நம்பிக்கை வைத்தோரைத் தும்பிக்கையான் காப்பான்.
கற்பகக் கணபதி பாடலை அற்புதமாகப் பாடித் தந்த சுப்பு தாத்தாவிற்கு நன்றிகள் பல! நீங்களும் கேட்டு, பாடி, விக்ன விநாயகனின் அருளைப் பெறுங்கள்!
பெரும்பானை வயிற்றுக்குள் பேருலகை வைத்திருக்கும்
பெருமகனே போற்றி போற்றி!
வரு வினையைத் தடுக்கின்ற வந்த
வினை தீர்க்கின்ற
வல்லபனே போற்றி போற்றி!
சிவனாரின் மகனாகிச் சேந்தனுடன்
சேர்ந்துலகைக்
காப்பவனே போற்றி போற்றி!
சிந்தையிலே வைத்தவர்க்கு சிந்திக்கா
தருள் புரியும்
செல்வனே போற்றி போற்றி!
சுழி போட்டுத் தொடங்கி விட்டால்
தடையேதும் வாராமல்
செயல்முடிப்பாய் போற்றி போற்றி!
வழி கேட்டு உன்னடிகள் பணிந்து
விட்டால் வழித்துணையாய்
வந்திடுவாய் போற்றி போற்றி!
மழுவேந்தி மாந்தர் தமைக் காக்கின்ற
மூஞ்சூறு
வாகனனே போற்றி போற்றி!
பழுவெல்லாம் தந்து விட்டால் பரிந்தெம்மைக்
காக்கின்ற
புண்ணியனே போற்றி போற்றி!
அகத்தியருக் கருள்செய்த அத்திமுக
நாயகனே
ஆனைமுகா போற்றி போற்றி!
அருகம்புல் பூசையிலும் அகம்மகிழ்ந்து
அருள்செய்யும்
எளியவனே போற்றி போற்றி!
வியாசருக் கருளிடவே ஒருதந்தம்
உடைத்தவனே
உத்தமனே போற்றி போற்றி!
மாசற்ற மன்னவனே மஞ்சளிலும் இருப்பவனே
மூத்தவனே போற்றி போற்றி!
கந்தனுக் குதவிடவே களிறாக வந்தவனே
கற்பகமே போற்றி போற்றி!
சங்கரனின் புத்திரனே சங்கடங்கள்
களைபவனே
சுந்தரனே போற்றி போற்றி!
நம்பிக்கு அருள் செய்த தும்பிக்கை
நாதனே
ஐங்கரனே போற்றி போற்றி!
நம்பிக்கை வைத்துன்னைப் பணிகின்றோம்
தூயவனே
திருவடிகள் போற்றி போற்றி!
--கவிநயா
நன்றி: வல்லமை
அழகான பாடலுக்கு நன்றி கவிநயா. தங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
ReplyDeleteபிள்ளையார் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்...பாடல் ரொம்ப நல்லாயிருக்கு ;)
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி ராமலக்ஷ்மி, திரு.தனபாலன், மற்றும் கோபி :)
ReplyDeleteஅவ்வை முன் தோன்றி உன் அகவலை எழுத வைத்த
ReplyDeleteதெய்வமே !போற்றி,போற்றி!
கொவ்வைச் செவ்விதழாளாம் காமாக்ஷியின் செல்லக்
குழந்தையே !போற்றி,போற்றி!
அழகா இருக்கு. நன்றி லலிதாம்மா!
Delete