நவராத்திரி சிறப்பு பதிவு. துர்க்கை அம்மாவை நல்லா வணங்கிக்கோங்க!
வீரதுர்க்கை வடிவெடுத்து வினைகள் தீர்க்க வந்தவள்!
தீரவேங்கை யாகி வந்து அசுரர்களை வென்றவள்!
கோபத்திலே தகதகத்து நெருப்பைப் போல ஜொலிப்பவள்!
வேகத்திலே சுழன்றடித்து காற்றைக் கூட ஜெயிப்பவள்!
மோகத்திலே உழலும் மனதின் மாயம் நீக்குகின்றவள்!
சோகத்திலே துவளும் போது தோள் கொடுக்கும் தாயவள்!
தேவருக்கு அருள வென்றே தோற்றம் கொண்டு வந்தவள்!
மூவருக்கும் முதல்வியாகி முத் தொழில்கள் புரிபவள்!
காளி யாகி வந்த போதும் கனிந்த அன்பால் குளிர்ந்தவள்!
நீலியாகி சூலியாகி தீமை எரிக்கும் தீ அவள்!
ஆயுதங்கள் ஏந்திக் கொண்டு அச்சம் நீக்க வந்தவள்!
பாயும் கங்கை சூடு வோனை பாதம் சூடி கொண்டவள்!
நேசம் கொண்ட நெஞ்சுக்குள்ளே தேசு கொண் டொளிர்பவள்!
வீசும் தென்ற லன்பில் எந்தன் மாசு நீக்கு கின்றவள்!
சரண மென்று பதம் பணிந்தால் சஞ்சலங்கள் தீர்ப்பவள்!
வரணு மென்று தொழுது நின்றால் வாசல் வந்து காப்பவள்!
ஏழுலகும் ஆளுகின்ற எங்கள் அன்னை வாழ்கவே!
எட்டுத் திக்கும் ஏத்தும் எங்கள் அன்னை அடிகள் பணிகவே!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://i151.photobucket.com/albums/s140/sidatha/durga_QA91_l.jpg

ஏழுலகம் ஆளுகின்ற எங்கள் அன்னை
ReplyDeleteதுர்கா தேவி
தற்சமயம்
http://ceebrospark.blogspot.com
வீட்டில் தாங்கள் இயற்றிய பாடலை
மோகனத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறாள்.
அவளை தரிசிக்க
வரவும்.
தாத்தா பாட்டி
தஞ்சை.
//வரணு மென்று தொழுது நின்றால் வாசல் வந்து காப்பவள்!//
ReplyDeleteஎல்லோரும் தொழுது நிற்க வந்ததுங்கள் பாடல். சிறப்பான //சிறப்பு பதிவு// !
நன்றி கவிநயா!
//ஏழுலகும் ஆளுகின்ற எங்கள் அன்னை வாழ்கவே!
ReplyDeleteஎட்டுத் திக்கும் ஏத்தும் எங்கள் அன்னை அடிகள் பணிகவே!//
நாங்களும் உங்களுடன் சேர்ந்து கோரஸாகச் சொல்கிறோம்... எல்லா கண்ணிகளும் சரமாகக் கோர்க்கப்பட்டு,
விண்மீன்களாக சந்தங்கள் வானில் ஜொலிப்புடன் வீசப்பட்டு.. ஓ,, எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை.. ஒரே வரி: மகாகவி பாரதியை நினைவு படுத்திய கவிதை..
வாழ்த்துக்கள்..
நல்லா இருக்கு அக்கா!
ReplyDeleteஏழுலகு
, எட்டு திக்கு ஆள்பவளுக்கு
ஒன்பது நாள் திருவிழா!
கேட்டு ரசிச்சு பின்னூட்டமும் இட்டிருந்தேன் சுப்பு தாத்தா, பாட்டி. மிக்க நன்றி.
ReplyDeleteவருக ராமலக்ஷ்மி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவருக ஜீவி ஐயா. வழக்கம் போல கவிதையாக இருக்கிறது உங்கள் பின்னூட்டம்.
ReplyDelete//மகாகவி பாரதியை நினைவு படுத்திய கவிதை..//
அச்சோ! இவ்ளோ பெரிய பாராட்டா. எழுத வைத்த அவளுக்கே சமர்ப்பணம். மிக்க நன்றி உங்களுக்கு.
நல்லா சொன்னீங்க ஜீவா. மிக்க நன்றி.
ReplyDelete//சரண மென்று பதம் பணிந்தால் சஞ்சலங்கள் தீர்ப்பவள்!//
ReplyDeleteநான் உணர்ந்தது உங்களுக்கு வார்த்தையாக வந்திருக்கு அக்கா :)
ஸ்ரீ துர்கா மாதாகீ ஜெ!
மிக்க மகிழ்ச்சி மௌலி. மிக்க நன்றியும்.
ReplyDeleteWhat a wonderful song! Really enjoyed it. May the Goddess bless you with more inspiration to write such wonderful songs...
ReplyDeleteThe next time I find myself with a few extra minutes of free time, I am setting this to music. Will forward you a copy of the file when I am done.
Once again, wonderful song.
Sorry to be the only one posting comments in English...I just can't type fast in Tamil.
வாங்க மீனா. ஆங்கிலம் பத்தி ப்ரச்சனையில்லை. உங்கள இந்தப் பக்கம் பார்த்தது மிக்க மகிழ்ச்சி :) நீங்க சொன்ன மாதிரி அவள் அருள் இருந்தால் எழுதிக்கிட்டே இருக்கலாம் :) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
ReplyDelete"பாயும் கங்கை சூடு வோனை பாதம் சூடி கொண்டவள் !"
ReplyDeleteதலைப்பே எவ்வளவு மிரட்டலாக இருக்கிறது. :)நல்ல கவிதை கவிநயா.
//தலைப்பே எவ்வளவு மிரட்டலாக இருக்கிறது. :)//
ReplyDeleteஹா ஹா :D பயந்தே போய்ட்டீங்களா. அதான் தாமதம் போல :)
நன்றி ரமேஷ்!
எனக்கும் மகாகவியை நினைவு படுத்தின இந்த வார்த்தைகள். :-)
ReplyDeleteகங்காதரனை இவள் தன் பாதத்தில் சூடிக் கொண்டாளா கங்காதரனின் பாதத்தை இவள் சூடிக் கொண்டாளா? இரண்டுமே சரி தான். :-)
வருக குமரா. மிக்க நன்றி :)
ReplyDelete