathi made me feel as if i was floating in the air..i've never felt as light as this...the smaall feather[we] in total surrender to the breeze[HER]!!
ReplyDeleteTHIS FEELING IS REALLY FANTASTIC!!!//
உங்க பின்னூட்டம் படிக்கையில் எனக்கும் அப்படித்தான் இருந்தது லலிதாம்மா :) மிக்க நன்றி.
//ஒரே மாதிரி இல்லாமல்,இது மாதிரி புதுப்புது முயற்சிகள் செய்து பார்ப்பது செய்பவருக்கும் சரி, வாசிப்பவர்க்கும் சரி, புதுமையாகத் தான் இருக்கிறது.
ReplyDeleteஅதோடு வார்த்தைகளின் எளிமை, எடுத்தாண்டிருக்கும் விஷயத்தின் மேன்மையை வெகு இலகுவாக எடுத்தோதுகிறது..//
நீங்கள் வார்த்தைகளைக் கோர்த்திருக்கும் அழகுக்காகவே பல முறை வாசித்தேன் :) மிக்க நன்றி ஜீவி ஐயா.
எளிமையான, அழகான, அர்த்தம் மிக நிறைந்த அருமையான கவிதை!!
ReplyDelete//எளிமையான, அழகான, அர்த்தம் மிக நிறைந்த அருமையான கவிதை!!//
ReplyDeleteவாருங்கள் தமிழன்பன். உங்களுடைய புதுவரவும், புரிதலும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது :) மிக்க நன்றி.
...இருந்தும் இயல்பாய் காற்றோடு...
ReplyDeleteஇயல்பான வார்த்தைகளைகொண்டு
மிக அழகாக எழுதிப்போகும் உங்கள்
திறன் கண்டு அசந்து போனேன்
நல்ல படைப்பை கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்
//நல்ல படைப்பை கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்//
ReplyDeleteவாருங்கள் ரமணி. முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி :)
இயல்பாய்.... :-))
ReplyDelete//இயல்பாய்.... :-))//
ReplyDeleteஉங்க comment எனக்கு கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் இருக்கு, திவாஜி :) வருகைக்கு நன்றி.