ஆறிலும் கத்துக்கலாம்..., அறுபதிலும் கத்துக்கலாம்...! - 2
முதல் பகுதி இங்கே...
நாட்டியக் கலைக்கு அடிப்படையான நூல்கள் இரண்டு உண்டு. அநேகமாக நீங்களும் கேள்விப்பட்டிருப்பீங்க.
1. "நாட்டிய சாஸ்திரம்", பரத முனிவர் எழுதியது
2. "அபிநய தர்ப்பணம்", நந்திகேஸ்வரர் அருளியது
குருகுலத்தில் முறையாக நடனம் கற்றுக் கொள்ளும்போது, நடனம் மட்டும் கத்துக்கறதில்லை. நடனத்துக்கு தேவையான வாய் பாட்டு, நட்டுவாங்கம், நடன அமைப்பு, இப்படி நடனத்துக்கு தேவையான எல்லாமே கத்துக்கலாம். அதோடு கூடவே, புராணக் கதைகள், கலாசாரம், பக்தி, போன்றவையும் அத்தகைய சூழ்நிலையில் இயல்பாக கை வந்துவிடும்.
ஆனால் அந்த மாதிரி சூழ்நிலை அமையாத போது என்ன செய்யறது? எனக்கெல்லாம் நடனம் தவிர மற்றதெல்லாம் தெரியாது. நடனம் மட்டுமே கத்துக்கிட்டேன். நடனம் ஆடறதுக்கும், அமைக்கிறதுக்கும் தாளம் கொஞ்சம் புரிஞ்சிருக்கணும், அவ்வளவுதான். அதை தவிர மற்ற அறிவெல்லாம் குறையுதே என்கிற குறை இப்போவும் இருக்கு. ஆர்வமும் வாய்ப்பும் இருக்கறவங்க மேலும் மேலும் வளர்வதையும் பார்க்கிறோம். அந்த வகையில் சந்தோஷம் தான்.
சரி, தலைப்பை விட்டுட்டு எங்கேயோ போயாச்சு... நான் தியானம் பண்ற அழகும் இப்படித்தான்! :) வாங்க, மறுபடி தலைப்புக்குள்ள போவோம்...
"நாட்டிய சாஸ்திர"த்தின் படி, நடனத்தில் மூன்று வகை இருக்கு. இதை "நடன பேதங்கள்" அப்படின்னும் சொல்லலாம் - நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் - அப்படிங்கிற மூணும்தான் அவை.
நிருத்தம் - அப்படின்னா முழுக்க முழுக்க வெறும் நடனம் தான். அதாவது அதில் கதையோ, செய்தியோ, எதுவும் இருக்காது. நடன அசைவுகளுக்கும் அடவுகளுக்குமே இதில் முக்கியத்துவம் தரப்படும். ('அடவு'ன்னா step அப்படின்னு முன்னமே பார்த்தோம்). நடனங்கள் பற்றி தெரிஞ்சவங்களுக்கு "ஜதிஸ்வர"த்தை உதாரணமா சொன்னா புரியும்னு நினைக்கிறேன்.
நிருத்தியம் - கதை சொல்லும் தன்மையோடு இருக்கிற நடனம்தான் நிருத்தியம். முத்திரைகளின் உதவியோடும், 'பா'வத்தின் உதவியோடும் ஒரு கதையையோ அல்லது செய்தியையோ சொல்லுவதே நிருத்தியம். கூடவே அடவுகளும் இருக்கும். சில கதை செய்திகள் குறிப்பால் உணர்த்தப்படும் (symbolic). இங்கே "சப்தம்" அல்லது "வர்ண"த்தை உதாரணமா சொல்லலாம்னு நினைக்கீறேன்.
நாட்டியம் - இங்கே முழுக்க முழுக்க 'பா'வம், அல்லது அபிநயத்திற்குத்தான் முக்கியத்துவம் தரப்படும். இங்கே ஒரு நிகழ்ச்சி 'நிருத்திய'த்தில் உள்ளது போல குறிப்பால் மட்டுமே உணர்த்தப் படாமல், அப்படியே விளக்கமாகவும் (realistic) செய்து காட்டப்படும். இதற்கு 'பத'த்தை உதாரணமா கொள்ளலாம்.
(இங்கே தந்த உதாரணங்களெல்லாம் என் புரிதலை வைத்து தரப்பட்டவை.)
"நாட்டிய சாஸ்திரத்தின்" படி அபிநயத்திலும் 4 வகை இருக்கு. அதாவது ஒரு செய்தியை எப்படியெல்லாம் சொல்லலாம், convey பண்ணலாம், அப்படிங்கிறதுக்கு.
ஆங்கிகம் - அங்க அசைவுகள், அடவுகள், முத்திரைகள், மூலமா சொல்றது
வாச்சிகம் - நடனத்துக்கு பக்கபலமாய் இருக்கின்ற பாடலையும் இசையையும் குறிக்கும், நாட்டிய நாடகங்களில் பேசறதையும் எடுத்துக்கலாம்
ஆஹார்யம் - ஆடை, ஆபரணங்கள் மூலமா சொல்றது - ராஜான்னா அதற்கு தகுந்த மாதிரி உடை, கிரீடம், கண்ணன்னா தலையலங்காரத்தில் ஒரு மயிலிறகு, இப்படி...
சாத்வீகம் - உணர்வுகளை வெளிப்படுத்தறது - முகத்தில் மட்டும் இல்லை, உடம்போட ஒவ்வொரு அசைவிலும் ஒரு உணர்வை வெளிப்படுத்தலாம், அதனாலதான் 'முக'பாவம் அப்படின்னு மட்டும் சொல்லாம பொதுவா 'பா'வம்னு சொல்றோம்.
விடை பெறும் முன்னாடி சிந்திக்க ஒரு செய்தி:
தினசரி வாழ்க்கையிலேயே நாம எல்லாரும் நடனமணிகள்தான் :) "இங்கே வா" அப்படின்னு தூ...ரத்தில் இருக்கிறவங்களை எப்படி கூப்பிடுவீங்க? கண்ணாடி கதவுக்கு அந்த பக்கம் இருக்கவங்க கிட்ட அவங்க உடை ரொம்ப அழகா இருக்குன்னு சொல்லணும்னு வைங்க, அப்ப நீங்க நிச்சயம் "ஹம்ஸாஸ்யோ" பண்ணியிருப்பீங்க! "கொஞ்சம் போதும்", அப்படின்னு காது கேட்காத உங்க பாட்டிக்கிட்ட எப்படி சொல்லுவீங்க? இப்படித்தான் நாம தினசரி பயன்படுத்தறவையே முத்திரைகளா (stylized) நடனத்தில் பயன்படும் போது பார்க்கிறவங்களுக்கும் புரிஞ்சுக்க சுலபமா இருக்கு. உங்க வீட்ல நீங்க செய்யும் முத்திரைகளை அடுத்த முறை நடன நிகழ்ச்சிக்கு போகும் போது ஒப்பிட்டு பாருங்க!
மீண்டும் பிறகு பார்க்கலாம்...
அன்புடன்
கவிநயா
அருமையான விளக்கங்கள்.
ReplyDeleteகடைசியாக முத்திரைகள் பற்றி சொல்லியிருப்பதையும் ரசித்தேன்:)!
நன்றாக விளக்கியிருக்கிங்க....தமிழ்ப்படத்துல நடனம் மாதிரி நாங்க தினமும் நடனமாடுவோம் ;)))
ReplyDelete//தினசரி வாழ்க்கையிலேயே நாம எல்லாரும் நடனமணிகள்தான் :)//
ReplyDeleteதாங்கீஸ்!
விளக்கமான கட்டுரை.
ReplyDeleteஉங்களை தண்ணீர் தினத்துப் பதிவுக்கு அழைத்துள்ளேன்.
ReplyDeleteஎனது வலையத்துக்கு ஒருமுறை வாருங்கள்.
அக்கா! சூப்பர்!
ReplyDeleteநிருத்தம்/நிருத்தியம் வேறுபாடு எல்லாம் சொல்லிக் கொடுத்தமைக்கு நன்றி!
//தினசரி வாழ்க்கையிலேயே நாம எல்லாரும் நடனமணிகள்தான் :) "இங்கே வா" அப்படின்னு தூ...ரத்தில் இருக்கிறவங்களை எப்படி கூப்பிடுவீங்க?//
சரி, பின்னூட்டத்தில் நாம போடும் ஸ்மைலி எல்லாம் கூட நடனத்தில் தானே வரும்-க்கா? :))
போன பின்னூட்டத்தில் நான் ஸ்மைலி போட்டிருந்தேனே!
ReplyDeleteஎனக்கு நடனம் பண்ண/பாவம் காட்ட எல்லாம் வருமா-க்கா? :))
முருகன் "தண்டையணி வெண்டையும் கிண்கிணி சதங்கையும்-ன்னு பாட...
நான் அவனுக்கு ஆடணும்-ன்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை! :)
தினசரி வாழ்க்கையிலேயே நாம எல்லாரும் நடனமணிகள்தான்
ReplyDeleteஅழகான விளக்கமான பதிவு
நடனத்தை பற்றி நன்றக விளக்கினீர்கள் கவிநயா chitram
ReplyDelete//அருமையான விளக்கங்கள்.
ReplyDeleteகடைசியாக முத்திரைகள் பற்றி சொல்லியிருப்பதையும் ரசித்தேன்:)!//
வாங்க ராமலக்ஷ்மி. ரசனைக்கு மிக நன்றி.
//நன்றாக விளக்கியிருக்கிங்க....தமிழ்ப்படத்துல நடனம் மாதிரி நாங்க தினமும் நடனமாடுவோம் ;)))//
ReplyDeleteதினமுமா! சரி..சரி.. காலமிதை தவற விட்டால் ஆட்டமில்லை கோபி :) அதனால ஆடி மகிழுங்கள்! நன்றி கோபி.
////தினசரி வாழ்க்கையிலேயே நாம எல்லாரும் நடனமணிகள்தான் :)//
ReplyDeleteதாங்கீஸ்!////
வந்தனம் திவாஜி :)
//விளக்கமான கட்டுரை.//
ReplyDeleteநன்றி ஜெஸ்வந்தி.
//உங்களை தண்ணீர் தினத்துப் பதிவுக்கு அழைத்துள்ளேன்.
எனது வலையத்துக்கு ஒருமுறை வாருங்கள்.//
வந்து பார்க்கிறேன் ஜெஸ்வந்தி. ஆனால் கலந்துக்க முடியுமான்னு தெரியல. இப்பவே டிஸ்கி போட்டு வக்கிறேன் :) நேரம்தான் பிரச்சனை. ஞாபகம் வைத்து அழைத்தமைக்கு மிக்க நன்றி.
//சரி, பின்னூட்டத்தில் நாம போடும் ஸ்மைலி எல்லாம் கூட நடனத்தில் தானே வரும்-க்கா? :))//
ReplyDeleteஇல்லை! நீங்க ஸ்மைலி போடும்போது, ஸ்மைல் பண்ணினா, அதை யாரும் பார்த்தா, அப்ப வேணா சேர்த்துக்கலாம் :)
//எனக்கு நடனம் பண்ண/பாவம் காட்ட எல்லாம் வருமா-க்கா? :))//
உங்களுக்கு சூப்பரா வரும்னுதான் தோணுது :)
//முருகன் "தண்டையணி வெண்டையும் கிண்கிணி சதங்கையும்-ன்னு பாட...
நான் அவனுக்கு ஆடணும்-ன்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை! :)//
ஆஹா! உங்க ஆசை நிறைவேற வாழ்த்துகள் கண்ணா! :)
வருகைக்கு நன்றி.
//அழகான விளக்கமான பதிவு//
ReplyDeleteநன்றி பூங்குழலி.
//நடனத்தை பற்றி நன்றக விளக்கினீர்கள் கவிநயா chitram//
ReplyDeleteநன்றி சித்ரா.
தெரிந்தவர்கள் தெளிவாகச் சொன்னால்,
ReplyDeleteகேட்போருக்குத் திகட்டவா செய்யும்?..
எந்த புதிய செய்தியும் தெரிந்து கொள்ள தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகரிக்கத்தான் செய்கிறது. ஒரு பாடதிட்டத்தை வகுத்துக் கொண்ட மாதிரி நீங்கள் அதை வெகுசிரத்தையுடன்
செய்வது தெரிந்து கொள்வதிலான ஒரு பிடிப்பைக் கூட்டுகிறது.
தாங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளுக்கு மிக்க நன்றி,கவிநயா!
//ஒரு பாடதிட்டத்தை வகுத்துக் கொண்ட மாதிரி நீங்கள் அதை வெகுசிரத்தையுடன்
ReplyDeleteசெய்வது தெரிந்து கொள்வதிலான ஒரு பிடிப்பைக் கூட்டுகிறது.//
மிகவும் நன்றி ஜீவி ஐயா. இயன்ற வரையில் செய்கிறேன்...
//தினசரி வாழ்க்கையிலேயே நாம எல்லாரும் நடனமணிகள்தான் :) "இங்கே வா" அப்படின்னு தூ...ரத்தில் இருக்கிறவங்களை எப்படி கூப்பிடுவீங்க?//
ReplyDelete******
தகிட தகிட தகிட தோம்.... தகிடதாம் தகிடதை...
தித்தா தித்தா தித்தை...
//தகிட தகிட தகிட தோம்.... தகிடதாம் தகிடதை...
ReplyDeleteதித்தா தித்தா தித்தை...//
வாங்க கோபி. நல்லா ஜதி போடறீங்களே :)