Thursday, September 24, 2009

பால்வெள்ளை கமலத்தில்...

நவராத்திரி சிறப்பு பதிவு.




பால்வெள்ளை கமலத்தில் பனிமலர் கொடிபோலே
தேன்மொழியாள்அவள் வீற்றிருப்பாள்
வீணையிரு கரமேந்தி வேல்கள்இரு விழியேந்தி
கோலஎழில்வடிவுடையாள் கொலுவிருப்பாள்

வேதவடி வானவளாம் வேதனைகள் களைபவளாம்
நாதவடி வானவளாம் ஞானஒளி தருபவளாம்
நான்முகனின் நாயகியாய் நாவினிலே உறைபவளாம்
கோதகன்ற உள்ளமதை கோவிலென கொள்பவளாம்

நாடிவரும் நல்லவர்க்கு நலம்சேர்த் தருள்புரிவாள்
தேடிவரும் வினைகளைந்து கோடிசுகம் நல்கிடுவாள்
பாடிவரும் பக்தர்தம்மை பரிவுடன் பேணிடுவாள்
ஓடிவரும் தென்றலைப்போல் தேவிஅன்பு செய்திடுவாள்!


--கவிநயா

சுப்பு தாத்தா குரலில்... நன்றி தாத்தா!

22 comments:

  1. //நவராத்திரி சிறப்பு பதிவு.//

    சிறந்த பதிவு.

    ஓடிவரும் தென்றலைப் போன்றதொரு பாடல். நன்றி கவிநயா!

    ReplyDelete
  2. காலை பொழுதில் இப்படியொரு தெய்வீக பாடலை படிப்பதே மிகவும் சுகமானது..!

    அதுவும் என் அன்னை சரஸ்வதியின் பாடல்..கேட்கவா வேண்டும் யான் பெற்ற இன்பத்தை..

    மிக்க நன்றி கவிநயா இப்படியொரு பாடலை காலை வேளையில் தந்ததற்கு..!!

    ReplyDelete
  3. அன்பு கவிநயா, தமிழ் பிடிக்கும் என்று சொன்ன வாக்குத் தவறாமல் வாக்தேவியின் புகழ் பாடியது வெகு அழகு. உங்கள் கவிநயம் மேன் மேலும் வளர கலைமகள் ஆசிகள் உங்களுக்கு எப்போதும் இருக்க வெணும்.

    ReplyDelete
  4. //கோதகன்ற உள்ளமதை கோவிலென கொள்பவளாம்//

    சூப்பர்-க்கா! :)

    //வீணையிரு கரமேந்தி வேல்கள்இரு விழியேந்தி//

    ஐ லைக் இட்! :)
    விழிகள்-ல ரெண்டு வேலை ஏந்துகிறாளோ?
    அறிவேல்! அளிவேல்!
    அறிவு என்னும் கூர் வேல்! அதை நமக்கு அளிக்கும் அளி வேல்! அன்னை கலைமகள்!

    ReplyDelete
  5. நான்முகனின் நாயகியே !
    நயமுடன் நயாவின்
    நாவினிலே வந்தரமர்ந்தவளே !!

    நாலுதிக்கும் உனைப்பாட,
    நான்மறையும் உனைத்துதிக்க‌
    வேத வடிவானவளே ! நின்
    பாதமலர் தினம் பணிவோம்
    Please Listen to the song at our
    http://ceebrospark.blogspot.com

    subbu rathinam.

    ReplyDelete
  6. //ஓடிவரும் தென்றலைப் போன்றதொரு பாடல். நன்றி கவிநயா!//

    மிக்க நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  7. //அதுவும் என் அன்னை சரஸ்வதியின் பாடல்..கேட்கவா வேண்டும் யான் பெற்ற இன்பத்தை..//

    மிக்க மகிழ்ச்சியும் நன்றியும், ரங்கன்!

    ReplyDelete
  8. //உங்கள் கவிநயம் மேன் மேலும் வளர கலைமகள் ஆசிகள் உங்களுக்கு எப்போதும் இருக்க வெணும்.//

    எனக்கு பிடித்தமான ஆசிகளை வழங்கியதற்கு மனமார்ந்த நன்றிகள் வல்லிம்மா!

    ReplyDelete
  9. //அறிவு என்னும் கூர் வேல்! அதை நமக்கு அளிக்கும் அளி வேல்! அன்னை கலைமகள்!//

    ஆஹா, கண்ணனின் சொல்லாடலுக்கு கேட்கணுமா :)

    ரசித்தமைக்கு மிக்க நன்றி கண்ணா.

    ReplyDelete
  10. //நயமுடன் நயாவின்
    நாவினிலே வந்தரமர்ந்தவளே !!//

    இது நல்லாருக்கே! அவளை அப்படியே இருக்க சொல்லுங்க தாத்தா :)

    பாடல் மிக இனிமையாக இருந்தது. படமும் :) இடுகையில் இணைச்சிருக்கேன். மிக்க நன்றி தாத்தா.

    ReplyDelete
  11. நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. //நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள்...//

    அனைவர் சார்பாகவும் மிக்க நன்றி கோபி. நீங்களும் என் மனமார்ந்த வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  13. அருமைக்கா.

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. //அருமைக்கா.

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.//

    நன்றி மௌலி. உங்களுக்கும் என்னுடைய இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. உங்களுக்கும் என்னுடைய இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. //உங்களுக்கும் என்னுடைய இனிய வாழ்த்துகள்.//

    வாங்க ஜெஸ்வந்தி. மிக்க நன்றி.

    ReplyDelete
  17. இங்கே எங்கள் ஊரில் குளிரத் தொடங்கிவிட்டது. இன்னும் கொஞ்சம் நாளில் பனிக்கொடியைக் காணலாம். பால் வெள்ளைக் கமலத்தில் பனிமலர்க்கொடி இருந்தால் பார்ப்பதற்குப் பரவசமாகத் தான் இருக்கும். அந்தக் காட்சி சன்னல் வழியாகக் கண்ணில் படும் போது குளிருக்கு இதமாக வீட்டினுள்ளே அமர்ந்து கொண்டு அவள் தேன் குரலையும் அவள் இரு கரமேந்திய வீணையிசையையும் கேட்டுக் கொண்டும் அவளுடைய கோல எழில் வடிவைக் கண்டு கொண்டும் இருந்தால் மிகவும் நன்றாகத் தான் இருக்கும்.

    கோதகன்ற உள்ளமதைக் கோவிலாகக் கொள்பவளா? அப்படியென்றால் குற்றம் நிறைந்த என் நெஞ்சில் அவள் குடியிருக்க மாட்டாளா? :-(

    நல்ல வேளை பாடி வரும் பக்தர்களைப் பரிவுடன் பேணுவாள் இவள். இல்லையேல் என் கதி என்னாவது?

    ReplyDelete
  18. //இங்கே எங்கள் ஊரில் குளிரத் தொடங்கிவிட்டது. இன்னும் கொஞ்சம் நாளில் பனிக்கொடியைக் காணலாம். பால் வெள்ளைக் கமலத்தில் பனிமலர்க்கொடி இருந்தால் பார்ப்பதற்குப் பரவசமாகத் தான் இருக்கும். அந்தக் காட்சி சன்னல் வழியாகக் கண்ணில் படும் போது குளிருக்கு இதமாக வீட்டினுள்ளே அமர்ந்து கொண்டு அவள் தேன் குரலையும் அவள் இரு கரமேந்திய வீணையிசையையும் கேட்டுக் கொண்டும் அவளுடைய கோல எழில் வடிவைக் கண்டு கொண்டும் இருந்தால் மிகவும் நன்றாகத் தான் இருக்கும்.//

    ஆஹா, சூப்பர். நினைச்சாலே ஆனந்தமா இருக்கு குமரா :)

    //கோதகன்ற உள்ளமதைக் கோவிலாகக் கொள்பவளா? அப்படியென்றால் குற்றம் நிறைந்த என் நெஞ்சில் அவள் குடியிருக்க மாட்டாளா? :-(//

    அப்படி இல்லை. அவளை நினைக்கணும்னு நினைச்சாலே போதும், எல்லா குற்றங்களும் அகன்று விடும் :) அவள் குடியிருக்கும் இடத்தில் குற்றத்திற்கு இடமேது? இதை நான் சொல்லலை, ஸ்ரீராமகிருஷ்ணர் தான் சொல்றார். அதனால நீங்க தாராளமா நம்பலாம் :) அன்னையை நினைத்த பின் "I am a sinner" என்ற நினைப்பிற்கே இடமில்லையாம். குருதேவர் கிறிஸ்துவர்களின் இந்த பழக்கத்தைத்தான் மிகவும் சாடுவார். நினைப்போடு நம்பிக்கையும் வேணும் என்பார்.

    //நல்ல வேளை பாடி வரும் பக்தர்களைப் பரிவுடன் பேணுவாள் இவள். இல்லையேல் என் கதி என்னாவது?//

    உங்களோடதான் நானும் :) கவலை வேண்டாம் தம்பீ!!

    வருகைக்கு மிக்க நன்றி.

    (ஏதோ சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னதுக்கு இவ்ளோ பெரீய்ய்ய விரிவுரையான்னு என்னை நீங்க சாடாம இருக்கணும் :)

    ReplyDelete
  19. //(ஏதோ சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னதுக்கு இவ்ளோ பெரீய்ய்ய விரிவுரையான்னு என்னை நீங்க சாடாம இருக்கணும் :) //

    பாத்தீங்களா. இப்படியெல்லாம் நீங்க நினைப்பீங்கன்னு தான் பேசாம படிச்சுட்டுப் போயிருவேன். இன்னைக்கு நினைச்சதை சொல்லிட்டேன். அதுக்கு சரியான பதிலெல்லாம் சொல்லிட்டு அடைப்புக்குள்ள இப்படி வேற சொல்றீங்களே.

    ReplyDelete
  20. அச்சச்சோ! கோச்சுக்காதீங்க தம்பீ. இனிமே நோ அடைப்புக்குறி. ஒன்லி பதில்! :)

    ReplyDelete
  21. கவிதை நல்லாஇருக்கு

    ReplyDelete
  22. //சக்தி த வேல்..! said...
    கவிதை நல்லாஇருக்கு//

    முதல் முதலில் வரும்போதே சரஸ்வதி தேவியின் பாடலைக் கேட்டு வந்திருக்கீங்க. உங்கள் வரவு நல்வரவாகுக! ரசனைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)