Sunday, May 31, 2009

புது வகை பட்டாம்பூச்சி !
பட்டாம்பூச்சியில் பல வகை இருக்கே, தெரியுமா, உங்களுக்கு? அச்சோ, அறிவியல் பாடமொண்ணும் இல்லீங்க! சொல்றேன் கேளுங்க...

நம்ம தோட்டத்துல பறந்து திரியற வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் பத்தி உங்களுக்கே தெரியுமே! அது ஒரு வகை. அப்புறம்.... நீங்க காதலில் விழுந்தவரா? ம்... அப்படின்னா உங்க மறுபாதியை பார்க்கிறப்பல்லாம்... இல்லை, இல்லை, நினைக்கிறப்ப கூட, வயத்துக்குள்ள படபடக்குமாமே, (எல்லாம் கேள்வி ஞானந்தாங்க :) அது ஒரு வகை. அப்புறம்... அழகான பெண்கள் அவங்க உள்ளம் கவர்ந்தவரை பார்க்கும் போது இமைகள்ல படபடக்குமே, அது ஒரு வகை... ம்... அப்புறம்... இன்னொண்ணு கூட இருக்குங்க - பசி காதை அடைக்கும் போது நம்ம கண்ல பறக்குமே, அதுவும் கூடத் தாங்க!

ஆனா இதையெல்லாம் தாண்டி ஒவ்வொரு வலைப் பூவா பறக்கிற இந்த பட்டாம்பூச்சி முற்றிலும் புது வகை!

பட்டாம்பூச்சின்னு சொன்னதும் பட்டுப் புடவை நினைவு வராம இருக்காது (எனக்கு!). அதே போல பட்டுப் புடவை கட்டும் போதெல்லாம் பட்டாம்பூச்சியும் நினைவு வந்து வயத்துல சங்கடம் பண்ணும் :( பட்டு புடவை வாங்கியே ரொம்ப வருஷம் ஆச்சுது இப்போ. ஆனா இப்ப 'அஹிம்சை' பட்டுன்னு வருதாமே, பூச்சிகளை துன்புறுத்தாம செய்யற பட்டாம். அதை கேள்விப்பட்ட போது கொஞ்சம் ஆறுதல்!

நம்ம (வலை)பூவுக்கெல்லாம் பட்டாம்பூச்சி வரவே வராது, அப்படிங்கிற அசைக்க முடியாத நம்பிக்கையோட இருந்தப்ப, அந்த நம்பிக்கையை அசைச்சுட்டாங்க ரெண்டு பேர்! ஒருத்தர் யூத் விகடன் புகழ் ராமலக்ஷ்மி. முத்துச்சரமா பதிவுகளை தந்து பெரும் வாசகர் வட்டத்தை சம்பாதிச்சு வச்சிருக்கிற இவங்களுக்கு அறிமுகம் தேவையில்லை :) அவங்க பட்டாம்பூச்சி விருதை பலருக்கும் பகிர்ந்து கொடுத்ததில், நானும் அடக்கம்.

இன்னொருத்தர், 'வண்ணப் பட கைலாஷி' அப்படின்னு நம்ம அ.உ.ஆ.சூ. அவர்களால அன்பா அழைக்கப்பட்டவர்தான். பல கோவில்களிலிருந்தும் படங்களை மிக சிரத்தையா சேகரிச்சு, தொகுத்து, தன் வலைப்பூக்கள்ல ஆன்மீக அன்பர்களின் மனம் குளிர வழங்கிட்டு வரார். அவர்தான் எனக்கும் இந்த பட்டாம்பூச்சி விருதை குடுத்திருக்கார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

இந்த விருது அநேகமா எல்லாரும் வாங்கிட்டாங்க, நான் நினைச்சிருக்க மூணு பேரும் இன்னும் வாங்கலைன்னு நினைக்கிறேன். பட்டாம்பூச்சி விருது பெறும் அதிர்ஷ்டசாலிகள் யாரெனில்...

அன்புத்தம்பி கோபி என்ற கோபிநாத். இவர் இப்பல்லாம் ரொம்ப எழுதலைன்னாலும், எழுதறப்ப கலக்கலா எழுதுவார். தொடர்ந்து இங்கே வந்து பொறுமையா (நான் எழுதறதைக் கூட) படிச்சு தவறாம பின்னூட்டம் இடறவங்கள்ல இவரும் ஒருத்தர்! அதுக்காகவே இவருக்கு விருது கொடுக்கலாம்! 'மழை' தொடர்ல, அக்கா குழந்தையின் மழலை பற்றி கவிதை போல எழுதியிருப்பார். ஆனா தொடர்தான் தொடராம நிக்குது. சீக்கிரம் எழுதுங்க கோபி!

அடுத்ததா... ஜெஸ்வந்தி. புத்தம் புது பதிவர். இவங்களோட "என்ன தவம் செய்தேன்" என்கிற கதையில் அழகான (மனசுள்ள) கதாநாயகனை அறிமுகப்படுத்தியிருக்காங்க. இயல்பான நடையில் அமைந்த இந்தக் கதை உண்மைக் கதைன்னு சொல்றாங்க! இவங்க பெயரும் எனக்கு பிடிச்சது :) தொடர்ந்து நிறைய படைப்புகளை தாங்க ஜெஸ்வந்தி!

last but not least... எங்க ஊர்க்காரர், சமீபத்தில் தமிழ்மண நட்சத்திரமா ஜொலித்த நாகு. இவரும் அருமையாய் எழுதுவார் என்பதோடு, பல எழுத்தாளர்களை ஊக்குவித்து வித்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் :) நான் நிறைய எழுத ஆரம்பிச்சதுக்கு இவரும் ஒரு காரணம். (ஐயோ பாவம், அவரை அடிக்கப் போகாதீங்க ப்ளீஸ் :) ஆரம்ப காலங்களில் ரொம்ப ஊக்குவித்தவர், இப்பல்லாம் ஒண்ணுமே விக்கிறதில்ல :( இருந்தாலும் என்றைக்கும் அவருக்கு மனமார்ந்த நன்றிகளுடன்...

மூவருக்கும் வாழ்த்துகள்!நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்

***

நீங்களும் உங்களுக்கு பிடிச்ச பதிவர்களின் பூக்கள்ல பட்டாம்பூச்சியை பறக்க விடுமாறு கேட்டுக்கறேன்!

முதல் படத்துக்கு நன்றி: http://en.wikipedia.org/wiki/File:Cairns_birdwing_-_melbourne_zoo.jpg

36 comments:

 1. வாழ்த்துக்கள் கவிநயாக்கா!

  ReplyDelete
 2. //பட்டு புடவை வாங்கியே ரொம்ப வருஷம் ஆச்சுது இப்போ. ஆனா இப்ப 'அஹிம்சை' பட்டுன்னு வருதாமே, பூச்சிகளை துன்புறுத்தாம செய்யற பட்டாம். அதை கேள்விப்பட்ட போது கொஞ்சம் ஆறுதல்!//

  அஹிம்சா பட்டிலே நான் பாவாடை கட்டி இருக்கேனே! ஹிஹிஹிஹிஹிஹிஹி :P

  ReplyDelete
 3. அப்போ வந்துட்டுப் பட்டுப்பாவாடைப் பெருமையைச் சொல்லிட்டுப் போயிட்டேன் போல!

  பட்டாம்பூச்சி விருதுக்கு வாழ்த்துகள். எப்போவோ வந்திருக்கணும், தாமதமானாலும் தகுதியானவருக்குக் கிடைத்ததுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. பெற்றவர்களுக்கும்

  பகிர்ந்தவர்களுக்கும்


  வாழ்த்துகள்

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் கவிக்கோ கவிக்கா. :)

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் பட்டாம்பூச்சி அக்கா! :)
  பின்னே! அமெரிக்கா டு இந்தியா பறந்த பட்டாம்பூச்சி அல்லவா? :)

  விருதைப் பெற்ற கோபி மற்றும் இருவருக்கும் வாழ்த்துக்கள்! :)

  ReplyDelete
 7. என்ன கவிநயா எனக்கு இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்திட்டீங்க? நான் இந்த வலையத்திற்கு வந்து இரண்டு வாரத்திற்குள் ஒரு பட்டாம்பூச்சி விருது தருவீங்க என்று எப்படி எதிர் பார்த்திருப்பேன்? நீங்க ஒரு வாரத்திற்கு முன்பு தந்த விருதை இப்போ தான் நான் கண்டேன். மீதி என்ன ,எப்படி பண்ணுவது என்பதை என் நண்பர்களிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த விடயங்களில் நான் ஒரு கன்றுக் குட்டி. கொஞ்சம் அவகாசம் தாருங்கள்.
  என் மனமார்ந்த நன்றிகள்!!

  ReplyDelete
 8. வாங்கிய உங்களுக்கும் விருது பெற்ற மற்றவருக்கும் என் வாழ்த்துக்கள்!

  //நம்ம (வலை)பூவுக்கெல்லாம் பட்டாம்பூச்சி வரவே வராது, அப்படிங்கிற அசைக்க முடியாத நம்பிக்கையோட இருந்தப்ப, அந்த நம்பிக்கையை அசைச்சுட்டார் ஒருத்தர்!//

  அட என்னங்க நீங்க, நான் வாங்கிய பட்டாம் பூச்சி விருதினை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கையில் உங்களை ஸ்பெஷலாக் குறிப்பிட்டுத் தந்திருந்தேனே:(, மறந்துவிட்டீர்களா:)?

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் கவிநயா!

  பட்டாம்பூச்சி விருதுக்கு நன்றி. நீங்கள் ஊக்குவிக்கும் நிலையைத் தாண்டியவர். அதனால் எங்கே ஊக்கு வியாபாரம் ஆகுமோ அங்கே வித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் தளத்தைப் படிக்காமல் இல்லை.:-)

  அஹிம்சை பட்டு! அவசியம் என்ன என்று பார்க்கவேண்டும். நேற்று PBSல் பசுக்களைப் பற்றி ஒரு காட்சி பார்த்துக்கொண்டிருந்தோம். அதில் 'humane way of killing cows' பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். என் மகனின் கேள்வி: How exactly can you kill humanely? You are still killing.

  அஹிம்சை பட்டும் அந்த ரகமோ?

  ReplyDelete
 10. கவிநயா,

  அழகான பட்டாம்பூச்சி படத்துக்கு ஏத்தா மாதிரி அழகான பதிவு. விருது வாங்கிய நாகுவிற்கும் மற்ற இருவருக்கும் என் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 11. முதலில் உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள் ;)

  ஆகா!!! விருதுக்கு மிக்க நன்றி அக்கா ;)))

  ஜெஸ்வந்தி, நாகு இருவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

  ReplyDelete
 12. பட்டாம்பூச்சி பற்றி ரசிக்கும் படியான தகவல்களுடன் பதிவு கலக்குது...இதுக்கு பதில் பதிவு எப்படி போட போறேன்னு நினைக்கும் போது தான் என்னோட வயிறும் சேர்ந்து கலக்குது ;)))

  விரைவில் பதிவிடுவேன் என்ற நம்பிக்கையில் மீண்டும் ஒரு டாங்கிஸ்க்கோவ் ;)

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி ;)

  ReplyDelete
 14. //வாழ்த்துகள்//

  வாங்க திகழ்மிளிர். நன்றி :)

  ReplyDelete
 15. //வாழ்த்துக்கள் கவிநயாக்கா!//

  வாங்க ஜீவா. நன்றி :)

  ReplyDelete
 16. வாங்க கீதாம்மா.

  //அஹிம்சா பட்டிலே நான் பாவாடை கட்டி இருக்கேனே! ஹிஹிஹிஹிஹிஹிஹி :P//

  அடடா, அப்படின்னா நீங்க பாவாடை கட்டற காலத்துல இருந்தே இருக்கா? எனக்குதான் தெரியல போல :(

  //பட்டாம்பூச்சி விருதுக்கு வாழ்த்துகள்.//

  நன்றிம்மா :)

  ReplyDelete
 17. //பெற்றவர்களுக்கும் பகிர்ந்தவர்களுக்கும்
  வாழ்த்துகள்//

  வாங்க ஜமால். நன்றி :)

  ReplyDelete
 18. வாங்க கண்ணா.

  //வாழ்த்துக்கள் பட்டாம்பூச்சி அக்கா! :)//

  மிக்க நன்றி :)

  ReplyDelete
 19. வாங்க ஜெஸ்வந்தி. ஒரு வாரம் முன்னல்லாம் இல்ல, நேத்துதான் தந்தேன் :)மெதுவா பதிவிடுங்க; விதிமுறைகளெல்லாம் இந்த பதிவிலேயே இருக்கு பாருங்க. வாழ்த்துகள்!

  ReplyDelete
 20. வாங்க ராமலக்ஷ்மி. வாழ்த்துகளுக்கு நன்றி.

  //விருதினை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கையில் உங்களை ஸ்பெஷலாக் குறிப்பிட்டுத் தந்திருந்தேனே//

  அச்சோ, தவறா நினைக்காதீங்க, நீங்க நிறைய பேருக்கு பகிர்ந்து கொடுத்தப்ப அது 'விருது' அப்படின்னு register ஆகல! அதான் அப்போ பதிவும் போடலை. இப்போ பதிவில் நீங்க கொடுத்ததையும் சேர்த்துட்டேன் பாருங்க... மீண்டும் நன்றி :)

  ReplyDelete
 21. வாங்க நாகு. நன்றி, வாழ்த்துகளுக்கும், தொடர்ந்து படிப்பதா சொன்னதுக்கும் :) உங்களுக்கும் வாழ்த்துகள்.

  //அஹிம்சை பட்டும் அந்த ரகமோ?//

  உங்க பிள்ளை சரியாதான் கேட்டிருக்கார். ஆனால் அஹிம்சை பட்டு அந்த வகை இல்லைன்னுதான் நினைக்கிறேன்.

  (கீதாம்மாவுக்கு தெரிஞ்சிருக்கும். சொல்லுங்கம்மா :)

  ReplyDelete
 22. வாங்க கோபி. நன்றி :)

  //பதிவு எப்படி போட போறேன்னு நினைக்கும் போது தான் என்னோட வயிறும் சேர்ந்து கலக்குது ;)))//

  பதிவிலயும் கலக்கிருவீங்கன்னு தெரியும் :) மீண்டும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 23. வாங்க மீனா.

  //அழகான பட்டாம்பூச்சி படத்துக்கு ஏத்தா மாதிரி அழகான பதிவு.//

  மிக்க நன்றி. நீங்களும் தமிழ்லயும் கலக்க ஆரம்பிச்சிட்டீங்க. அதுவும் நகைச்சுவை சூப்பர்! நிறைய எழுதுங்க (ஊருக்கு போகத்தான் இன்னும் நாள் இருக்கே :)

  ReplyDelete
 24. //வாழ்த்துக்கள் கவிக்கோ கவிக்கா. :)//

  வாங்க மௌலி. மிக்க நன்றி :)

  ReplyDelete
 25. ஜெஸ்வந்தியின் ‘மெளன ராகங்கள்’ உங்கள் மூலமே அறிமுகம். மிக்க நன்றி. மிக அருமையாக எழுதுகிறார்கள். அவருக்கு மறுபடி என் வாழ்த்துக்கள்!

  //இப்போ பதிவில் நீங்க கொடுத்ததையும் சேர்த்துட்டேன் பாருங்க... //

  பார்த்தேன், நன்றி:)!

  ReplyDelete
 26. //ஜெஸ்வந்தியின் ‘மெளன ராகங்கள்’ உங்கள் மூலமே அறிமுகம். மிக்க நன்றி. மிக அருமையாக எழுதுகிறார்கள்//

  உங்களுக்கும் அவர் எழுத்து பிடித்திருப்பது பற்றி மகிழ்ச்சி :) மீள்வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 27. வாழ்த்துகள் அக்கா. பூக்கள் வலைப்பூக்கள் பட்டாம்பூச்சின்னு எழுதி கவிஞர்ன்னு காட்டிட்டீங்க. :-)

  ReplyDelete
 28. வருக குமரா.

  //வாழ்த்துகள் அக்கா. பூக்கள் வலைப்பூக்கள் பட்டாம்பூச்சின்னு எழுதி கவிஞர்ன்னு காட்டிட்டீங்க. :-)//

  :))) மிக்க நன்றி.

  ReplyDelete
 29. :))

  கோபி லிங்க்லேர்ந்து வந்தேன். வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 30. வாங்க சென்ஷி.

  //கோபி லிங்க்லேர்ந்து வந்தேன். வாழ்த்துக்கள்!!//

  முதல் வருகைன்னு நினைக்கிறேன், வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி :) கோபிக்கும் :)

  ReplyDelete
 31. வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 32. நானும் பட்டாம்பூச்சி பறக்க விட்டுட்டேன்!

  http://blog.richmondtamilsangam.org/2009/06/blog-post_6832.html

  விருதுக்கு நன்றி, கவிநயா!

  ReplyDelete
 33. வாங்க நாகு.

  //நானும் பட்டாம்பூச்சி பறக்க விட்டுட்டேன்!//

  சுறுசுறுப்பா பறக்க விட்டதுக்கு நன்றி. சீக்கிரமே வந்து பி/ப/டிக்கறேன்:)

  ReplyDelete
 34. பட்டாம் பரிசு விருது பெற்று அதை பகிர்ந்தளித்த கவிநயாவிற்க்கும், புதிதாக விருது பெற்ற கோபிநாத், ஜெஸ்வந்தி, நாகு, ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 35. வாருங்கள் கைலாஷி. விருதளித்தமைக்கும் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி :)

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)