அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
தீபாவளியும் வந்தது;
திக்கெட்டும் ஒளி தந்தது!
பரவசம் நெஞ்சில் வந்தது;
பலப்பல இன்பம் தந்தது!
காலையில் எல்லோரும் கேட்கும்
கேள்வி,
‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’
களிப்புடன் அனைவரும் சொல்லும்
பதில்தான்
‘கங்கா ஸ்நானம் ஆச்சே!’
‘பளபள’ வென்று புத்தாடை அணிவோம்!
‘படபட’ வென்று பட்டாசு வெடிப்போம்!
பலப்பல ருசியுடன் பலகாரம் தின்போம்!
பக்கத்தில் எல்லோர்க்கும் பகிர்ந்தே
உண்போம்!
தீமைக் குணங்கள் யாவும் அழிப்போம்!
நற்குணங்களையே போற்றி வளர்ப்போம்!
இருளை அழிப்போம்; துன்பம் ஒழிப்போம்!
அன்பெனும் ஒளியை அனைவர்க்கும்
அளிப்போம்!
--கவிநயா
நன்றி: வல்லமை
அக்கா மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபவாளி நல்வாழ்த்துக்கள் ;))
ReplyDeleteஇருளை அழிப்போம்; துன்பம் ஒழிப்போம்!
Deleteஅன்பெனும் ஒளியை அனைவர்க்கும் அளிப்போம்!
இனிய தீபவாளி நல்வாழ்த்துக்கள்!
அருமை... நன்றி...
ReplyDeleteதங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள், கவிநயா!
ReplyDeleteMiga arumai.Engal Vaalthukkal.
ReplyDeleteNatarajan.
தங்களுக்கும் தங்கள் இல்ல உறவுகளுக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
ReplyDelete
ReplyDeleteதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள், கவிநயா!
அன்பான வாழ்த்துகள் தெரிவித்த கோபி, லலிதாம்மா, தனபாலன், ஜீவி ஐயா, திரு.நடராஜன், சே.குமார், மற்றும் ராமலக்ஷ்மி, அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
ReplyDelete