இதயத்தில் இருள் வந்து
அப்பிக் கொண்ட கணத்திலோ,
இறுகி விட்ட இருளை
கீறிக்கூடப் பார்க்க முடியாமல்
கதிரவனே கைவிட்டு விட்ட நிமிடத்திலோ,
பாதை நெடுகப் பதுங்கியிருப்பவை
புதைகுழிகள் மட்டுமே என
உணர்ந்து கொண்ட சமயத்திலோ,
அல்லது...
மயானத்துப் பேய்கள்
மனசுக்குள்ளேயே குடிபெயர்ந்து விட்ட
அந்த தருணத்திலோதான்...
காணாமல் போயிருக்க வேண்டும்.
கண்டுபிடித்தால்...
நீங்களே வைத்துக் கொள்ளலாம்
பரிசாக -
என் புன்னகையை.
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/jamesmillerdigital/996919196/sizes/m/
/இதயத்தில் இருள் வந்து
ReplyDeleteஅப்பிக் கொண்ட கணத்திலோ,
இறுகி விட்ட இருளை
கீறிக்கூடப் பார்க்க முடியாமல்
கதிரவனே கைவிட்டு விட்ட நிமிடத்திலோ,/
/மயானத்துப் பேய்கள்
மனசுக்குள்ளேயே குடிபெயர்ந்து விட்ட
அந்த தருணத்திலோதான்...
காணாமல் போயிருக்க வேண்டும்.
கண்டுபிடித்தால்...
நீங்களே வைத்துக் கொள்ளலாம்
பரிசாக -
என் புன்னகையை./
புதுமை கவிதையை மட்டுமல்ல
பரிசுப் பொருளும் தான்
வாழ்த்துகள்
நயமான கவிதை.
ReplyDeleteவார்த்தைகள் மிக அருமையாக வந்து அமர்ந்திருக்கின்றன கவிக்கா...நான் படித்தவரையில் இது உங்களது மாஸ்டர் பீஸ் என்றே தோன்றுகிறது.
ReplyDeleteபடித்து முடித்ததும் என்னோட புன்னகையை காணவில்லை!
ReplyDeleteகவிதை நன்றாக வந்திருக்கு.
காணாமல் தானே போயிருக்கிறது?..
ReplyDeleteகவலையே வேண்டாம்; நினைத்தால் நிமிட நேரத்தில் மீண்டும் அதை மீட்டு விடலாம். இது எவ்வளவோ பரவாயில்லை!
சிலரது முகம் எந்நேரமும் கடுகடுவென்று இருக்கும்; புன்னைகையோடு வாழ்க்கையையும் சேர்த்துத் தொலைத்தவர்கள் இவர்கள்.
சில பாக்கியசாலிகளுக்கு புன்னகை
உதட்டை விட்டுப் பிரிய மனமில்லாமல் நிரந்தரமாக தங்கியிருக்கும்.. இவர்கள் வாழ்க்கையில் சுலபத்தில் வெற்றியை அடையும் வித்தையைக் கற்றவர்கள்!
நல்ல கவிதை சகோதரி..
ReplyDeleteஇதழ்களுக்கு எழுதலாமே ?
யாரோலோ எதனாலோ எப்படியோ எங்கேயோ தொலைந்தது கிடைக்கையில் அதைக் கண்டு பிடித்தவருக்கே பரிசளிப்பதை சொல்லண்ணோ துயரின் விரக்தியோ என்று எண்ணிய மூளையை இல்லை எனத் திட்டியது என் மனது. ’கண்டெடுக்கப் படுவது புன்னகையாயிருக்க அது வாழ்வில் இனித் தரப் போவது வசந்தம் என்றிருக்க அதைக் கண்டெடுப்பவருக்கு அன்பளிப்பாய் தருவதுதானே முறை?’ கேட்கிறது என் மனது. விடை கட்டாயம் தர வேண்டுமென்பதில்லை. விரும்பினால் தாருங்கள். வெகு அருமையான வாசிப்பனுபவத்தைத் தந்தமைக்கு என் நன்றிகள்.
ReplyDelete//புதுமை கவிதையை மட்டுமல்ல
ReplyDeleteபரிசுப் பொருளும் தான்//
வாங்க திகழ்மிளிர். மிக்க நன்றி.
//நயமான கவிதை.//
ReplyDeleteவருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி ஜமால்.
//வார்த்தைகள் மிக அருமையாக வந்து அமர்ந்திருக்கின்றன கவிக்கா...நான் படித்தவரையில் இது உங்களது மாஸ்டர் பீஸ் என்றே தோன்றுகிறது.//
ReplyDeleteஅப்படியா சொல்றீங்க. மிக்க நன்றி மௌலி :)
//படித்து முடித்ததும் என்னோட புன்னகையை காணவில்லை!//
ReplyDeleteஅச்சச்சோ, மன்னிச்சுக்கோங்க கோபி. திரும்ப கண்டு பிடிச்சிட்டீங்கதானே :)
வருகைக்கும் ரசனைக்கும் நன்றிப்பா.
வாங்க ஜீவி ஐயா.
ReplyDelete//நினைத்தால் நிமிட நேரத்தில் மீண்டும் அதை மீட்டு விடலாம்.//
அந்த நினைப்பை வர வைக்கவே மிகுந்த பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.
//நல்ல கவிதை சகோதரி..//
ReplyDeleteநன்றி ரிஷு.
//இதழ்களுக்கு எழுதலாமே ?//
ஹ்ம்... நீங்களும் பல முறை சொல்லிட்டீங்க. என்னுடைய சோம்பேறித்தனம் தான் முதல் காரணம். நிச்சயம் முயற்சிக்கிறேன்.
//யாரோலோ எதனாலோ எப்படியோ எங்கேயோ தொலைந்தது கிடைக்கையில் அதைக் கண்டு பிடித்தவருக்கே பரிசளிப்பதை சொல்லண்ணோ துயரின் விரக்தியோ என்று எண்ணிய மூளையை இல்லை எனத் திட்டியது என் மனது. ’கண்டெடுக்கப் படுவது புன்னகையாயிருக்க அது வாழ்வில் இனித் தரப் போவது வசந்தம் என்றிருக்க அதைக் கண்டெடுப்பவருக்கு அன்பளிப்பாய் தருவதுதானே முறை?’ கேட்கிறது என் மனது. விடை கட்டாயம் தர வேண்டுமென்பதில்லை. விரும்பினால் தாருங்கள். வெகு அருமையான வாசிப்பனுபவத்தைத் தந்தமைக்கு என் நன்றிகள்.//
ReplyDeleteஅப்பாடி! ஆழமா யோசிச்சிருக்கீங்க ராமலக்ஷ்மி :) கிடைப்பதற்கு அரிய பொருளாக் கொடுத்தால்தானே அதை 'பரிசு'ன்னு சொல்லலாம்? அந்த வகையில் உங்களுக்குத் தோன்றிய முதல் காரணமே கவிதை எழுதுகையில் மனசில் இருந்தது. உங்க பின்னூட்டத்தைப் படித்த பின் உங்க இரண்டாவது காரணம் கூட நல்லாயிருக்கேன்னு பட்டது :) வசந்தத்தை விரும்பாதவர் யார்? வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
முகத்தின் முகவரியே புன்னகைதான் .அதுவே தொலைந்துபோனால்........ படத்திற்கேற்ற கவிதையா? இல்லை கவிதைக்கேற்ற படமா? இரண்டுமே அருமை.
ReplyDelete//முகத்தின் முகவரியே புன்னகைதான் .அதுவே தொலைந்துபோனால்........//
ReplyDeleteவேறென்ன? துயரம்தான் :)
//படத்திற்கேற்ற கவிதையா? இல்லை கவிதைக்கேற்ற படமா? இரண்டுமே அருமை.//
கவிதை எழுதின பிறகு படம் தேடுவதே என் வழக்கம். இரண்டும் பொருத்தம்னு நீங்க சொன்னதும் மகிழ்ச்சி :) (ஓரிரண்டு முறை படத்திற்கும் கவிதை எழுதியிருக்கேன். அப்புறமா இடறேன் :)
வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி தி.ரா.ச. ஐயா.
// யாரோலோ எதனாலோ எப்படியோ எங்கேயோ தொலைந்தது கிடைக்கையில் அதைக் கண்டு பிடித்தவருக்கே பரிசளிப்பதை சொல்லண்ணோ துயரின் விரக்தியோ என்று எண்ணிய மூளையை இல்லை எனத் திட்டியது என் மனது
ReplyDelete//
மேடம் ராமலக்ஷ்மி சொல்வதில் பொருள் நிறையவே இருக்கிறது.
நகையைத் தொலைத்துவிட்டால், கண்டுபிடித்தவருக்கு அந்த நகையைக் கொடுத்து
விடலாம் ( நகை கவரிங் என்றால் !)
புன்னகையைத் தொலைத்துவிடின் ? அது பிறந்த இடமும் மலர்ந்த மனமும் மணமும் சேர்ந்தல்லவா தொலைந்து போனது !!
சில விஷயங்கள் தொலைந்துபோய் திருமபவந்துவிட்டால், ஏனடா வந்தது என்றிருக்கும். இது அது போன்ற விஷயமா என்ன ?
ஆக, பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். வேண்டுமென்றால், உங்கள் செல்வங்களுக்கு அதை உயில் எழுதி வையுங்கள்.
ரொம்ப வருஷங்களுக்கு முன், ( எனக்கு அப்ப 7 அல்லது 8 வயது இருக்கும் )
என் அம்மாவிடம் சொன்னேன். அம்மா ஒரு புதிர். என்றேன். என்ன என்றாள். உன்னால்
ஒன்று முடியும். என்னால் முடியாது. அது என்ன சொல் என்றேன்.
தெரியல்லையே என்று புன்னகை பூத்தார்கள்.
அதுதாம்மா, அந்த உன்னோட சிரிப்பு .. என்னால முடியலையே அம்மா என்றேன்.
சுப்பு ரத்தினம்.
http://menakasury.blogspot.com
வாங்க சுப்பு தாத்தா.
ReplyDelete//தெரியல்லையே என்று புன்னகை பூத்தார்கள்.
அதுதாம்மா, அந்த உன்னோட சிரிப்பு .. என்னால முடியலையே அம்மா என்றேன்.//
ஆஹா, அந்த வயசிலயேவா? ரொம்ப சமர்த்துப் பிள்ளையா இருந்திருப்பீங்கன்னு தெரியுது :) நீங்க சொல்வதில் உண்மை இருக்கு. முயற்சிக்கிறேன். மிக்க நன்றி தாத்தா.
கலக்கல் கவிநயா.. :)
ReplyDelete//கலக்கல் கவிநயா.. :)//
ReplyDeleteவாங்க சரவணகுமார். மிக்க நன்றி :)
இப்படி ஒரு நல்ல இதயத்தைக் கண்டு பிடித்தால் திருப்பிக்
ReplyDeleteகொடுக்கவா போறோம் அது தான் பின் தொடர்கின்றேன் :)
வாழ்த்துக்கள் தோழி சிறப்பான கவிதை வரிக்கு .