Sunday, December 4, 2011

நட்புக்கோர் நல்வணக்கம்!


ட்பு என்பது எவ்வளவு அழகான விஷயம்! இரத்த சம்பந்தம் இல்லாமல், ஏன், எந்த சம்பந்தமுமே இல்லாமல், எங்கோ பிறந்து, முற்றிலும் வெவ்வேறான சூழலில் வளர்ந்து, ஏதோ ஓரிடத்தில் சந்தர்ப்ப வசத்தால் சந்தித்து, எத்தனையோ விஷயங்களில் வேறுபட்டாலும், உள்ளத்தாலும் உணர்வாலும் ஒன்றுபட்ட மனமொத்த நட்பு அமையும் போது, அதன் சுகமே தனிதான்!

நட்பு, அழகான, மணம் மிகுந்த மலர் போன்றது;
மனமெல்லாம் மணம் பரப்புவதால்!
நட்பு, இதமான இசையைப் போன்றது;
இதயம் முழுக்க அமைதியைத் தருவதால்!
நட்பு, அன்பான தாய் மடி போன்றது;
தட்டிக் கொடுத்து தாலாட்டும் பாடுவதால்!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றான் ஒரு கவிஞன். நட்பு அமைவதும் கூட இறைவன் கொடுத்த வரம்தான் என்று தோன்றுகிறது.

யாரிடத்திலும் சுலபத்தில் நெருங்கிப் பழகி விடாத சுபாவம் எனக்கு. கலகலப்பாகப் பேசவும், பழகவும் தெரியாது. அப்படிப்பட்ட எனக்கே வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நெருங்கிய தோழி என்று சொல்லிக் கொள்ள ஓரிருவராவது இருந்திருக்கிறார்கள் என்றால், அது இறையருள் இல்லாமல் வேறென்ன?

நாடு விட்டு நாடு வந்த இடத்திலும் எனக்கு இப்படிப்பட்ட , விரல் விட்டு எண்ணக் கூடிய நட்பு கிடைத்திருக்கிறது. தெரிந்தவர்கள், உறவுகள், என்று யாரும் இல்லாமல் இங்கே வந்த போது கூடவே வந்த தனிமை, இத்தகைய புது உறவு கிடைத்தவுடன், என்னை அம்போவென்று விட்டுவிட்டு ஓடியே போய் விட்டது!

[“A true friend knows your weaknesses but shows you your strengths; feels your fears but fortifies your faith; sees your anxieties but frees your spirit; recognizes your disabilities but emphasizes your possibilities.”

-William Arthur Ward]

என் கஷ்டம், தன் கஷ்டம், என் மகிழ்ச்சி, தன் மகிழ்ச்சி, என்று உரிமையுடன் பங்கிட்டுக் கொள்ளும் நட்பு. என்ன நிகழ்வாக இருந்தாலும், என்னைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து மகாராணி போல தாங்கும் அன்பு. ஊஹூம்… மகாராணி போலக் கூட இல்லை, மிகவும் செல்லமான குழந்தையைப் போல!

இத்தனை அன்புக்கும் எனக்கு தகுதி இருக்கிறதா, அதற்காக நான் என்ன செய்திருக்கிறேன், என்று அடிக்கடி தோன்றும். அந்த அளவிற்கு நானும் என் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறேனா என்று தெரியவும் இல்லை. அந்த நட்பைப் பற்றி, அந்த பலன் எதிர்பாராத வெள்ளை உள்ளங்கள் பற்றி, அந்த உள்ளங்களில் விளையும் கொள்ளை அன்பைப் பற்றி, ஓரிரு வார்த்தைகளாவது எழுத வேண்டும் என்று தோன்றியதன் விளைவே இந்தப் பதிவு.

என் தோழிகள், இல்லையில்லை… என்னுடைய உடன் பிறவா சகோதரிகள், வாழ்வில் எல்லா நலங்களையும் பெற்று மிகச் சிறப்பான வாழ்வு வாழ வேண்டுமென அந்த இறைவனை மனமார வேண்டிக் கொள்கிறேன்.

(*touch wood* - கண் படாமல் இருக்க! :)

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

அன்புடன்
கவிநயா18 comments:

 1. படமும் வாசகமும் உங்களின் அழகான பகிர்வும் நட்புக்கு சிறப்பு சேர்க்கின்றன.

  நட்பை எந்தக் கண்ணாலும் ஒண்ணும் செய்ய முடியாது:)!

  ReplyDelete
 2. Ellorukkum ithupol nanbargal kidaikkamaattaargal.Ithu iraivanin Arule!
  Natarajan.

  ReplyDelete
 3. வாழ்த்துகள்; உங்களுக்கும் உங்கள் தோழிகளுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள் தோழிகள் கிட்டேப் பேசுவீங்க தானே? :)))))

  நேற்று நிகழ்ச்சி நன்றாக நடைபெற்றிருக்கும் என நம்புகிறேன். உங்களுக்கு மடல் கொடுக்க நினைத்துக்கணினிக்கு வந்தேன். உங்கள் பதிவு கண்களில் பட்டது. :))))))

  ReplyDelete
 4. //தெரிந்தவர்கள், உறவுகள், என்று யாரும் இல்லாமல் இங்கே வந்த போது கூடவே வந்த தனிமை, இத்தகைய புது உறவு கிடைத்தவுடன், என்னை அம்போவென்று விட்டுவிட்டு ஓடியே போய் விட்டது!//

  கிளாஸ்; அருமை; பிரமாதம்-- இன்னும் என்ன என்னவெல்லாமோ!

  ReplyDelete
 5. பதிவு உண்மையான உள்ளத்துணர்வை அழகாக எதிரொலிக்கிறது ;அருமை


  படத்து வாசகத்தில் என்னுடைய favourite line:" to care without expectation"

  ReplyDelete
 6. //படமும் வாசகமும் உங்களின் அழகான பகிர்வும் நட்புக்கு சிறப்பு சேர்க்கின்றன.//

  நன்றி ராமலக்ஷ்மி :) எனக்கு கிடைத்த உங்களைப் போன்ற பதிவுலக நட்புகளும் அவ்வாறே.

  //நட்பை எந்தக் கண்ணாலும் ஒண்ணும் செய்ய முடியாது:)!//

  நன்றாகச் சொன்னீர்கள் :)

  ReplyDelete
 7. //Ellorukkum ithupol nanbargal kidaikkamaattaargal.Ithu iraivanin Arule!//

  உண்மைதான். நன்றி திரு.நடராஜன் :)

  ReplyDelete
 8. //வாழ்த்துகள்; உங்களுக்கும் உங்கள் தோழிகளுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள் தோழிகள் கிட்டேப் பேசுவீங்க தானே? :)))))//

  விட மாட்டீங்களே! :) ஆமாம் கீதாம்மா, (அவங்க) காதில் இரத்தம் வர வரை பேசுவேன் :)

  //நேற்று நிகழ்ச்சி நன்றாக நடைபெற்றிருக்கும் என நம்புகிறேன். உங்களுக்கு மடல் கொடுக்க நினைத்துக்கணினிக்கு வந்தேன். உங்கள் பதிவு கண்களில் பட்டது. :))))))//

  நன்றாக நடந்தது கீதாம்மா. மிகவும் நன்றி.

  ReplyDelete
 9. //கிளாஸ்; அருமை; பிரமாதம்-- இன்னும் என்ன என்னவெல்லாமோ!//

  வாங்க ஜீவி ஐயா :) மிக்க நன்றி.

  ReplyDelete
 10. //பதிவு உண்மையான உள்ளத்துணர்வை அழகாக எதிரொலிக்கிறது ;அருமை//

  அதுதான் முக்கியம். நன்றி லலிதாம்மா.

  //படத்து வாசகத்தில் என்னுடைய favourite line:" to care without expectation"//

  எனக்கும் :)

  ReplyDelete
 11. 'நட்பு' என்னும் 'உப்பு'
  இருந்தால்தான் வாழ்க்கை ருசிக்கும்.

  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 12. //'நட்பு' என்னும் 'உப்பு'
  இருந்தால்தான் வாழ்க்கை ருசிக்கும்.//

  உண்மைதான் தோழன். அழகாகச் சொன்னீர்கள். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 13. நல்ல பதிவு ! இனி வரும் நாட்களில் உங்கள் தோழிகளை பற்றியும் தொடர்ந்து எழுதுவீர்களா?

  ReplyDelete
 14. வாங்க தானைத் தலைவி :)

  //இனி வரும் நாட்களில் உங்கள் தோழிகளை பற்றியும் தொடர்ந்து எழுதுவீர்களா?//

  இந்தப் பதிவே திட்டமிட்டு எழுதலை. உணர்வு பூர்வமாக உடனே எழுதியது... அதனால் உங்க கேள்விக்கு பதில் சொல்லத் தெரியலை...

  இதையும் பாருங்க, உங்களுக்கு பிடிச்சாலும் பிடிக்கும்:

  http://kavinaya.blogspot.com/2009/06/blog-post_21.html

  தக்குடு கல்யாணத்துக்கு நீங்க போனதா கேள்விப்பட்டேன். புகைப்படத்தில்தான் சிக்கலை போல; பார்க்க முடியலை :(

  வருகைக்கு மிக்க நன்றி :)

  ReplyDelete
 15. நான் கல்யாணத்துக்கு போய், அதை பற்றி பதிவு போட்டு, எல்லாம் ஆகிவிட்டது.

  என்ன புகைபடத்தில் சிக்கலையா....!? அப்போ எங்களை படம்பிடித்தார்களே....அது எங்க போச்சு...!?

  தக்குடு கல்யாண ரகளைகளை தங்கமணி மற்றும் எல்.கே வின் தளங்களிலும் பார்க்கலாம். நிஜத்தைவிட தங்கமணியின் கற்பனை அற்புதமாக இருக்கின்றது.

  ReplyDelete
 16. உங்க பதிவை இப்பதான் பார்த்தேன். அ.த. பதிவும் முன்னாடியே பார்த்தேன் :)

  //என்ன புகைபடத்தில் சிக்கலையா....!? அப்போ எங்களை படம்பிடித்தார்களே....அது எங்க போச்சு...!? //

  கல்யாண ஆல்பம் இன்னும் பார்க்கலைப்பா. TRC சாருடையதுதான் பார்த்தேன். அதனால கவலைப்படாதீங்க! அங்கேதான் இருப்பீங்க :)

  ReplyDelete
 17. // நட்பு அமைவதும் கூட இறைவன் கொடுத்த வரம்தான் என்று தோன்றுகிறது.//
  absolutely!
  இதெல்லாம் முன்னேயே படிச்சு கமென்ட் போட வந்தா கணினி/ இணையம் விடலை.
  மிக தாமதமான கமெண்டுகள்! :-))

  ReplyDelete
 18. நீங்க எப்ப வந்தாலும் மகிழ்ச்சியே! வருகைக்கு மிக்க நன்றி திவாஜி.

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)