Friday, September 18, 2009

தங்கப் பெண்ணே... தங்கப் பெண்ணே...!

மகளுக்கும் ஒரு தாலாட்டு வேணும்னு கீதாம்மா சொன்னப்போ இந்த கவிதைதான் நினைவு வந்தது - இது தாலாட்டு இல்லைன்னாலுமே...

'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா', 'சின்னஞ்சிறு பெண்போலே', இந்த பாடல்களையெல்லாம் ரசிக்காதவங்களே இருக்க முடியாது. புலியை பார்த்து பூனை சூடு போட்டுகிட்ட கதையா அன்னை பராசக்தியை குட்டிப் பொண்ணா நினைச்சு எழுத எனக்கு வந்த ஆசையின் விளைவுதான் இது. நவராத்திரிக்கும் பொருத்தம்தானே? :)

***

பட்டுப்பா வாடை கட்டி
பச்ச மரு தாணி வச்சு
பட்டுக் கன்னம் பளபளங்க
பச் சரிசிப் பல்லு மின்ன

சின்னப் பிறை நெத்தியிலே
செந் தூரப் பொட் டொளிர
வண்ணப் பிஞ்சுப் பாதத்திலே
வெள்ளி மணிக் கொலு சொலிக்க

சுத்திஜொ லிக்கும் கண்ணு
சூரி யனத் தோற்கடிக்க
கத்திக் கல கலக்கும்
கைவளையல் கதைகள் பேச

தத்தி நடை பழகும்
தங்கப் பெண்ணே தங்கப் பெண்ணே
கொத்திக்கொத்தி என் மனசை
கொள்ளை கொண்ட சின்னப் பெண்ணே

மோகமுல்லைச் சிரிப்பைக் கண்டு
சோகந் தொலைஞ்சு போச்சுதடி
பால்நிலவின் குளிர்ச்சி யிலே
பார மெல்லாங் கரைஞ்சதடி

உன்னழகைப் பாக்கையிலே
உள்ளம் உருகிப் போகுதடி
வாரி உன்னைக் கட்டிக்கத்தான்
வாஞ்சை மீற ஏங்குதடி!

--கவிநயா

***

அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்!

27 comments:

 1. நவராத்திரி வாழ்த்துக்கள் கவி..உங்க கவிதை வரிகள் சூப்பரோ சூப்பர்..  அன்புடன்,

  அம்மு.

  ReplyDelete
 2. நவராத்திரியின் தொடக்க நாளில் நல்ல தாலாட்டுப் பாடல் சிறுமி பராசக்திக்கு! மனம் மகிழ ரசித்தேன் கவிநயா!

  ReplyDelete
 3. க‌விதை ந‌ல்லா இருக்கு கவிந‌‌யா

  இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. மீனாக்ஷிக்குத் தானே, வெகு பொருத்தமான கவிதை தான். ஆனால் நான் கேட்டது சின்னப் பெண் குழந்தைகளுக்கான தாலாட்டுப் பாடல். நவராத்திரிக்கும், அம்மனுக்கும் பொருத்தம் தான் :)))))))))))

  அதென்னமோ எல்லாருமே ஆண் குழந்தைகளையே தாலாட்டில் வைச்சுப் பாடறாங்கப்பா! பாடறது பெண்தான் என்றாலும் பெண் குழந்தைங்களும் தூங்க வேண்டாமா? :))))))))) பெண்கள் எல்லாம் போர்க்கொடி தூக்குங்கப்பா! :)))))))))

  ReplyDelete
 5. தங்கப் பொண்ணு பாட்டு சிம்ப்பிள் & சூப்பர்-க்கா!
  இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!

  //உன்னழகைப் பாக்கையிலே
  உள்ளம் உருகிப் போகுதடி
  வாரி உன்னைக் கட்டிக்கத்தான்
  வாஞ்சை மீற ஏங்குதடி//

  கன்னத்தில் முத்தமிட்டால்...உள்ளம் தான் கள் வெறி கொள்ளுதடி எஃபெக்ட்டா? :))

  ReplyDelete
 6. //அதென்னமோ எல்லாருமே ஆண் குழந்தைகளையே தாலாட்டில் வைச்சுப் பாடறாங்கப்பா! பாடறது பெண்தான் என்றாலும் பெண் குழந்தைங்களும் தூங்க வேண்டாமா? :)))))))))//

  கீதாம்மா...
  சும்மா போர்க்கொடி தூக்கணும்-ன்னு எல்லாம் போர்க்கொடி தூக்கினா, பொற்கொடி கிட்ட போட்டுக் கொடுத்துருவேன்! :)
  அதான் பாரதிதாசன் பெண் குழந்தை தாலாட்டு இருக்கு-ல்ல? அப்பறம் என்னவாம்?

  ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ!
  ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ!

  சோலை மலரே! சுவர்ணத்தின் வார்ப்படமே!
  காலைஇளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே!

  வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
  பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே!

  மின்னல் ஒளியே, விலைமதியா ரத்தினமே!
  கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே!

  வெண்முகத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும்
  கண்கள் உறங்கு! கனியே உறங்கிடுவாய்!

  ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ!
  ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ!

  ReplyDelete
 7. இன்னும் பெண்பாற் பிள்ளைத் தமிழ் நிறைய இருக்கு! அதில் உள்ள தாலாட்டு எல்லாம் பொதுவாத் தான் இருக்கும்! சாமீப் பேரு எல்லாம் அம்புட்டு இராது! அதுவும் பெண் குழந்தை தாலாட்டு தான்!

  அதுக்கும் மேல, நாட்டுப்புற பாடல்கள்! எவ்ளோ பெண் குழந்தை தாலாட்டு கொட்டிக் கிடக்கு!

  கொல்லை யிலே தென்னை வச்சி, குருத்தோலைப் பெட்டி செஞ்சி
  சீனி போட்டுத் நீ திங்க, செல்லமாய்ப் பிறந்தவளோ!

  மரக்கிளையில் தொட்டில் கட்ட, மாமனவன் மெட்டு கட்ட
  அரண்மனைய விட்டு வந்த, அல்லி ராணி கண்ணுறங்கு!

  இந்தாங்க சுட்டி! http://pillaitamil.blogspot.com/2007/06/blog-post.html

  ReplyDelete
 8. நல்லாருக்கு கவிநயாக்கா!
  பெண்குழந்தைக்கான தாலாட்டுன்னும்போது, முன்னே, ஆராரோ ஆரிரோ பாட்டை பெண்குழந்தைக்குமாக மாற்றி எழுதினது ஞாபகம் வந்தது!
  சுட்டி:
  http://jeevagv.blogspot.com/2008/10/blog-post_12.html

  ReplyDelete
 9. நல்லா இருக்கு கவிக்கா.

  ReplyDelete
 10. //சுத்திஜொ லிக்கும் கண்ணு
  சூரி யனத் தோற்கடிக்க
  கத்திக் கல கலக்கும்
  கைவளையல் கதைகள் பேச//

  யம்மாடியோவ்...

  தாலாட்டு வரிகள் அழகு....

  ReplyDelete
 11. பட்டுக்கன்னம் பளபளக்க
  பச்சரிசிப்பல்லும் மின்ன
  தொட்டுச் சொன்ன வார்த்தையிலே
  சின்னஞ்சிறு பெண்ணாகி என்
  எண்ணம் நிறைந்து நின்றாள்!
  பாலா என அழைத்தேன்!
  பாலகியாய் வந்தாள்!
  வாலைக்குமரிஎன்றேன் எந்தன்
  வாட்டத்தைப்போக்க வந்தாள்!
  பாட்டை ரசித்து நின்றேன்
  பாராட்ட வார்த்தை இன்றி!

  ReplyDelete
 12. //நவராத்திரி வாழ்த்துக்கள் கவி..உங்க கவிதை வரிகள் சூப்பரோ சூப்பர்..//

  மிக்க நன்றி அம்மு!

  ReplyDelete
 13. //நவராத்திரியின் தொடக்க நாளில் நல்ல தாலாட்டுப் பாடல் சிறுமி பராசக்திக்கு! மனம் மகிழ ரசித்தேன் கவிநயா!//

  தாலாட்டு இல்லைப்பா, ச்சும்மா பாட்டுதான் :) ரசனைக்கு நன்றி ராமலக்ஷ்மி!

  ReplyDelete
 14. //அருமை ;)//

  நன்றி கோபி :)

  ReplyDelete
 15. //க‌விதை ந‌ல்லா இருக்கு கவிந‌‌யா//

  மிக்க நன்றி ஆர்.கோபி! (இன்னொரு கோபி இருக்கறதால :)

  ReplyDelete
 16. //ஆனால் நான் கேட்டது சின்னப் பெண் குழந்தைகளுக்கான தாலாட்டுப் பாடல்.//

  வருது, வருது, வந்துகிட்டே இருக்கு :) அதுக்கு முன்னாடி இது சின்னூண்டு முன்னோடி :)

  வருகைக்கு நன்றி கீதாம்மா.

  ReplyDelete
 17. //தங்கப் பொண்ணு பாட்டு சிம்ப்பிள் & சூப்பர்-க்கா!//

  உங்களை இங்கே பார்ப்பதில் மகிழ்ச்சி கண்ணா :) மிக்க நன்றி.

  //கன்னத்தில் முத்தமிட்டால்...உள்ளம் தான் கள் வெறி கொள்ளுதடி எஃபெக்ட்டா? :))//

  அதே அதே! :)

  ReplyDelete
 18. பெண்குழந்தைக்கான பாட்டுகளை அள்ளி விட்டதற்கு ரொம்ப நன்றி கண்ணா! நீங்க மாதவிப் பந்தலை நிறைவு செய்துட்டதாக (இப்போதைக்கு) சொன்னாலும், பிள்ளைத்தமிழை அவசியம் தொடர வேண்டுமென்பது என் தனிப்பட்ட விருப்பம் + வேண்டுகோள். (முன்னேயே சொல்லியிருக்கேன், அப்போ உங்களுக்கு நேரம் இருக்கலை).

  ReplyDelete
 19. //நல்லாருக்கு கவிநயாக்கா!//

  ரொம்ப நன்றி ஜீவா!

  //பெண்குழந்தைக்கான தாலாட்டுன்னும்போது, முன்னே, ஆராரோ ஆரிரோ பாட்டை பெண்குழந்தைக்குமாக மாற்றி எழுதினது ஞாபகம் வந்தது!//

  ஆமாம், நினைவிருக்கு. வெகு அழகான தாலாட்டு ஜீவா. சுட்டி கொடுத்ததுக்கும் நன்றி.

  ReplyDelete
 20. //நல்லா இருக்கு கவிக்கா.//

  நன்றி குமரா :)

  ReplyDelete
 21. //யம்மாடியோவ்...//

  எனக்குமே பிடித்த வரிகளை எடுத்துக் காட்டியிருக்கீங்க. ரசனைக்கு மிக்க நன்றி வசந்த்! :)

  ReplyDelete
 22. //சின்னஞ்சிறு பெண்ணாகி என்
  எண்ணம் நிறைந்து நின்றாள்!
  பாலா என அழைத்தேன்!
  பாலகியாய் வந்தாள்!
  வாலைக்குமரிஎன்றேன் எந்தன்
  வாட்டத்தைப்போக்க வந்தாள்!
  பாட்டை ரசித்து நின்றேன்
  பாராட்ட வார்த்தை இன்றி!//

  ஆஹா, சூப்பர் :) ரொம்ப அழகா எழுதறீங்க கிருஷ்ணமூர்த்தி சார்! நீங்க ஏன் கவிதைன்னு தனியா எழுதறதில்லைன்னு தெரியலை, எழுதினா எங்களுக்கெல்லாம் அருமையான கவிதைகள் வாசிக்க கிடைக்கும் :)

  வருகைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 23. 1980 களில் புதுக்கவிதைன் தாக்கம் அதிகமாக இருந்த நாட்களில் கவிதையென்று கிறுக்கித் தள்ளியதும், கிறுக்குத்தனமாய் இருந்தும் உண்டு. யாப்பை முறையாகப் பயிலாமல் நேர் நேர் நிறை நேர் என்ற கட்டமைப்பை வைத்து மட்டும் எழுதி அது தான் கவிதை என்று மயங்கி இருந்த நாட்களும் உண்டு அம்மா!

  ஏதோ ஒரு கட்டத்தில், இந்த மாதிரி கிறுக்குத்தனத்திலிருந்தும், மயக்கங்களில் இருந்தும் விடுபடும் நேரமும் வருகிறதல்லவா?

  எனக்கு அது நேர்ந்தது:-))

  ReplyDelete
 24. வாங்க கிருஷ்ணமூர்த்தி சார். இலக்கணமெல்லாம் தெரியாமல்தான் நானும் எழுதிக்கிட்டிருக்கேன் :) கவிதைன்னு நினைக்கிறதோடல்லாமல் தொடரணும்னும் விரும்பறேன்... எனக்கு கலைய வேண்டிய மயக்கங்கள் நிறையவே இருக்கு! :) மீள்வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete
 25. எனக்குமே பிடித்த வரிகளை எடுத்துக் காட்டியிருக்கீங்க. மிக்க நன்றி

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும், ரசித்தமைக்கும் மிக்க நன்றி திரு.முத்து!

   Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)