Saturday, August 29, 2015

ஸ்ரீலக்ஷ்மி

ஸ்ரீ வரலக்ஷ்மி நோன்பு வாழ்த்துகள்!
செந்தாமரைப் பூவில் செஞ்சூரியன் போல
சிரிக்கின்ற ஸ்ரீதேவியே!
கண் தாமரை கொண்டு கார்மேக மேனியனைக்
கவர்கின்ற ஸ்ரீகாந்தையே!

பாருலகம் காக்கின்ற பாற்கடல் மாதவனின்
மார்புறையும் ஸ்ரீபத்மையே!
ஓர்நெல்லிக் கனிக்காகப் பொற்கனிகளைப் பொழிந்த
கருணைமிகு ஸ்ரீகமலையே!

ஒட்டிய தலை ஓட்டில் பிச்சையிட்டு சிவனைக்
காத்திட்ட ஸ்ரீபுத்தயே!
கட்டிய மன்னவனைக் கணமும் அகலாமலே
களிக்கின்ற ஸ்ரீசித்தயே!

ஓரெட்டு வடிவங்கள் கொண்டிந்த உலகிற்கு
ஒளியூட்டும் ஸ்ரீஸத்யையே!
ஈரெட்டு செல்வங்கள் ஈந்திடும் தேவியே
எமைக் காக்கும் ஸ்ரீலக்ஷ்மியே!



--கவிநயா

(ஒரு நாள் தாமதம். ஆனா அவ ஒண்ணும் சொல்ல மாட்டான்னு நம்பிக்கை)


7 comments:

  1. ஸ்ரீதேவியே. ஸ்ரீ காந்தையே, ஸ்ரீபத்மையே, ஸ்ரீகமலையே, ஸ்ரீபுத்தையே, ஸ்ரீசித்தையே, ஸ்ரீஸத்யையே, ஸ்ரீலஷ்மியே-- எத்தனை திருநாமங்கள் கொண்டு அன்னையை வேண்டினாலும், இன்னும் இன்னும் என்று திருநாமங்கள் மனசில் பின்னலிட அழைத்துக் களிக்க ஆனந்தப்படுகிறது நெஞ்சம்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஜீவி ஐயா! வருகைக்கு மிக்க நன்றி.

      Delete
  2. Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  3. கவிதை அருமை...
    தேவியை ஒருநாள் தாமதமாக நினைத்தாலும் என்றும் நம் நினைவில் இருப்பாள்...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரியே... மிக்க நன்றி குமார்.

      Delete
  4. வருகைக்கு நன்றி கீதாம்மா.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)