Monday, July 7, 2014

சாப்பிடத் தெரியுமா உங்களுக்கு?


(பகுதி 2)

இதைப் பற்றி முன்பு ஒரு முறை பேசியிருக்கோம்... அப்ப படிக்காதவங்க இப்ப போய் படிச்சிட்டு வாங்க!

சமீபத்தில் திரு.சுகிசிவம் அவர்கள் இதைப் பற்றிப் பேசியதைக் கேட்டேன். அவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலுடன்:


உணவில் மூன்று விதங்கள் இருக்காம்.

முதலாவதா, வாயிலேயே உமிழ் நீரோட உதவியாலேயே செரிமானம் ஆகக் கூடிய உணவு வகைகள்.  பழங்கள் இந்த வகையைச் சேர்ந்ததாம்.

இரண்டாவதா, இரைப்பையில் போய் சீரணமாகிற உணவு வகைகள். பெரும்பாலான சமைத்த உணவுகள் இந்த வகையைச் சேர்ந்ததாம்.

மூன்றாவதா, சிறுகுடலால் மட்டுமே சீரணிக்கக் கூடிய உணவு வகைகள். எண்ணெயில் பொறித்தெடுக்கிற உணவுகள் (வடை போன்றவை) இந்த வகையைச் சேர்ந்ததாம்.

பழங்களை எப்பவும் சாப்பாட்டுக்கு அப்புறம் சாப்பிடற வழக்கம் இருக்கு. ஆனால் பழங்களை சாப்பாட்டுக்கு முன்னாடிதான் சாப்பிடணுமாம். ஏன்னா அவை வாயிலேயே சீரணிக்கப்படறதோட, அவற்றோட அமிலத் தன்மை, சாப்பாட்டை சீரணிக்கவும் உதவியா இருக்குமாம்.

இரப்பையால சீரணிக்கக் கூடிய உணவுகள் இரைப்பையை அடைஞ்சதும், உணவை அரைச்சு சீரணிக்க வசதியா இரைப்பை மேலேயும் கீழேயும் மூடிக்குமாம்.  அதனால அது மூடின பிறகு வடை போன்ற உணவுகளைச் சாப்பிட்டா அது இரைப்பை வழியா சிறு குடலுக்குப் போக முடியாம, ஏன், இரைப்பைக்கே போக முடியாம, சுத்திக்கிட்டிருக்குமாம். அதனாலதான் நெஞ்சு எரிச்சல் போன்ற கோளாறுகள் ஏற்படுது.

இந்த மாதிரி எதை, எப்ப, எப்படிச், சாப்பிடணும்னு தெரியாததாலதான் பலவிதமான வயிறு சம்பந்தமான தொந்தரவுகள் வருது.

அவர் சொன்ன இன்னொரு விஷயம், சாப்பிடறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாலும், பின்னாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது. அப்படிக் குடிச்சா அந்தத் தண்ணீர் வயிற்றுக்குள்ள போயி, உணவைச் செரிக்க வைக்கக் கூடிய அமிலத்தை நீர்த்துப் போக வெச்சிடுமாம். அதனாலேயும் சீரணக் கோளாறுகள் ஏற்படுமாம். அப்படி இருக்கும் போது சாப்பிடும் போது குடிக்கலாமோ? ம்ஹும்… குடிக்கவே கூடாது.

இரவு சாப்பாட்டை சூரிய அஸ்தமனத்துக்கு முன்னேயே சாப்பிட்டுடணும். அல்லது படுக்கைக்குப் போறதுக்குக் குறைஞ்சது இரண்டு மணி நேரம் முந்தி சாப்பிட்டுடணும்.

உணவை நல்லா மென்னு சாப்பிடணும். வாயிலேயே கூழாகிற வரைக்கும் மெல்லணும். அப்படிச் செய்தா உணவைச் சீரணிக்க வயிறு ரொம்பக் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேணாம்… அதனால வயிறு ரொம்பத் தொந்தரவு குடுக்காம, அமைதியா நமக்கு ஒத்துழைக்கும். (இது எங்கேயோ படிச்சது.)

எல்லோரும் நல்லா சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்தோட இருக்கணும்!


அன்புடன்
கவிநயா


Picture credit: http://www.ariix.com/depression-can-alter-eating-habits-how-to-eat-right/

8 comments:

  1. வணக்கம்
    பழங்களை சாப்பாட்டுக்கு முன்னாடிதான் சாப்பிடணுமாம். ஏன்னா அவை வாயிலேயே சீரணிக்கப்படறதோட, அவற்றோட அமிலத் தன்மை, சாப்பாட்டை சீரணிக்கவும் உதவியா இருக்குமாம்.
    நல்ல விடயத்தை பகிர்ந்துள்ளிர்கள் நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. இவைகெல்லாம் தெரியாமப் போச்சே... ஹிஹி...!

    ReplyDelete
    Replies
    1. நெசமாத்தானா? நன்றி தனபாலன்!

      Delete
  3. மிகவும் நல்ல பகிர்வு...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)