கொன்றை மலர் சூடும் கொற்றவனே
- எந்தன்
அன்னை மனம் வென்ற உற்றவனே
(கொன்றை)
விந்தை நடம் புரியும் மன்னவனே
– எந்தன்
சிந்தை யெல்லாம் நிறைந்த தென்னவனே
(கொன்றை)
இருவிழி இமையென உமையிருக்க, அந்த
விழிகளிலே அருள் பெருக்கெடுக்க
பிறைமதி முடியினில் துலங்கி நிற்க,
ஒரு
குறையில்லை என்(று) அபயம் தந்திருக்க…
(கொன்றை)
--கவிநயா
--கவிநயா