Sunday, May 15, 2011

நலந்தானே?

சித்திரை வெயில் வீணாகாம ஊர் சுத்திட்டு வந்தாச்!

வைத்தீஸ்வரன் கோயில் பாத யாத்திரைக்குதான் போனேன். ஆனாலும் வீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் தொடங்கி, மயிலை கற்பகாம்பாள், வைத்தீஸ்வரன் கோயில், சிதம்பரம் நடராஜர், தில்லை காளி, கடலூர் பாடலீஸ்வரர், மயிலாப்பூர் சாயிபாபா, ஸ்ரீராமகிருஷ்ணா மடம், துர்கா கோயில், பிரத்தியங்கிரா கோயில், காஞ்சி காமாக்ஷி, காஞ்சி வரதராஜர், எங்க ஊர் மீனாக்ஷி, குலதெய்வம் கோயில், மதுரை மீனாக்ஷி, திருப்பரங்குன்றம், இப்படி எல்லாக் கோயிலும் சுத்திட்டு, மறுபடி வீட்டு பக்கத்தில் இருக்க பிள்ளையாருக்கு போய் ‘டாடா’ சொல்லிட்டு வந்துட்டேன்!

போகணும்னு நினைச்சு போகாமல் இருக்கிற கோயில்கள் இன்னும் எவ்வளவோ இருக்கு… பார்க்கலாம்… ஒரு வருத்தமான விஷயம் என்னன்னா, சில கோயில்களில் காசை கண்ல படறாப்ல வச்சிருந்தாதான் விபூதி குங்குமமே தர்றாங்க :(

வந்தவுடனே எங்க நடனப்பள்ளி ஆண்டு விழா வேலைகளில் முழுகிட்டதால, விலாவரியா ஒண்ணும் எழுத முடியல. சீக்கிரம் வரேன்…

முக்கியமான விஷயத்தை மறந்துட்டேனே! மதுரையில் இந்த வாட்டி ஒரு வழியா ஜிகிர்தண்டாவை ருசி பாத்தாச்!

அன்புடன்
கவிநயா

16 comments:

  1. நலம். நலமறிந்து மகிழ்ச்சி! நீண்ட நாள் கழித்து வந்திருக்கும் பதிவு எங்களுக்கு ஜிகிர்தண்டா:)!

    ReplyDelete
  2. வாருங்கள்! வந்து தொடராக நல்ல பதிவுகளைத் தாருங்கள்!..

    ReplyDelete
  3. இத்தனைக் கோயிலுக்குப் போன பலன் தான் உங்களுக்கு ஜிகிர்தண்டா கிடைச்சிருக்கு :) Welcome Back-kka!

    ReplyDelete
  4. விரைவில் பயணத்தை பற்றி எழுதுங்கள் ;)

    ReplyDelete
  5. நலம்

    நலம் அறிய ஆவல்

    :)))))))))))

    ReplyDelete
  6. "nee ingu nalam ;naan angu nalamaa?"
    pl visit "arutkavi"where u can have a real treat![i had a beautiful experience]

    ReplyDelete
  7. //நீண்ட நாள் கழித்து வந்திருக்கும் பதிவு எங்களுக்கு ஜிகிர்தண்டா:)!//

    :) நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  8. //வாருங்கள்! வந்து தொடராக நல்ல பதிவுகளைத் தாருங்கள்!..//

    நல்வரவு ஜீவி ஐயா. உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி :)

    ReplyDelete
  9. //இத்தனைக் கோயிலுக்குப் போன பலன் தான் உங்களுக்கு ஜிகிர்தண்டா கிடைச்சிருக்கு :)//

    ஹாஹா :) உங்களுக்குன்னு தோணுமே :)

    //Welcome Back-kka!//

    நன்றி கண்ணா.

    ReplyDelete
  10. //விரைவில் பயணத்தை பற்றி எழுதுங்கள் ;)//

    எனக்கும் ஆசைதான். எழுத ஆரம்பிச்சா ரொம்ப வளர்ந்துடுமோன்னு கொஞ்சம் தயக்கம் :)

    ஆர்வத்துக்கு நன்றி கோபி.

    ReplyDelete
  11. //:)))))))))))//

    மகிழ்ச்சி, மகிழ்ச்சியைத் தருகிறது :)
    நன்றி திகழ்.

    ReplyDelete
  12. //"nee ingu nalam ;naan angu nalamaa?"//

    நீங்களும் இங்கு நலம்தானம்மா :)

    //pl visit "arutkavi"where u can have a real treat![i had a beautiful experience]//

    'இன்னுலகம் காக்கும் அன்னை' வாசித்து/கேட்டு மகிழ்ந்தேன் அம்மா. பின்னூட்டவில்லை.

    ReplyDelete
  13. //:-))//

    வாங்க திவாஜி :)

    ReplyDelete
  14. அக்கா, தங்கள் வரவு நல்வரவாகுக! ஜிகர்தண்டா மாதிரியான உங்களுடைய ஜில்ஜில் பதிவுகளுக்கு நாங்க எல்லாரும் வெயிடிங்கு!..:)

    தக்குடு

    ReplyDelete
  15. நெசந்தானா தக்குடு? சந்தோஷம்ப்பா :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)