உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Monday, April 8, 2013
ரகசியமாய்...
மூடி மூடி வைத்தாலும்,
மல்லிகைப் பூவின் இருப்பை
அதன் வாசனை காட்டிக் கொடுத்து விடுவதைப் போல…
பனிக் கட்டியின் இருப்பை
பாத்திரம் காட்டிக் கொடுத்து விடுவதைப் போல…
கதிரவனின் இருப்பை
அவன் கதிரொளி காட்டிக் கொடுத்து விடுவதைப் போல…
என் மனதில் உன் இருப்பை...
திடீர் பகற் கனவுகளும்,
ரகசியப் புன்னகைகளும்,
கன்னத்தின் கனிச் சிவப்பும்,
காட்டிக் கொடுத்து விடுகின்றன!
--கவிநயா
நன்றி: வல்லமை
படத்திற்கு நன்றி: http://www.panithulishankar.com/2010/07/blog-post_19.html
Subscribe to:
Post Comments (Atom)
ஆகா... ரசிக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன் :)
Deleteஅன்பை அடைத்து வைக்க முடியாதுதான்:). அழகான கவிதை, கவிநயா.
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி :)
Deleteஅழகான உணர்வுகளுடன் கூடிய கவிதை.
ReplyDeleteசிறப்பாகச் சிந்தித்து எழுதியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.பகிர்வுக்கு நன்றிகள்.
நன்றி ஐயா :)
Deleteமனதில் பொத்தி வைத்த நினைப்பைச் சொல்லும் கவிதையும் அழகு.வெட்க முகம் காட்டும் கன்னியின் படமும் அழகு
ReplyDeleteநன்றி பார்வதி :)
Deleteரசிக்க வைக்கும் கவிதை...
ReplyDeleteநன்றி குமார் :)
Deleteஅருமையான கவிதை.
ReplyDeleteகாட்டி கொடுத்தல் காதலின் மிகை அருமையாக கவிபாடிய கவிநயாவிற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவாங்க சரளா. முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி! :)
Delete