குட்டக் குட்டக் குனிவதனால்
நான் முட்டாளில்லை...
குனிந்து தரையில் வீழ்வதனால்
நான் கோழையுமில்லை...
மட்டந்தட்டிப் பேசுவோரிடம்
மார்தட்டி வீரம் காட்ட
நான்
மீசை வைத்த ஆண் பிள்ளையுமில்லை...
ஒரு வார்த்தை வீசுதற்கு
ஒரு நொடியும் ஆகாது;
ஆயினும்,
வீசியதைப் பிடிக்கும் வலை
இவ்வுலகில் எங்குமில்லை
என்றுணர்ந்த
சாதாரண பெண்தான் நான்...
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://arouna-selvame.blogspot.com/2013/08/blog-post.html
(அந்தக் காலத்தில், 2005-ல் எழுதியது, இப்பவும் சரியாதானே இருக்கு? :)