Sunday, February 10, 2013

மூன்று வாசல்கள்




பேசுவது என்பது பற்றி நாம் அதிகம் சிந்திப்பதில்லை. சர்வ சாதாராணமாக எதையாவது பேசிக் கொண்டேதான் இருக்கிறோம். சுஃபி மதம் சொல்வதாக சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன் – நாம் பேச நினைப்பது வார்த்தைகளில் வெளிப்படும் முன் மூன்று வாசல்களைக் கடக்க வேண்டுமாம்.

முதல் வாசல் – உண்மை. “நாம் சொல்லவிருப்பது உண்மையா?” என்று நம்மையே கேட்டுக் கொள்ள வேண்டும். ஆம் என்றால், அடுத்த வாசலுக்குப் போகலாம்.

இரண்டாம் வாசல் – அவசியம். “நாம் இதனை அவசியம் சொல்லித்தான் ஆக வேண்டுமா?” என்று கேட்டுக் கொள்ள வேண்டும். அந்தச் செய்தியால் யாருக்கேனும் ஏதேனும் பலன் இருக்கும் என்றால் மட்டுமே அடுத்த வாசலுக்குப் போகலாம்.

மூன்றாம் வாசல் – அன்பு. “நாம் சொல்லவிருக்கும் சொற்களில் அன்பு இருக்கிறதா?” என்று கேட்டுக் கொள்ள வேண்டும். நாம் சொல்வது எவரையேனும் எந்த விதத்திலேனும் எதிர்மறையாகப் பாதிக்கும், புண்படுத்தும் என்றால் இந்த வாசலைக் கடக்கக் கூடாது, நம் வாயிலிருந்து அந்தச் சொற்கள் வெளியெறக் கூடாது.

எவ்வளவு எளிமையாகவும், அழகாகவும் பேச்சைப் பற்றிச் சொல்லப் பட்டிருக்கிறது!

பேச்சில் அப்படி என்னதான் இருக்கிறது என்று நாம் முன்பு ஒரு முறை பேசியது இங்கே...

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: http://linked2leadership.com/2010/11/23/think-before-you-speak/

4 comments:

  1. அனுபவங்கள் மேலும் கற்றுக் கொடுக்கும்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தனபாலன். உண்மைதான்... நன்றி :)

      Delete
  2. சூப்பர்...... எவ்வளவு அற்புதமான கருத்துக்கள். இது பேசுவதற்கு மட்டுமல்லாமல் எழுதுவதற்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அதுவும் சரியே, பார்வதி :) வருகைக்கு நன்றி.

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)