Monday, October 27, 2014

ஆறுபடை வீடும், ஆறாதாரமும்


இந்து மதத்தில் சிறப்பாக விளங்கும் எந்த ஸ்லோகத்தை எடுத்துக் கொண்டாலும், அவை உட்பொருளாகக் கொண்டு பேசுவது, யோகம் அல்லது சாதனை நெறிகள் பற்றியே. இறைவனுடன் சேர்ந்தொளிரும் உயர் முக்தி நிலையை அடைவதுதானே பிறவியின் நோக்கமே.

விநாயகர் அகவலை எடுத்துக் கொண்டால் "மூலாதாரத்து மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்தே", என்று குண்டலினி யோகத்தைப் பற்றிப் பேசுவதாகக் கூறுவார்கள்.

கந்தர் சஷ்டிக் கவசமும் மந்த்ர தந்த்ரம் பற்றியது என்பார்கள்.

ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமமோ நிர்க்குண மற்றும் சகுண உபாசனைகள் பற்றிப் பேசுவதாம்.

சௌந்தர்யலஹரி சாக்தர்களுக்கான ஸ்ரீவித்யை பற்றிப் புகல்வது.

மாணிக்கவாசகரின் திருவாசகமும் யோகானுபவத்தைப் பற்றியதே என்பர் பெரியோர்.

திருமூலர் பாடிய அனைத்தும் யோக நெறியைப் பின்பற்றியதே.

இவை போல இன்னும் பல உண்டு. இவற்றின் உட்பொருளைக் குருவருளால் அன்றி அறிய இயலாது.

ஆறு படை வீடுகளையும் இவ்வாறே ஆறு ஆதாரங்களுக்கு ஒப்பிட்டுக் கூறுகிறார், வாரியார் சுவாமிகள்:

திருப்பரங்குன்றம் - மூலாதாரம்
திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம்
திருவாவினன்குடி – மணிபூரகம்
திருவேரகம் – அநாகதம்
திருத்தணி – விசுத்தி
பழமுதிர்சோலை - ஆக்ஞை

என்று குறிப்பிடுகிறார்.


வெற்றிவேல் முருகனுக்கு... அரோஹரா!

அனைவருக்கும் இனிய கந்த சஷ்டித் திருநாள் நல்வாழ்த்துகள்! அப்படியே முருகனருளில் இட்டிருக்கும் பாடலையும் பார்த்து, பாடி, முருகனருள் பெறுங்கள்!


அன்புடன்
கவிநயா


படத்திற்கு நன்றி: http://www.chenaitamilulaa.net/t46597-108