உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Monday, October 7, 2013
நவ துர்கா தேவியர் - சபரி துர்க்கை, ஸ்கந்த மாதா
விஜயனுக் கருள அரனும் வேடுவனாக
வந்த போதிலே தானும் வேட்டுவச்சியாய்
மரவுரி தரித்து மண்ணில் வந்த துர்க்கையே
வந்த துர்க்கையே அருள் தந்த துர்க்கையே
சபரி துர்க்கையே அமரர் வணங்கும் துர்க்கையே
தாபம் நீக்கியே எம்மைக் காக்கும் துர்க்கையே
அறுமுக வேலன் அவன் அன்னை யாவனவள்
அக்கினி போலத் துன்பம் சுட்டெரிப்பவள்
நட ராஜன் ஆடிய புஜங்க தாண்டவத்திலே
நன்மையின் உருவாய் அவதரித்தவள்
ஸ்கந்த மாதாவாய் ஆன துர்க்கையே
தேவிதுர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
--கவிநயா
(தொடரும்)
துர்க்காஷ்டகம்: http://www.youtube.com/watch?v=X1qVil87_m4
படத்துக்கு நன்றி: http://nadababa.com/gallery/devas/nava_durga/
ஒவ்வொரு நாளும் அன்னயை வணங்கும் உன்னதப் பதிவுகள். சாயங்கால தீபம் ஏற்றும் பொழுதினில் தினமும் (தெரிந்த அளவில்) பாடி வணங்குகிறேன். பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி!
ReplyDeleteபாடி வணங்கியதற்கு உங்களுக்குத்தான் மிக்க நன்றி பார்வதி!
Deleteமிக்க நன்றி தனபாலன்.
ReplyDelete