அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தித் திருநாள் வாழ்த்துகள்!
ஓம் கணநாதா ஓம் கணநாதா
ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா
ஸ்ரீ கணநாதா கஜானனா
அன்னை பார்வதி அகிலத்துக்
கீந்த அழகுப் புதல்வா கஜானனா
எந்தை சிவனின் அன்புக்
குகந்த அருமைப் புதல்வா கஜானனா
ஓம் கணநாதா ஓம் கணநாதா
ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா
ஸ்ரீ கணநாதா கஜானனா
வேண்டும் வரங்களை வேண்டும்
விதமாய்த் தந்தருள்பவனே கஜானனா
வேண்டி மிக வருந்தி அழைப்பவருக்கு
விரைந்தருள்பவனே கஜானனா
ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா
ஸ்ரீ கணநாதா கஜானனா
பாலும் தேனும் பாகும்
பருப்பும் கலந்து வந்தோமே கஜானனா
பாகாய்க் கனியும் அன்பை
அதிலே கலந்து தந்தோமே கஜானனா
ஓம் கணநாதா ஓம் கணநாதா
ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா
ஸ்ரீ கணநாதா கஜானனா
மோதகத்துள்ளே பூரணம் வைத்துச்
செய்து வந்தோமே கஜானனா
மோகங்கள் களைந்தெமைப்
பூரணமாக்க அருள்புரிவாயே கஜானனா
ஓம் கணநாதா ஓம் கணநாதா
ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா
ஸ்ரீ கணநாதா கஜானனா
அருகம்புல் கூட அற்புதம்
என்று மகிழ்ந்து ஏற்பவனே கஜானனா
குறுகி உனைப் பணிந்து
கும்பிட்டோமே கனிந்தருள்வாயே கஜானனா
ஓம் கணநாதா ஓம் கணநாதா
ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா
ஸ்ரீ கணநாதா கஜானனா
மூஷிகந்தன்னை வாகனமாக
விரும்பி ஏற்றவனே கஜானனா
மூச்சுக் காற்றாலே உடலத்தைச்
சுமக்க உதவி செய்பவனே கஜானனா
ஓம் கணநாதா ஓம் கணநாதா
ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா
ஸ்ரீ கணநாதா கஜானனா
கள்ளங் கபடமற்ற பிள்ளைகள்
விரும்பும் கஜமுகத்தோனே கஜானனா
வெள்ளை உள்ளங்களை விரும்பி
அதிலே குடிபுகுவாயே கஜானனா
ஓம் கணநாதா ஓம் கணநாதா
ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா
ஸ்ரீ கணநாதா கஜானனா
கஜமுகங் கொண்டு கருணை
பொழியும் கனிமுகத்தோனே கஜானனா
பஜனைகள் செய்துனைப் போற்றிப்
பணிந்தோம் பரிவுகொள்வாயே கஜானனா
ஓம் கணநாதா ஓம் கணநாதா
ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா
ஸ்ரீ கணநாதா கஜானனா
--கவிநயா