எப்படி அடக்கினாலும் அடங்காமல்
விட்டேனா பார் என்று
எகிறுகிறது மனசு.
பொறு, பொறு,
இன்னும் கொஞ்சமே கொஞ்சம் பொறு
என்கிறது அறிவு.
அடக்கி மடக்கி முடக்கி வைத்தவை
யெல்லாம்
அடிவயிற்றில் சென்று அமர்ந்து
கொண்டு
அனலாக எரித்துத் தகிக்கிறது.
விழிகளினின்றும்
வழிகின்ற உவர் புனல்,
வெந்நீர் ஊற்றாய் முகிழ்த்து,
பேரருவியாய்க் கொதித்துப் பெருகுகிறது.
நெஞ்சுக் குழிக்குள்ளிருந்து
நெருப்புக் கங்குகளாய்ப் பிரசவிக்கத்
தயாரான வார்த்தைகள்,
நாவின் நுனியில் நின்று கொண்டு
நர்த்தனம் ஆடுகின்றன.
தெறிக்கும் கனலின் வெம்மை விதையில்
ஊறித் திளைத்து முளைக்கத் தொடங்கி
யிருக்கிறது,
நெற்றிக் கண்ணொன்று.
--கவிநயா
படத்துக்கு நன்றி:
http://theholyarunachala.wordpress.com/category/rajarishi-sathguru-sri-rajalinga-swamigal-merges-with-lord-sri-arunachaleshwara-2/
நன்றி: வல்லமை
ம்ம்ம்ம்ம்ம்???? எதுக்கு இப்போ? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteவாங்க கீதாம்மா! கவிதை எப்படி இருந்ததுன்னு சொல்லவே இல்லையே, நீங்க? :)
Deleteநன்றாக இருந்த்தது கவிநயாக்கா.
ReplyDeleteநன்றி ஜீவா :) நலந்தானே?
Deleteவல்லமையில் வெளியானதற்கு நன்றி.
ReplyDeleteகவிதை அருமை கவிநயா...
மிக்க நன்றி சே.குமார் :)
Deleteஉண்ர முடிகிறது வெம்மையை.
ReplyDeleteஎப்படியோ பதில் எழுத விட்டுப் போச்சு. தற்செயலா பார்த்தேன். மன்னிச்சுக்கோங்க ராமலக்ஷ்மி. மிக்க நன்றி.
Deletehttp://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_22.html
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.
எனக்குப் பிடித்த கவிதை உங்கள் கவனத்தையும் கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி, ஆசியா :) நன்றிகள் பல.
Deleteவணக்கம் தோழி!...
ReplyDeleteபுத்தியும் மனதும் புரிந்திட்ட யுத்தத்தில்
சக்தி கொண்டு திறந்ததோ
நெற்றியிலும் ஓர் கண்தான் ...
உங்கள் வலைப்பூவினை இன்றைய வலைச்சரம் மூலம் அறிந்து வந்தேன்.
அருமையாக இருக்கின்றதே நெற்றிக்கண்!
ரசித்தேன். வாழ்த்துக்கள்!
//புத்தியும் மனதும் புரிந்திட்ட யுத்தத்தில்
Deleteசக்தி கொண்டு திறந்ததோ
நெற்றியிலும் ஓர் கண்தான் ...//
அருமையாகச் சொன்னீர்கள், இளமதி. முதல் வருகைக்கும் மிகவும் நன்றி! :)
உங்கள் தளத்திற்கு அவ்வப்போது வருவதுண்டு, பின்னூட்டவில்லை இது வரை... ஒவ்வொரு பதிவின் போதும் கூடவே ஏதாவதொரு தளத்தை அறிமுகப்படுத்தி வருகிறீர்கள். அருமை. மிகவும் நன்றி இளமதி!