உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Sunday, March 11, 2012
செல்லக் குட்டிப் பாப்பா!
குட்டிக் செல்லப் பாப்பா பார்!
கட்டி வெல்லப் பாப்பா பார்!
கிட்டச் சென்று தொட்டுப் பார்!
பட்டுப் போல இருக்கும் பார்!
கையைக் காலை உதைக்கும் பார்!
காந்தம் போல இழுக்கும் பார்!
பையப் பையப் பேசும் பார்!
பொக்கை வாயில் சிரிக்கும் பார்!
கையில் விரலைக் கொடுத்துப் பார்!
கெட்டி யாகப் பற்றும் பார்!
கொஞ்சிக் கொஞ்சிப் பேசிப் பார்!
குதூ கலமாய்ச் சிரிக்கும் பார்!
பசி எடுத்தால் அழுதிடும்!
உறக்கம் வந்தால் உறங்கிடும்!
கவலை ஏதும் இன்றியே
களிப் புடனே வாழ்ந்திடும்!
குழந்தை போல நீ இரு!
குறைகள் இன்றி வாழ்ந்திடு!
வெள்ளை உள்ளம் கொண்டிடு!
அள்ளி அன்பைத் தந்திடு!
--கவிநயா
நன்றி: வல்லமை
படத்துக்கு நன்றி: http://www.happybabysite.com/
அருமையான கவிதை
ReplyDeleteஅழகான பாப்பா. அழகான கவிதை!
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteபடமும் பதிவும் மிக மிக அருமை
மலரையும் குழந்தைகளையும்
வார்த்தை ஜாலங்களாய்விட
இதைப்போல் மிக மிக எளிமையான வார்த்தைகளால்
கொஞ்சத் துவங்குகையில் மனம்
குழந்தையாகிப் போவதும்
குதூகலமடைவதும் சத்தியம்
இப்படி எழுவதுதான் மிக மிகக் கடினம்
காரணம் இதற்கு பாண்டித்தியத்தைவிட
மனதில் அன்பு ஊற்று பெருக வேண்டும்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
sooooo sweeeeeeet!
ReplyDelete"குழந்தைபோல நீ இரு ".ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜி அடிக்கடி சொல்வதை நினைவு படுத்துகிற வரி!
நல்லாயிருக்கு அக்கா ;-)
ReplyDeleteAsathittenga ponga!Kadaisi naangu varigal miga arumai!
ReplyDeleteNatarajan.
'பார்,பார்!' என்று சொல்லி, பலதடவைகள் பார்த்திருந்தாலும்--சரியாகப் பார்க்காத, சட்டென்று பார்வையில் படாத விஷயங்களைச் சொல்லி, கடைசியில் வாழ்க்கையில் எப்படி இருந்திட வேண்டும் என்பதையும் சொல்லி விட்டீர்கள்!
ReplyDeleteகுழந்தைகளுக்கான கவிதையோ?.. இல்லை என்றே தோன்றுகிறது; இல்லை, சிறார்களுக்கானதோ?.. அதுவும் இல்லை என்றே நினைப்பு..
அப்படியானால், பெரியவர்களுக்கானதோ?.. கடைசிக் கண்ணி வரிகளைப் பார்த்தால், 'ஆமாம்' என்றே சொல்லத் தோன்றுகிறது!
எளிமையான, இயல்பான பாடலைப் பாடும் பொழுது மனம் எக்காளிக்கவும் செய்கிறது. வாழ்த்துக்கள், கவிநயா!
//அருமையான கவிதை//
ReplyDeleteமிக்க நன்றி தியாவின் பேனா!
//அழகான பாப்பா. அழகான கவிதை!//
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி :)
//மனம் கவர்ந்த பதிவு//
ReplyDeleteஉங்கள் பின்னூட்டம் உற்சாக டானிக்காக இருந்தது! மிக்க நன்றி ரமணி.
//sooooo sweeeeeeet!
ReplyDelete"குழந்தைபோல நீ இரு ".ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜி அடிக்கடி சொல்வதை நினைவு படுத்துகிற வரி!//
ஆம் லலிதாம்மா. எல்லா மகான்களும் அதேதான் சொல்கிறார்கள். நன்றி அம்மா.
//Asathittenga ponga!Kadaisi naangu varigal miga arumai!
ReplyDeleteNatarajan.//
மிக்க நன்றி திரு.நடராஜன்.
//அப்படியானால், பெரியவர்களுக்கானதோ?.. கடைசிக் கண்ணி வரிகளைப் பார்த்தால், 'ஆமாம்' என்றே சொல்லத் தோன்றுகிறது!
ReplyDeleteஎளிமையான, இயல்பான பாடலைப் பாடும் பொழுது மனம் எக்காளிக்கவும் செய்கிறது. வாழ்த்துக்கள், கவிநயா!//
நீங்கள் சொல்வது சரியே.
ஒவ்வொரு பாப்பா பாடலின் போதும் தவறாது வருகை தந்து ஊக்கமளிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஜீவி ஐயா.
//நல்லாயிருக்கு அக்கா ;-)//
ReplyDeleteநன்றி கோபி :)
பொதுவாக ஒன்று சொல்லத் தோன்றுகிறது - பாப்பா பாடல்களை விரும்பிப் படிக்கும் வளர்ந்த குழந்தைகளைப் பார்க்கையில் சந்தோஷமாக இருக்கிறது :) அனைவரின் வருகைக்கும், ரசனைக்கும், மிக்க நன்றி.
ReplyDeleteகுழந்தை போல நீ இரு!
ReplyDeleteகுறைகள் இன்றி வாழ்ந்திடு!
வெள்ளை உள்ளம் கொண்டிடு!
அள்ளி அன்பைத் தந்திடு!
குதூகலமான குழ்ந்தைப் பாடல்.. பாராட்டுக்கள்..
//இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteகுதூகலமான குழ்ந்தைப் பாடல்.. பாராட்டுக்கள்..//
மிகவும் நன்றி அம்மா!